For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan 06 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் பண பரிவர்த்தனை செய்யாமல் இருந்தால் நல்லது...

இன்றைய நாள் மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 6ம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

Today Rasi Palan - 06 February 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 6ம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். உங்கள் கோபத்தை நீங்கள் கட்டுப்படுத்துவது நல்லது. நிதி நிலைமையில் பெரிய முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படும். புதிய வருமான ஆதரத்தைப் பெறலாம். இன்று அலுவலகத்தில் உங்கள் செயல்திறனில் முதலாளி மிகவும் மகிழ்ச்சி அடைவார். ஒரு பெரிய திட்டத்தில் பணியாற்ற உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு இன்று சாதகமா நாளாக இருக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். அலுவலகத்தில் பாதகமான சூழ்நிலையையும் சந்திக்க வேண்டி வரலாம். தொழிலதிபர்கள் இன்று ஒரு பெரிய ஒப்பந்தம் செய்யப் போகிறீர்கள் என்றால், சில காரணங்களால் உங்கள் ஒப்பந்தம் தடைப்படலாம். நிதி ரீதியாக, இன்று சாதாரண நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் நல்லிணக்கம் இருக்கும். துன்பத்தில், உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். உடல்நலக் குறைவு காரணமாக இன்று பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:05 மணி முதல் இரவு 9:00 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, அரசு ஊழியர்கள் இன்று சிறிய வேலையைக் கூட மிகவும் கவனமாக செய்ய வேண்டும். இல்லையெனில் உங்கள் கவனக்குறைவே உங்களை சிக்கலில் ஆழ்த்தும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகமாகும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அதிக அழுத்தத்தை உணரலாம். ஆன்லைனில் வணிகம் செய்தால், உங்கள் வேலையில் முன்னேற்றம் இருக்கும். பணத்தின் அடிப்படையில், இன்று கலவையான நாளாக இருக்கும். பொழுதுபோக்கிற்காக அதிக பணம் செலவழிப்பதைத் தவிர்க்கவும். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். இன்று ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:05 மணி முதல் இரவு 9:00 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் நல்ல ஒருங்கிணைப்பை வைத்திருக்கவும். சிறு விஷயங்களுக்கு சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் உதவியால் இன்று எந்த ஒரு கடினமான காரியத்தையும் மிக எளிதாக செய்து முடிக்க முடியும். வியாபாரிகள் இன்று வீணாக அலைய வேண்டி வரலாம். நாளின் இரண்டாம் பகுதியில் நீங்கள் சில பெரிய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:40 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்ததாக இருக்கும். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கலாம். உங்கள் வருமானத்தை மனதில் வைத்து செலவு செய்ய வேண்டும். வேலையில், எதிர்பார்த்த முடிவுகளைப் பெறலாம். வேலை அல்லது வியாபாரம் எதுவாக இருந்தாலும் உங்கள் கடின உழைப்பு வெற்றி பெறும். நாளின் இரண்டாம் பகுதியில், நீங்கள் ஒரு வழிபாட்டு தலத்திற்குச் செல்லும் வாய்ப்பைப் பெறலாம். இன்று மனதளவில் மிகவும் நன்றாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். வணிகர்கள் பெரிய லாபத்திற்காக சிறிய நன்மைகளைப் புறக்கணிப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சவாலான நாளாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் பெயரைக் கெடுக்க சிலர் முயற்சி செய்யலாம். நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். புத்திசாலித்தனமாக செலவு செய்தால், விரைவில் உங்கள் நிதி சிக்கல்களை சமாளிக்க முடியும். ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இன்று காரணமே இல்லாமல் உங்கள் மனம் மிகவும் வருத்தப்படலாம். எந்த வேலையிலும் நீங்கள் சரியாக உணர மாட்டீர்கள். தேவையற்ற கவலைகளில் இருந்து விலகி, முக்கியமான பணிகளில் கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். புத்திசாலித்தனமாக செலவு செய்தால் பிரச்சனையே இருக்காது. பெரிய நிதி பரிவர்த்தனைகள் செய்வதைத் தவிர்க்கவும். விரைவில் உங்களுக்கு முன்னேற்றத்திற்கான கதவுகள் திறக்கப்படும். குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்தவும். உங்கள் உடல்நிலை பலவீனமாக இருக்கலாம். எனவே, போதுமான ஓய்வை பெற வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 38

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் காலை 10:30 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, இன்று நீங்கள் சில முக்கியமான வேலைகளைச் செய்யப் போகிறீர்கள் என்றால், உங்கள் பாதையில் ஒரு பெரிய தடை ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உங்கள் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இன்று நீங்கள் உங்கள் எல்லா வேலைகளையும் முழு மூச்சுடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்களுக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இன்று நீங்கள் கடவுள் வழிபாட்டில் மிகவும் ஆர்வமாக இருப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களை அதிகமாக நம்ப வேண்டாம். உங்கள் வேலையை முடிக்க மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் இருந்தால் நல்லது. வியாபாரிகளுக்கு இன்று கலவையான லாபம் கிடைக்கும். உங்கள் வணிகத் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். பெற்றோரின் ஆசியைப் பெறுவீர்கள். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே, இன்று நீங்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். இன்று மாணவர்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். கல்வி தொடர்பான முயற்சிகளில் நீங்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இன்று பண பற்றாக்குறையால் உங்கள் கவலை சற்று அதிகரிக்கலாம். நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி விஷயத்தில் அவசரமோ, அலட்சியமோ வேண்டாம். அலுவலகத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். திடீரென்று உங்கள் மீது பணிச்சுமை அதிகரிக்கும். இருப்பினும், உங்களின் இந்த கடின உழைப்பு விரைவில் உங்களுக்கு பெரிய வெற்றியைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, உங்கள் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். உங்கள் கவனக்குறைவான அணுகுமுறை உங்கள் துணையின் உணர்வுகளைப் புண்படுத்தும். அன்புக்குரியவர்களிடமும் கவனம் செலுத்துவது நல்லது. இன்று அலுவலகத்தில் ஒரு முக்கியமான சந்திப்பு இருக்கலாம். உங்கள் கவனக்குறைவான போக்கு உங்கள் வேலைக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். தொழிலதிபர்கள் முன்னேற்றம் அடைவார்கள். குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ், உடைகள், உணவுப் பொருட்கள், தங்கம் மற்றும் வெள்ளி வியாபாரம் செய்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். உங்கள் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் இரவு 8:45 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே, வீட்டின் பெரியவர்களுடன் நல்லுறவை வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். நிதி நிலையைப் பொறுத்தவரை, இன்று ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் வருமானத்தை விட அதிகமாக செலவு செய்யாதீர்கள். வேலையில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைக்கும். இன்று நீண்ட நாட்களுக்குப் பிறகு, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கூடுதல் நேரத்தைச் செலவிட முடியும். உங்கள் துணையின் மனதை அறிய வாய்ப்பும் கிடைக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan - 06 February 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 06 February 2023 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Monday, February 6, 2023, 5:30 [IST]
Desktop Bottom Promotion