For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan 04 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்...

இன்றைய நாள் தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 4ம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

Today Rasi Palan - 04 February 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 4ம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு, இன்று உங்கள் வருமானத்தை மனதில் வைத்து செயல்பட்டால் நல்லது. தேவைக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். குடும்ப பிரச்சனையை அமைதியான மனதுடன் தீர்க்க முயற்சிக்கவும். கோபத்தையும் அவசரத்தையும் தவிர்ப்பது நல்லது. இன்று நீங்கள் அலுவலகத்தில் அனைத்து வேலைகளையும் விரைவாக முடிக்க வேண்டும். உங்களின் எந்த ஒரு வேலையும் நாளை என தள்ளி போடாதீர்கள். முதலாளியின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறலாம். இன்று உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:05 மணி முதல் இரவு 8:45 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, இன்று வேலை சம்பந்தமாக நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் தற்போதைய வேலையை மாற்ற நினைத்தால் இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் ஒரு முக்கியமான நிதி முடிவையும் எடுக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். இன்று உங்கள் அன்புக்குரியவர் மிகவும் நல்ல மனநிலையில் இருப்பார். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். எந்த வகையிலும் அலட்சியமாக இருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, சில நாட்களாக வேலைப்பளுவை உணர்ந்தால், உங்களுக்கு ஓய்வு மிகவும் தேவை. இதனால் நீங்கள் நன்றாக உணருவீர்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. இருப்பினும், பண விஷயத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். மூத்த உடன்பிறப்புடனான உறவு வலுப்பெறும். கண் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்ட நேரம் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினால், கண்களை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே, வாழ்க்கைத்துணையுடன் சிறு விஷயத்துக்காக வாக்குவாதம் ஏற்படலாம். உங்கள் துணையின் கட்டுப்பாடற்ற கோபம் இன்று உங்கள் வீட்டின் அமைதியைக் கெடுக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை வைத்துக் கொள்ள முயற்சிக்கவும். கோபமும் ஆணவமும் உங்கள் வேலையைப் பாதிக்கும். இது உங்கள் பெயரைக் கெட்டுவிடும். வணிகர்களின் புதிய ஒப்பந்தத்தில் சில தடைகள் இருக்கலாம். ஆரோக்கியமாக இருக்க, கோபம் மற்றும் மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:50 மணி முதல் இரவு 8:18 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, இன்று உங்கள் மனதில் இனம்புரியாத கவலைகள் இருக்கக்கூடும். கடந்த காலத்தை மறந்துவிட்டு புதியதை தொடங்க முயற்சி செய்யுங்கள். முடிந்தால், உங்கள் மனதை நெருக்கமான ஒருவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இன்று பண விஷயத்தில் கலவையான பலன்களைத் தரும். வருமானம் திருப்தி அளிக்கும். இருப்பினும், செலவுகளிலும் அதிகரிக்கலாம். அலுவலகத்தில் உங்களின் சில முக்கியமான வேலைகளில் தடைகள் ஏற்படலாம். இருப்பினும், உங்கள் பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும். நீங்கள் சமீபத்தில் ஒரு புதிய தொழிலைத் தொடங்கியிருந்தால், இன்று உங்களுக்கு சாதகமானதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 12:55 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, இன்றைய நாளின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்கள் மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். அலுவலகத்தில் உங்களின் கடின உழைப்பால் முதலாளி மிகவும் ஈர்க்கப்படுவார். விரைவில் அதற்கான சரியான பலனைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் இன்று பெரும் நிம்மதியைப் பெறலாம். லாபம் ஈட்ட நல்ல வாய்ப்பு கிடைக்கும். வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, பங்குச் சந்தையில் பணிபுரிபவர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். இன்று அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீர்கள். வாழ்க்கைத்துணையுடனான உறவில் இடைவெளி அதிகரிக்கும். இன்று நீங்கள் உணர்ச்சி ரீதியாக மிகவும் பலவீனமாக இருப்பீர்கள். இன்று பண விஷயத்தில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், டீ மற்றும் காபியை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இது தவிர நேரத்துக்குச் சாப்பிடுவதைப் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், மனதிற்கு பிடித்த வாழ்க்கைத் துணையை மணம் புரிய வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். நீங்கள் எந்த விலையுயர்ந்த பொருளையும் வாங்க விரும்பினால், அதற்கு இன்று ஏற்ற நாள் அல்ல. உங்கள் ரகசியங்களை அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில், நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். அரசு விதிகளை மீறுவதைத் தவிர்க்குமாறு வியாபாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சராசரியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 40

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இன்று வேலையில் மிகவும் சாதகமான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பெரும் முன்னேற்றம் அடையலாம். உங்கள் வணிகத்தை முன்னோக்கி கொண்டு செல்ல நினைத்தால், இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். நிலம், வீடு சம்பந்தமான நன்மைகளை பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வாழ்க்கைத்துணையின் அன்பான நடத்தை உங்களை சிறப்புற உணர வைக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே, உங்கள் நிதி நிலை வலுப்பெறும். உங்கள் நிதி முயற்சி அனைத்தும் வெற்றியடையும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு, நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். இன்று வணிகர்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். திடீரென்று நல்ல வாய்ப்பு கிடைக்கலாம். இன்று நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் காதல் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் துணையிடமிருந்து உணர்ச்சிப்பூர்வமான பரிசையும் பெறலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மதியம் 12:50 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, பழைய நீதிமன்ற வழக்கில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரலாம். இன்று உங்களுக்கு பெரிய நிம்மதி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சில புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்களால் முடிந்ததை செய்ய வேண்டும். வியாபாரிகள் இன்று பாதகமான சூழ்நிலையைச் சந்திக்க நேரிடும். நீங்கள் சட்டச் சிக்கலில் சிக்கிக் கொள்ளலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இருந்தாலும் ஆடம்பரமாக செலவு செய்யாமல் இருந்தால் நல்லது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று கலவையான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:55 மணி முதல் மாலை 6:50 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே, காதலைப் பொறுத்தவரை இன்று மிகவும் நல்ல நாளாக இருக்கும். உங்கள் திருமணம் பற்றி முடிவெடுக்கலாம். இன்று, திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். இன்று மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியின் சகவாசம் கிடைக்கும். தொழிலதிபர் கடின உழைப்பிற்கு நீண்ட காலமாக கிடைக்காத பலன்களை இன்று பெற்றிடலாம். இன்று பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 34

அதிர்ஷ்ட நேரம்: காலை 5:25 மணி முதல் மதியம் 2:15 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan - 04 February 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 04 February 2023 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Saturday, February 4, 2023, 5:25 [IST]
Desktop Bottom Promotion