Just In
- 2 hrs ago
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- 3 hrs ago
நல்லது என நீங்க நினைக்கும் இந்த உணவு முறை உங்க தூக்கத்தை சீர்குலைக்குமாம்...!
- 3 hrs ago
குழந்தைகளுக்கு ஒரு வயதாகும் வரை தெரியாம கூட இந்த ஆரோக்கிய உணவுகளை கொடுத்துறாதீங்க...!
- 4 hrs ago
ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை ஏன் தவிா்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்!
Don't Miss
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2020 திருவண்ணாமலை திருகார்த்திகை தீபம் எப்போது?
சிவபெருமானின் திருத்தலங்களில் 'நினைத்தாலே முக்தி தரும்' தலம் என்றால் அது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை என்று கூறியதுமே அனைவருக்கும் நினைவிற்கு வரக்கூடிய ஒரு விஷேசம், திருகார்த்திகை தீபம் தான். கார்த்திகை தீப தினத்தன்று, அருணாச்சல மலை மீது ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரள்வது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு பேருந்துகளும் எதுவும் இயக்கப்பட மாட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகார்த்திகை தீபம் ஏன் கொண்டாடப்படுகிறது?
‘அருணாச்சலா' என்ற வார்த்தைக்கு புனிதமான ஒளிப்பிழம்பு மலை என்ற பொருளும் உண்டு. சிவபெருமான் ஜோதி பிழம்பாக காட்சியளித்த நன்னாளை தான் திருகார்த்திகை தீபத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் திருவண்ணாமலை, அருணாச்சல மலை மீது தீபம் ஏற்றப்படும். இதன்மூலம் அகங்காரம், பொறாமை, ஆணவம் என்ற தீமைகள் நீங்கும் என்ற ஐதீகம் பரவலாக நம்பப்படுகிறது.
முக்தி தலமாக விளக்கும் திருவண்ணாமலையில், திருகார்த்திகை திருவிழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரமும், பொர்ணமி நாளும் நினையக்கூடிய நாளில் தான் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவானது, தமிழ் மாதம் கார்த்திகை 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. இந்த திருவிழாவானது, டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவடைகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருகார்த்திகை தீபம் நவம்பர் 29 ஆம் தேதி நடைபெறுகிறது.

கார்த்திகை தீபம்
கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியானது நவம்பர் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணி அளவில் திருக்கோவில் கருவறையின் முன்பு பரணி தீபம் ஏற்றப்படும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு பரணி தீபத்திற்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து மாலை ஆறு மணி அளவில் , சுமார்2,668 அடி உயரம் கொண்ட அருணாச்சல மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படும்.

கார்த்திகை பிரம்மோத்ஸவ திருவிழா
இந்த கார்த்திகை தீபம் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது, இது கார்த்திகை பிரம்மோத்ஸவம் திருவிழா என்று பரவலாக அறியப்படுகிறது.
முதல் நாள் (20/11/2020): கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. காலை மற்றும் இரவு அருணாச்சலேஸ்வரர் வெள்ளி வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. வீதி உலாவில் பஞ்சமூர்த்திகளும் உடன் அழைத்து செல்லபடுவர். கணபதி, முருகன், சண்டிகேஸ்வரர், அருணாச்சலேஸ்வரர் மற்றும் பார்வதி தேவி ஆகியோர் பஞ்சமூர்த்திகளாவர்.
2 ஆம் நாள் (21.11.2020): இந்திர வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா.
3 ஆம் நாள் (22.11.2020): 1008 சங்கு அபிஷேகம். காலை மற்றும் இரவில் பஞ்சமூர்த்திகள் சிம்ம வாகனத்தில் வீதிஉலா.
4 ஆம் நாள் (23.11.2020) - இரவு காமதேனு வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா. உடன் புனித மரம் கர்பவிருக்ஷமும் சிவபெருமான் அருகில் இடம் பெற்றிருக்கும்.
5 ஆம் நாள் (24.11.2020) - கலசா பூஜையைத் தொடங்கும், இரவில் 25 அடி உயர வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெறும்.

பரணி தீபம் எப்போது?
6 வது நாள் (25.11.2020) - காலை 63 நயன்மார்க்கள் வீதிஉலா. இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி தேரில் கோயிலை சுற்றி வீதி உலா வருவர்.
7 ஆம் நாள் (26.11.2020) - மகா ரதத்தில் பஞ்ச மூர்த்திகளின் வீதிஉலா. வலத்துடன் தொடங்குகிறது,
8 ஆம் நாள் (27.11.2020) - காலை பஞ்சமூர்த்திகள் பிரம்மாண்டமான குதிரை வாகனத்தில் வீதிஉலா மேற்கொள்வர். இரவு பகவான் ஸ்ரீ பிச்சாண்டவர் உற்சவம் நடைபெறும்.
9 ஆம் நாள் (28.11.2020) - பஞ்சமூர்த்திகள் கைலாச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.
10 ஆம் நாள் (29.11.2020) - அதிகாலை நான்கு மணியளவில் பரணி தீபம். பின்னர், சுப்ரமணிய சுவாமி பிரம்ம தீர்த்தவாரி விழா. மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள் தரிசனம், அர்த்தநாரீஸ்வரர் ஆலய தரிசனம் மற்றும் மகா தீபம் தரிசனம். இரவு தங்க ரிஷப வாகனத்தில் பெரிய நாயகர் பவனி.