Latest Updates
-
உங்க கிட்னி ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க -
2 ஆண்டுகள் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
காரைக்குடி சுரைக்காய் மசியல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
2 முருங்கைக்காய் இருந்தா.. இந்த பக்குவத்துல கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்தி-ன்னு எல்லாத்தும் அள்ளும்.. -
வெயில் கொடுமையா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… வீடு ஏசி இல்லாமலே ஜில்லுனு இருக்கும்! -
புதன் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இதயம் பெரிய ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் விசித்திரமான 5 அறிகுறிகளை பட்டியலிட்ட இதய நோய் நிபுணர்! -
வெயில் கொடுமையா? இந்த 3 வாஸ்து செடிகள் இருந்தா போதும், வீடு ஜில்லென்று மாறும்! -
தேர்தலும், அரசியல் கட்சிகளும் இல்லாத அதிசய நாடுகள் - இந்த நாடுகளில் ஏன் தேர்தல் நடத்தப்படுவதில்லை தெரியுமா? -
Tamil Nadu Election Results 2026: நடிகர்களின் கட்சிகளும்.. முதல் தேர்லில் பெற்ற வாக்குகளும்.. - ஓர் பார்வை
திருப்பதி ஏழுமலையான் லட்டு பிரசாதத்தின் பின்னணியில் இத்தனை சுவாரஸ்யங்களா?
ஆலய தரிசனம் மன அமைதியை தரும். அந்த ஆலயத்தில் கொடுக்கப்படும் பிரசாதம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். திருப்பதி என்றால் ஏழுமலையான் எப்படி நினைவுக்கு வருவாரோ அதேபோல அந்த ஆலயத்தில் கொடுக்கப்படும் லட்டு பிரசாதமும் அனைவரின் நினைவுக்கு வரும். ஒரு படத்தில் காமெடியாக லட்டுக்கு பதிலாக ஜாங்கிரி கொடுக்கிறார்கள் என்று விவேக்கிடம் சொல்வார் மயில்சாமி. இந்த லட்டு பிரசாதம் எப்போது இருந்து பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது. லட்டு பிரசாதத்தில் உள்ள பொருட்களால் ஏற்படும் நன்மைகள் என்ன இருக்கு என பல சுவாரஸ்ய தகவல்களை படிங்க.

திருப்பதி லட்டு நினைத்தாலே நெய் மணக்கும். ஒரு லட்டிலேயே நிறைய முந்திரி, உலர்திராட்சை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம், கல்கண்டு, ஏலக்காய், போன்றவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. சாப்பிட சாப்பிட தித்திப்பு அதிகமாகும். திருப்பதி வெங்கடாசலபதி தரிசனமும் நமக்கு நினைத்த நேரத்தில் கிடைத்து விடாது என்பது பெரியவர்களின் வாக்கு. அதேபோலத்தான் நமக்கு லட்டும் கிடைக்க வேண்டும் என்று அந்த வெங்கடாசலபதியே நினைத்தால் தான் கிடைக்கும். அவர் நினைத்தால், நாம் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் கூட ஏழுமலையான் பிரசாதமான லட்டும் வெங்கடாசலபதியின் தரிசனமும் உடனே கிடைக்கும் என்பது உறுதி.
நாம் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது, பிரசாதமாக அந்தந்த ஊர்களில் புகழ்பெற்ற உணவுப் பதார்த்தங்களை வாங்கி வருவது காலம் காலமா இருந்து வரும் பழக்கம். அவ்வாறு வாங்கி வரும் பிரசாதங்களை நாமும், நம்முடைய உறவினர்களுக்கும் கொடுப்பது வழக்கம். இதற்கு முக்கிய காரணம், பயபக்தி மட்டுமல்ல, அந்த ஊர்களின் ஞாபகார்த்தமாகவும், அந்தந்த ஊர்களில், அந்த கோவில்களுக்கு வரும் பக்தர்களை நம்பியே வாழ்க்கையை நடத்தும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யும் நல்லெண்ணமும் தான்.

கோவில் பிரசாதங்கள்
ஒவ்வொரு புகழ்பெற்ற பழமை வாய்ந்த கோவில்களிலும் பிரசாதமாக ஒவ்வொரு விதமான உணவுப் பண்டங்கள் பிரசாதமாக வழங்கப்படுவது மரபாக இருந்து வருகிறது. அந்த கோவிலைச் சுற்றி அமைந்திருக்கும் ஊர்களில் எந்த மாதிரியான விவசாயம் இருந்து வருகிறதோ, அதற்கேற்றவாறே, அந்த கோவிலிலும் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

சில்லு கருப்பட்டி
திருச்செந்தூர் என்றால், அந்த கோவில் அமைந்துள்ள ஊர் மற்றும் சுற்று வட்டாரங்களில் முக்கிய விவசாயமாக இருப்பது பனைத் தொழில் தான். பனைமரத்தில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டி, வெல்லம் போன்றவை தான் அந்தப் பகுதிகளில் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. அதனால் தான் அந்த கோவிலிக்கு சென்றுவிட்டு வருபவர்கள் அதிக அளவில், பனைவெல்லம், சில்லு கருப்பட்டி ஆகியவற்றை வாங்கி வருகிறார்கள்.

பழனி பஞ்சாமிர்தம்
அதே போல், பழனியை எடுத்துக்கொண்டால், அங்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. பஞ்சாமிர்தம் செய்ய தேவையான பொருட்கள் வாழைப்பழம், தேன், வெல்லம், தயிர், நெய் ஆகியவை தான். பழநி மலையின் சுற்று வட்டாரங்களில் அதிக அளவில் விளைவது, கரும்பு, வாழை, பால் பொருட்களான பால், தயிர் நெய் போன்றவை. இதன் காரணமாகவே பழநியாண்டவர் கோவிலில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பதி லட்டு
இந்து கோவில்களை எடுத்துக்கொண்டால், ஏதாவது முக்கிய விஷேச தினங்களில் மட்டுமே ஸ்பெஷலாக லட்டு, பொங்கல், புளியோதரை, ரவா கேசரி மற்றும் தயிர் சாதம் போன்றவை பக்தர்களால் வழங்கப்படுவது நடைமுறை. அந்த வகையில், திருப்பதியை எடுத்துக்கொண்டால் இங்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. வெங்கடாசலபதியை தரிசனம் செய்யும் அனைவருக்குமே லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக, இலவச தரிசனம் செய்பவர்களுக்கு ஒரு லட்டும், 300 ரூபாய் சிறப்பு தரிசனம் செய்பவர்களுக்கு இரண்டு லட்டும் வழங்கப்படுகிறது. கூடுதலாக தேவைப்படுபவர்கள் அதற்கு ஏற்றவாறு பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

மனோகரம் பிரசாதம்
திருப்பதி வெங்கடாசலபதியை தரிசித்துவிட்டு வருபவர்களுக்கு ஆரம்பத்தில் மனோகரம் தான் பிரசாதமாக வழங்கப்பட்டு வந்தது. காரணம், நீண்ட நாட்களுக்கு கெட்டுபோகாமல் இருக்கும் என்ற காரணத்தினால் தான் மலையேறி வரும் பக்தர்களுக்கு மனோகரம் பிரசாதமாக வழங்கப்பட்டு வந்தது.

லட்டு சுவாரஸ்யங்கள்
திருப்பதியில் லட்டு வழங்கும் முறையானது, 300 ஆண்டுகளுக்கு முன்பு தான் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன்பு வரையிலும், பிரசாதமாக, மற்ற இந்து கோவில்களில் வழங்கப்படுவது போலவே முறுக்கு, தயிர்சாதம், ஜாங்கிரி, போளி, அப்பம், அதிரசம், மனோகரம், பாயாசம், தோசை, ரவா கேசரி, போன்றவை தான் வழங்கப்பட்டு வந்தன.

திருக்கல்யாண உற்சவம்
1715ஆம் ஆண்டு ஆகஸ்டு 2ஆம் தேதி முதல் தான் பிரசாதமாக லட்டு வழங்கும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. அந்த காலகட்டத்தில் திருமலையில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்திற்கு பக்தர் ஒருவர் கொண்டந்தா லட்டு என்ற ஒரு பிரார்த்தனையை செய்திருந்தார். அதற்கான கட்டணத்தையும் திருமலை தேவஸ்தனத்தில் செலுத்தி ஆயிரம் கொண்டந்தா லட்டுகளை தயாரித்து, திருக்கல்யாண உற்சவ வைபத்தன்று வழங்கினார்.

லட்டு பிரசாதம்
இந்த நடைமுறை 1943ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. பின்னர் திருக்கல்யாண வைபத்தில் கலந்துகொள்ளாதவர்களும் லட்டுக்காக ஏங்க ஆரம்பித்தனர். காரணம் லட்டுவின் சுவை அப்படி இருக்கும். அதன் பின்னர் தேவசம் போர்டு அதிகாரிகள் கலந்து பேசி, ஒவ்வொரு சனிக்கிழமையும் வெங்கடாசலபதியை தரிசனம் செய்வோருக்கு லட்டு வழங்க முடிவெடுத்தனர். பின்னர் அதுவே அனைவருக்கும் வழங்கும் வழக்கமாக மாறிவிட்டது.

சுவையான லட்டு
தற்போது வழங்கப்பட்டு வரும் லட்டுகள், இரண்டு விதமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒன்று நாம் வழக்கமாக வாங்கும் 175 கிராம் எடையுள்ள லட்டு. மற்றொன்று தொடக்கத்தில் வழங்கப்பட்டு வந்த கொண்டந்தா லட்டு இதன் எடை சுமார் 750 கிராம் ஆகும். இந்த வகை லட்டுகள், பொதுவாக முக்கிய விழாக்களில் கலந்துகொள்ளும் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகை லட்டுகளில் வழக்கமாக வழங்கப்படும் லட்டுகளில் சேர்க்கப்படும் சேர்மங்களை விட அதிக அளவில், முந்திரி, பாதாம், குங்குமப்பூ, பச்சை கற்பூரம், ஏலக்காய், உலர்திராட்சை,போன்றவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெருமாள் மனசு வைக்கணும்
பொதுவாக திருப்பதி லட்டும், திருப்பதி வெங்கடாசலபதி தரிசனமும் நமக்கு நினைத்த நேரத்தில் கிடைத்து விடாது என்பது பெரியவர்களின் வாக்கு. நமக்கு லட்டும் தரிசனமும் கிடைக்க வேண்டும் என்று அந்த வெங்கடாசலபதியே நினைத்தால் தான் கிடைக்கும். அவர் நினைத்தால், நாம் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் கூட, லட்டும் திருப்பதி வெங்கடாசலபதியின் தரிசனமும் க்ஷண நேரத்தில் கிடைக்கும் என்பது உறுதி. இல்லாவிட்டால், வெங்கடாசலபதியின் சன்னிதானம் வரை சென்றுவிட்டு, பார்க்க முடியாமல் ஏமாற்றத்தோடும், வெறுங்கையுடன் வீடு திரும்பியவர்கள் எத்தனையோ பேர்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த, உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த திருப்பதி லட்டுக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது திருப்பதி வெங்கடாசலபதியின் பக்தர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

பிட்டு கொடுத்த மதுரையிலும் லட்டு
தற்போது, திருப்பதியை பின்பற்றி, மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்திலும் பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக லட்டு வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. திருப்பதியைப் போலவே, அதிக அளவில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக லட்டு வழங்கும் திட்டத்தை கோவில் நிர்வாகம் எடுத்துள்ளது. எம்பெருமான ஈசன், மதுரையில் நடத்திய திருவிளையாடல்களில் முக்கியமானது பிட்டுக்கு மண் சுமந்து சிலம்படி பட்ட வரலாற்று திருவிளையாடல். அதனை உணர்த்தும் விதமாகவே மீனாட்சியம்மன் ஆலயத்தில் பிட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதே சமயம், கோவில் நிர்வாகம் சார்பில் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் அதை விலை கொடுத்து வாங்க யாரும் ஆர்வம் காட்டாததால் தான் தற்போது இலவசமாக லட்டு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

லட்டு பெருசா இல்லையே
திருப்பதியைப் போலவே, மீனாட்சியம்மன் ஆலயத்திலும் லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வந்தாலும், அது திருப்பதி லட்டு போல் பெரிதாக இல்லை சிறியதாக உள்ளது என்பது பக்தர்களின் குறை. திருப்பதியில் வழங்கப்படும் லட்டின் எடையோ 175 கிராம். ஆனால் மீனாட்சியம்மன் ஆலயத்தில் வழங்கப்படும் லட்டின் எடையோ 30 கிராம் தான். அதே போல், மதுரை மீனாட்சியம்மன் என்றாலே, பிட்டு தான் பிரசாதம், இதென்ன வழக்கத்துக்கு மாறாக லட்டு என்று பக்தர்கள் சிலர் குறைபட்டு கொள்கின்றனர்.



Click it and Unblock the Notifications