Latest Updates
-
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்..
வாஸ்துப்படி, நைட் டைம்-ல இந்த விஷயங்களை செய்யாதீங்க.. இல்ல வீட்ல பணமே தங்காது...
வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவரது வீட்டில் செல்வம் பெருகவும், பணப் பிரச்சனை ஏதும் வராமல் இருக்கவும் சூரிய அஸ்தமனத்திற்கு பின் அல்லது இரவு வேளையில் செய்யக்கூடாத சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
செல்வத்தின் அதிபதியாக கருதப்படுபவர் லட்சுமி தேவி. இந்த லட்சுமி தேவியின் அருளைப் பெற்றால், செல்வ செழிப்போடு சிறப்பான வாழ்க்கையை வாழலாம். இந்து புராணங்களின் படி, லட்சுமி தேவியின் அருளைப் பெற வேண்டுமானால் சூரிய அஸ்தமனத்திற்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் இந்து நம்பிக்கைகளின் படி, மாலை வேளையில் செய்யும் சில விஷயங்கள் லட்சுமி தேவியை கோபப்படுத்தி, வீட்டில் பணப் பிரச்சனையை உண்டாக்கும்.

கீழே வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவரது வீட்டில் செல்வம் பெருகவும், பணப் பிரச்சனை ஏதும் வராமல் இருக்கவும் சூரிய அஸ்தமனத்திற்கு பின் அல்லது இரவு வேளையில் செய்யக்கூடாத சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து, இனிமேல் அவற்றை செய்வதைத் தவிர்த்திடுங்கள்.

#1 தலைமுடியை சீவக்கூடாது
பெண்கள் இரவு தூங்கும் போது தலைமுடியை விரித்துக் கொண்டு தூங்கக்கூடாது. ஏனெனில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் எதிர்மறை சக்திகள் அதிகம் சுற்றுவதால், இரவு நேரத்தில் தலைமுடியை விரித்துக் கொண்டு தூங்குவது அல்லது இரவு நேரத்தில் தலைமுடியை சீவுவது போன்றவை வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். எனவே இந்த தவறை இனிமேல் செய்யாதீர்கள்.

#2 அழுக்கு பாத்திரங்களை சமையலறையில் வைத்திருக்கக்கூடாது
இரவு தூங்கும் முன் சமையலறையில் உள்ள அழுக்கு பாத்திரங்கள் அனைத்தையும் கழுவிவிட்டு தான் தூங்க வேண்டும். சமையலறையை அசுத்தமாக வைத்துவிட்டு தூங்கினால், அந்த வீட்டில் வறுமை அதிகரிக்கும் மற்றும் எப்போதும் கடன் பிரச்சனையை சந்திக்க நேரிடும். நீங்கள் உங்கள் வீட்டில் லட்சுமி தேவி குடியிருக்க வேண்டுமென விரும்பினால், இரவு நேரத்தில் சமையலறையை சுத்தமாக வைத்து விட்டு பின் தூங்க செல்லுங்கள்.

#3 பால், தயிர், உப்பு, சர்க்கரையை யாருக்கும் கொடுக்காதீர்
பால், தயிர், உப்பு மற்றும் மஞ்சள் போன்ற பொருட்களை எப்போதும் மாலை வேளையில் தானமாக கொடுக்கக்கூடாது. அவ்வாறு கொடுத்தால், வீட்டில் குடியிருக்கும் லட்சுமி தேவி வீட்டை விட்டு வெளியேற்றிவிடுவார். பின் அந்த வீட்டில் பணப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் மற்றும் வாழ்க்கையில் உறுதியற்ற தன்மையை சந்திக்க வேண்டியிருக்கும்.

#4 நகங்களை மற்றும் முடியை வெட்டாதீர்
இரவு நேரத்தில் முடி மற்றும் நகத்தை வெட்டுவது துரதிர்ஷ்டமாக நம்பப்படுகிறது. ஏனெனில் இரவு நேரத்தில் லட்சுமி தேவி வீட்டிற்கு வருவதாக நம்பப்படுகிறது. இப்படியிருக்க இரவு நேரத்தில் நகம், முடிகளை வெட்டினால், அது வீட்டிற்கு வரும் லட்சுமி தேவிக்கு அவமரியாதையாக கருதப்படுகிறது.

#5 வீட்டை சுத்தம் செய்யாதீர்
வாஸ்துப்படி, வீட்டை சுத்தம் செய்ய சிறந்த காலம் காலை வேளை தான். இருப்பினும் சூரியன் அஸ்தமனம் ஆவதற்கு முன் எப்போது வேண்டுமானாலும் வீட்டை பெருக்கலாம். ஆனால் சூரிய அஸ்தமனத்திற்கு பின் பெருக்குவது நல்லதல்ல. இரவு நேரத்தில் வீட்டை பெருக்கினால், லட்சுமி தேவி வீட்டில் தங்கமாட்டார். இதனால் வீட்டு உறுப்பினர்களிடையே பிரச்சனைகள் அதிகரிக்கும், வீட்டின் மகிழ்ச்சி மற்றும் அமைதி சீர்குலையும்.

#6 துணியை துவைக்காதீர்
சூரிய அஸ்தமனத்திற்கு பின் எதிர்மறை ஆற்றல் அதிகம் சுற்றும். எனவே மாலை வேளையில் துணியை துவைத்து அதை வெளியே காயப் போடும் போது, அந்த எதிர்மறை ஆற்றல் துணியில் இறங்கி, இந்த துணியை அணியும் போது, அவரைச் சுற்றி எதிர்மறை ஆற்றல் சூழ்ந்திருக்கும். இதன் விளைவாக அந்த துணியை அணிந்து செய்யும் எந்த ஒரு செயலிலும் வெற்றி கிடைக்காது, தோல்வியையே சந்திக்க நேரிடும். எனவே உங்கள் வேலைகளில் வெற்றி கிடைக்க வேண்டுமானால், இரவு நேரத்தில் துணியை துவைக்காதீர்கள்.



Click it and Unblock the Notifications
