For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வியாழக்கிழமைகளில் மறந்தும் இந்த விஷயங்களை செஞ்சுடாதீங்க... இல்லன்னா பண பிரச்சனையை சந்திப்பீங்க...

உங்களுக்கு குரு பகவானின் அருள் வேண்டுமென விரும்பினால், ஒருசில செயல்கள்/விஷயங்களை வியாழக்கிழமைகளில் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் வியாழக்கிழமை குரு பகவானுக்கு உரியது.

|

கிரகங்களில் குரு/வியாழன் மிகப்பெரிய கிரகமாக கருதப்படுகிறது. அதேப் போல் இது கடவுள்களின் குருவாகவும் உள்ளது. ஜாதகத்தில் குரு வலுவான நிலையில் இருந்தால், அனைத்து பிரச்சனைகளும் விலகும் என்று கூறப்படுகிறது. மறுபுறம், குரு பலவீனமான நிலையில் இருந்தால், அது அந்நபரின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும், நிதி பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். இது தவிர, திருமணத்தில் பல தடைகள் மற்றும் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

Things You Should And Should Not Do On Thursday As Per Astrology

உங்களுக்கு குரு பகவானின் அருள் வேண்டுமென விரும்பினால், ஒருசில செயல்கள்/விஷயங்களை வியாழக்கிழமைகளில் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் வியாழக்கிழமை குரு பகவானுக்கு உரியது. இப்போது வியாழக்கிழமை என்ன செய்யக்கூடாது மற்றும் என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வியாழக்கிழமைகளில் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்:

வியாழக்கிழமைகளில் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்:

தலைமுடி, நகம் வெட்டக்கூடாது

ஜோதிடத்தின் படி, வியாழக்கிழமைகளில் தலைக்கு குளிப்பது, தலைமுடியை வெட்டுவது, நகம் வெட்டுவது, ஷேவிங் செய்வது போன்றவற்றை செய்யக்கூடாது. இவ்வாறு செய்வதன் மூலம், பணம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிப்பதோடு, உங்களின் முன்னேற்றத்தில் தடையை ஏற்படுத்தும்.

வீட்டை சுத்தம் செய்வது

வீட்டை சுத்தம் செய்வது

வியாழக்கிழமைகளில் வீட்டை சுத்தம் செய்யலாம். ஆனால் விஷேசங்களுக்கு சுத்தம் செய்வதாக இருந்தால், அதை வியாழக்கிழமைகளில் செய்யக்கூடாது. மேலும் வீட்டின் குப்பைகளை வியாழக்கிழமைகளில் தூக்கி எறியக்கூடாது. இது தவிர இந்நாளில் எந்த கெட்ட அல்லது மோசமான வேலைகளையும் செய்யாதீர்கள்.

சலவைக்கு கொடுக்கக்கூடாது

சலவைக்கு கொடுக்கக்கூடாது

வியாழக்கிழமைகளில் துணியை சலவைக்கு கொடுக்கவோ அல்லது அச்சிடும் பணியையோ செய்யாதீர்கள். முக்கியமாக எப்போதாவது துவைக்கும் துணிகளை வியாழக்கிழமைகளில் துவைக்காதீர்கள். இருப்பினும், நீங்கள் தினமும் துவைக்கும் துணிகளைத் துவைக்கலாம்.

வியாழக்கிழமைகளில் செய்ய வேண்டிய விஷயங்கள்:

வியாழக்கிழமைகளில் செய்ய வேண்டிய விஷயங்கள்:

விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியை வணங்கவும்

வியாழக்கிழமைகளில் விஷ்ணு பகவான் மற்றும் லட்சுமி தேவியை தவறாமல் வழிபடுங்கள். விஷ்ணு மற்றும் லட்சுமி தேவி செல்வத்தின் அடையாளங்கள். முடிந்தால், இந்நாளில் விஷ்ணு பகவான் மற்றும் லட்சுமி தேவிக்கு சிறப்பு வழிபாடு செய்யுங்கள். இது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கி, செல்வ செழிப்புடன் இருக்க உதவும்.

பசுவிற்கு உணவளிக்கவும்

பசுவிற்கு உணவளிக்கவும்

வியாழக்கிழமைகளில் கடலை மாவில், வெல்லம் மற்றும் மஞ்சள் சேர்த்து பிசைந்து, அதை பசு மாட்டிற்கு உணவளியுங்கள். மேலும் குளிக்கும் போது, நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து குளியுங்கள்.

தானம் கொடுக்கவும்

தானம் கொடுக்கவும்

வியாழக்கிழமைகளில் அவரவரின் திறன்களுக்கு ஏற்ப ஏழைகளுக்கு தானம் வழங்கலாம். அதுலம் கடலை பருப்பு, வாழைப்பழம், மஞ்சள் நிற ஆடைகள் போன்றவற்றை தானம் செய்வது மிகவும் நல்லது.

நல்ல வேலையை ஆரம்பிக்க சிறந்த நாள் தானா?

நல்ல வேலையை ஆரம்பிக்க சிறந்த நாள் தானா?

வியாழக்கிழமைகளில் தொடங்கப்படும் பணிகள் வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டியிருக்கும். எனவே நீங்கள் வியாழக்கிழமைகளில் எந்த ஒரு சுப வேலையையும் தொடங்கலாம். உதாரணமாக, நகை வாங்குவது, வீடு வாங்குவது போன்ற விஷயங்கள். முக்கியமாக வியாழக்கிழமைகளில் கல்வி தொடர்பான வேலையைத் தொடங்க மிகவும் நல்ல நாளாக கருதப்படுகிறது.

(மறுப்பு: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டவை. தமிழ் போல்ட்ஸ்கை அதை உறுதிப்படுத்தவில்லை.)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things You Should And Should Not Do On Thursday As Per Astrology

Here are some things you should and shouldn't do on thursday as per astrology. Read on...
Desktop Bottom Promotion