Just In
- 12 hrs ago
இன்றைய ராசிப்பலன் (26.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- 22 hrs ago
மைதா போண்டா
- 22 hrs ago
உங்க வாயை சுத்தி அசிங்கமா கருப்பா இருக்கா? இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 23 hrs ago
திருமண வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் செய்யும் முக்கியமான பாவங்கள் இவைதான்... இனியாவது திருந்துங்க...!
Don't Miss
- News
விவசாயிகள் போராட்டம்... 2 மாத மவுனம்.. இப்ப வந்து அட்வைஸ் தரும் அரசியல் தலைவர்கள்
- Sports
ஜோ ரூட் சூப்பர்... டெஸ்ட்ல சச்சினை விட அதிக ரன்களை குவிப்பாரு... முன்னாள் வீரர் நம்பிக்கை
- Finance
Budget 2021.. அதிகரித்து வரும் நிதி பற்றாக்குறை.. எச்சரித்த இக்ரா..!
- Movies
காதல் திருமணம் செய்யப் போகும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர்.. பொண்ணு யார் தெரியுமா?
- Automobiles
2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்!! இந்தியாவில் மார்ச்சில் அறிமுகம்
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆண்களுக்கு தெரியாத பெண்களின் உடலைப் பற்றிய சில ரகசியங்கள்!
பொதுவாக ஒவ்வொருவருக்கும் தங்களின் எதிர்பாலினத்தவரைப் பற்றி தெரிந்து கொள்ள ஒரு ஆவல் இருக்கும். அடிப்படையில் அனைவருமே ஒத்தவர்கள் என்றாலும், பாலினங்களுக்கு இடையிலான வித்தியாசம் கட்டாயம் இருக்கும் அல்லவா? இது ஒரு பெரிய விஷயம் அல்ல என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஆண்கள் மற்றும் பெண்களை எடுத்துக் கொண்டால், பெண்கள் ஆண்களை விட ஒருசில விஷயங்களில் சிறப்பானவராகவும், அதிசயப்படும் வகையிலும் தான் இருக்கிறார்கள்.
MOST READ: விருச்சிகம் செல்லும் புதனால் எந்த ராசிக்காரருக்கு படுமோசமா இருக்கப் போகுதுன்னு தெரியுமா?
அந்த வகையில் இக்கட்டுரையில் பெண்களின் உடலைப் பற்றி பல பெண்களுக்கே தெரியாத சில அசாதாரண உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

உண்மை #1
மனித இதயமானது சராசரி வயது வந்தவருக்கு ஒரு நிமிடத்திற்கு சுமார் 70 முதல் 85 முறை துடிக்கிறது. அதில் பாலினங்களுக்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. ஒரு வயது வந்த ஆணின் இதய துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 70 முதல் 72 முறை துடிக்கிறது. அதேப் போல் வயது வந்த பெண்ணின் இதய துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 78 முதல் 82 முறை துடிக்கிறது.

உண்மை #2
பெண்களின் உடலில் உள்ள கொழுப்பு ஆண்களின் உடலில் உள்ள கொழுப்பை விட மெதுவாக எரிக்கப்படுகிறது. அதுவும் பெண்கள் ஒரு நாளைக்கு 50 கலோரிகளை தான் எரிக்கின்றனர்.

உண்மை #3
ஆண்களை விட பெண்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. மேலும் அவர்களுக்கு தன்னுடல் தாக்க கோளாறுகளை உருவாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

உண்மை #4
பெண்களின் முடியின் விட்டம் ஆண்களை விட இரண்டு மடங்கு சிறியது. பெண்கள் ஆண்களை விட மரபணு ரீதியாக மிகவும் நெகிழ்வானவர்கள். அதோடு பெண்களுக்கு பாம்பு காது என்று சொல்வார்களே அது ஏன் தெரியுமா? ஏனெனில் பெண்களுக்கு ஆண்களை விட அதிக அதிர்வெண் ஒலிகளைக் கண்டறியும் திறன் கொண்டவர்கள்.

உண்மை #5
ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக ஸ்வீட் சாப்பிடுவார்கள் என்பது தெரியும். ஆனால் ஏன் என்று தெரியுமா? ஏனெனில் பெண்களின் நாக்கில் இனிப்பு ஏற்பிகள் ஆண்களை விட அதிகமாக உள்ளது.

உண்மை #6
நிறங்களை சரியாக பிரித்து கூறுவதில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்கள். ஏனெனில் பெண்களின் உடலில் உள்ள நிற உணர்திறன் X-குரோமோசோம்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.

உண்மை #7
ஆண்களை விட பெண்கள் இரண்டு மடங்கு அதிகமாக கண்களை சிமிட்டுவார்கள். அதேப் போல் பெண்களின் சருமம் ஆண்களை விட 10 மடங்கு மிகவும் சென்சிடிவ்வானது.

உண்மை #8
பெண்கள் வருடத்திற்கு சராசரியாக 30 முதல் 64 முறை அழுவார்கள். அதே சமயம் ஆண்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் ஒரு வருடத்திற்கு 6 முதல் 17 முறை தான் அழுவார்கள்.

உண்மை #9
பெண்களுக்கு அதிக நரம்பு வலி ஏற்பிகள் உள்ளன. எனவே அவர்கள் வலுவான வலியை அனுபவிக்கிறார்கள். அதே சமயம் அதை தாங்கும் திறனும் உள்ளது. இல்லையெனில், எந்தவொரு பெண்ணாலும் பிரசவ வலியைத் தாங்க முடியாது.