Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
மகரத்தில் புதன் இருப்பதால் பிப்ரவரி 27 வரை இந்த 5 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்..
மகரத்தில் உள்ள புதனால் எந்த ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதைக் காணலாம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நவகிரகங்களில் புதன் இளவரசனாக கருதப்படுகிறார். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். புதன் குறுகிய நாட்களிலேயே ராசியை மாற்றக்கூடியவர். இவர் 2023 பிப்ரவரி 07 ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியானார். இந்த மகர ராசியில் ஏற்கனவே சூரியன் பயணித்து வருவதால், மகரத்தில் சூரியன்-புதன் சேர்க்கையால் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது.

புதன் இந்த மகர ராசியில் பிப்ரவரி 27 ஆம் தேதி இருந்து, பின் கும்ப ராசிக்குள் நுழைவார். புதன் மகர ராசிக்கு சென்றுள்ளதால், அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் நற்பலனையும், சிலர் பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடும். இப்போது மகரத்தில் உள்ள புதனால் எந்த ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதைக் காணலாம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் தங்களின் வேலைகளில் தடைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பண இழப்பை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் உங்கள் பேச்சை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இது தவிர இக்காலத்தில் உங்களின் கோபம் உங்களை சிக்கலில் சிக்க வைக்கக்கூடும் என்பதால் கோபம் கொள்வதை குறைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இந்த காலத்தில் உங்கள் தந்தையுடன் பிரச்சனைகளை சந்திக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகளும் ஏற்படலாம்.

கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் கடக ராசிக்காரர்கள் பணியிடத்தில் அதிக வேலைப்பளு காரணமாக ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம். இக்காலத்தில் பண பரிவர்த்தனைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. உங்களின் ரகசியங்களை இக்காலத்தில் யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அரசு வேலை செய்பவர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உங்களின் வேலைகளில் தடைகள் ஏற்படும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் விருச்சிக ராசிக்காரர்கள் பல சவால்களை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இக்காலத்தில் உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மாத இறுதியில் பண பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இக்காலத்தில் யாருடனும் சண்டை போடாதீர்கள். காதலிப்பவர்கள் இக்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக பேசும் போது உங்கள் பேச்சை கவனிக்க அறிவுறுத்தப்படுகிறது.

தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் எதிரிகள் அதிகம் தொந்தரவு செய்வார்கள். ஆனால் நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் உடன் பிறந்தவர்களுடனான உறவு மோசமடைய வாய்ப்புள்ளது. எனவே இக்காலத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மகரம்
மகர ராசியின் முதல் வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் தேவையற்ற பயணங்களையும், செலவுகளையும் சந்திக்க நேரிடும். பழைய நோய்கள் மீண்டும் இக்காலத்தில் உங்களை தொந்தரவு செய்யும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் பணத்தை முதலீடு செய்வதாக இருந்தால், நன்கு சிந்தித்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பண இழப்பு ஏற்படும். மாணவர்கள் இக்காலத்தில் படிப்பில் பிரச்சனைகளை சந்திக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
