Latest Updates
-
இன்றைய ராசிபலன் 15 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
Aani Matha Rasipalan 2026: ஆனி மாதம் எந்த ராசிக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாவும் இருக்கும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்களோட சூப்பர் பவர் என்னன்னு சொல்றோம்.. -
பால் இல்லாமல் ஒருவாட்டி இப்படி டீ போடுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி இந்த டீ போடுவீங்க.. -
இந்த 5 ராசிக்காரர்கள் 30 வயதிற்குள்ளேயே வாழ்வில் நல்ல உயரத்தை அடைவார்களாம்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சிக்கனையும், பூண்டையும் வெச்சு.. ஒருடைம் இந்த வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்.பிரகாஷ்! -
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம்
இந்த 5 ராசிக்காரங்களுக்கு தனிமையில இருக்கிறது நரகத்துல இருக்கிற மாதிரியாம்... ரொம்ப பாவம் இவங்க...!
வாழ்க்கையில் தனிமையான காலம் என்பது அனைவரும் சந்திக்கக் கூடிய ஒன்றுதான். வாழ்க்கையின் சில புரிதலுக்கு தனிமை அவசியமானதும் கூட.
வாழ்க்கையில் தனிமையான காலம் என்பது அனைவரும் சந்திக்கக் கூடிய ஒன்றுதான். வாழ்க்கையின் சில புரிதலுக்கு தனிமை அவசியமானதும் கூட. ஆனால் தனிமையில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் நாமாக தேடிச்செல்லும்போது சொர்க்கமாக இருக்கும் தனிமை, அதுவாக வரும்போது நரகமாகத் தோன்றும். அனைவருக்கும் தனிமை இனிமையாக இருப்பதில்லை.

குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு பகலை தனியாக கழிப்பது, விடுமுறையில் தனியாக செல்வது, அல்லது தனியாக வாழ்வது கூட நரகத்தில் இருப்பது போன்று இருக்கும். இவர்கள் தனியாக இருப்பதை விட நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சூழ்ந்திருப்பதையே விரும்புவார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் தனிமையை வெறுப்பவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்
இவர்கள் சுதந்திரத்தை விரும்புபவர்கள் ஆனால் எப்போதும் இல்லை. இவர்கள் எதையும் சொந்தமாக செய்யக்கூடியவர்கள் என்று அனைவரும் நினைக்கலாம், ஆனால் உண்மையில் இவர்களால் எப்போதும் அப்படி இருக்க முடியாது. தனிமையில் எதையும் சாதிப்பது பயனற்றது என்று இவர்கள் நினைப்பார்கள். தங்களின் செயல்கள் அனைத்தும் மாற்றவர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும், பாராட்டப்பட வேண்டும் என்று இவர்கள் நினைப்பார்கள். தனிமையில் கிடைக்கும் வெற்றி இவர்களுக்கு ஒருபோதும் மகிழ்ச்சியைத் தராது.

மிதுனம்
இவர்கள் தனக்குத் துணையாக தான் மட்டுமே இருப்பதை முற்றிலும் வெறுக்கிறார்கள். இவர்கள் எப்போதும் சமூகமயமாக்கலை விரும்புபவர்கள். எனவே வெளிப்படையாகவே இவர்கள் தனிமையை வெறுப்பவர்கள். தங்கள் வாழ்க்கையில் புதிய நபர்களை சந்திக்கவும், புதிய உறவுகளை உருவாக்கிக் கொள்ளவும் இவர்கள் எப்போதும் ஆர்வமாக இருப்பார்கள். இந்த பரிமாற்றங்களே தங்களை முழுமையடையச் செய்வதாக இவர்கள் நினைக்கிறார்கள்.

சிம்மம்
தனியாக இருக்கும்போது தங்களுடைய சிறப்பு எப்படி வெளிப்படும் என்று நினைப்பவர்கள் இவர்கள். சிம்ம ராசிக்காரர்களை தனியாக பார்ப்பது என்பது மிகவும் அரிதான நிகழ்வாகும். இவர்கள் உலகிடம் இருந்து விலகியிருக்க சாத்தியமில்லை. தாங்கள் நட்சத்திரமாய் பிரகாசிக்க வேண்டும், அங்கீகரிக்கப்பட வேண்டும் மற்றும் கவனத்தை ஈர்க்க வேண்டும், இது தங்களின் இருப்பை உணர்த்தும் வழி என்று இவர்கள் எண்ணுகிறார்கள். இவர்களின் ஈர்ப்பு சக்தி மிகவும் வலுவானது, அதனால் இவர்கள் தனியாக இருக்கவும் மாட்டார்கள்.

துலாம்
இவர்களிடம் மயக்கும் கலையும், நம்பிக்கையும் கொட்டிக் கிடக்கிறது. மற்றவர்களை எளிதில் கவரும் இவர்களின் குணம் இவர்களுடைய நல்வாழ்வுக்கு இன்றியமையாததாகும். ஏனெனில் இவர்கள் சந்திக்கும் நபர்களிடமிருந்து இவர்கள் எவ்வளவு நம்பிக்கையைப் பெறுகிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக நீங்கள் உணர்கிறார்கள். குறிப்பாக இவர்கள் நண்பர்களை உருவாக்குவதில் சிறந்தவர் என்பதால்: இவர்கள் விரும்பும் நபர்களை அழைக்கத் தவறுவதில்லை. அதனால் இவர்கள் தனியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

கும்பம்
இவர்கள் ஒன்றாக சிந்திப்பவர்கள். எனவே இவர்கள் தவிர்க்க முடியாமல் யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளவும், விவாதிக்கவும், தொடர்பு கொள்ளவும் மற்றும் கற்றுக்கொள்ளவும் விரும்புகிறார்கள். அதனால்தான் தனிமை இவர்களை பயமுறுத்துகிறது. இவர்கள் நினைக்கிறார்கள், சிந்திக்கிறார்கள், மறுபரிசீலனை செய்கிறார்கள், ஆனால் பகிர்ந்து கொள்ளாமல், தங்கள் யோசனைகள் சிறப்பாக இல்லை என்றும், தங்கள் நேரத்தை வீணடிக்கிறோம் என்றும் இவர்கள் உணர்கிறார்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இவர்கள் மற்றவர்களுடன் பழக முயலுகிறார்கள்.



Click it and Unblock the Notifications