For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 4 ராசிக்காரங்க காதலில் மிகவும் துரதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதலிச்சாலும் ஃபெயிலியராதான் போகுமாம்!

சனியால் ஆளப்படும் மகர இராசி அடையாளம் மிகவும் தீவிரமானது. இந்த ராசிக்காரர்கள் காதலில் துரதிர்ஷ்டவசமானவர்கள் என்று சொல்ல முடியாது.

|

வாழ்க்கையில் காதலை விரும்பாதவர்கள் யார் இருக்கிறார்கள்? இவ்வுலகமே காதலால்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. சிலர் நேசிப்பதற்காக வாழ்கிறார்கள். இவர்களின் வாழ்க்கை மொத்தமும் காதல் மட்டுமே இருக்கும். தங்கள் மனம் கவர்ந்தவர்களுக்காக, சிலர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். காதல் வாழ்க்கையில் பெரும்பாலானவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருக்கிறார்கள். அதேபோல, உண்மையிலேயே துரதிர்ஷ்டவசமானவர்கள் சிலரும் இருக்கிறார்கள். இவர்கள் காதலில் உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்தாலும், அந்த காதல் வாழ்க்கை நீண்ட நாள் நிலைக்காது, அவை பிரிந்துவிடும்.

these-zodiac-signs-are-often-unlucky-in-love-in-tamil

மேலும், இந்த நபர்கள் வாழ்நாளில் சந்திக்கும் அனைத்தும் மனவேதனைகளின் காரணமாக அவர்கள் மனம் காதலித்தவர்களை நோக்கிச் செல்லும். எந்தெந்த நபர் காதலில் துரதிர்ஷ்டசாலிகள் என்று தெரிந்துகொள்ள ஜோதிடம் உங்களுக்கு உதவும். எனவே, காதலில் துரதிர்ஷ்டவசமான ராசிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் ஒருவர் மீது அளவுகடந்த பாசத்தை வைக்கிறார்கள். எல்லா வழிகளிலும் சென்று தங்கள் உணர்ச்சிகளை மற்றும் காதலை வெளிப்படுத்துவது இந்த ராசிக்காரர்களின் இயல்பு. இந்த அன்பான மற்றும் உணர்திறன் உள்ள நபருக்கு காதல் வாழ்க்கை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருக்கும். இவர்களின் காதல் வாழ்க்கை பிரிந்துவிடும். அவர்கள் இந்த பிரிவிலிருந்து மீள சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறார்கள். இந்த ராசிக்காரர்களின் உறவு முறிந்தால், அவர்கள் அதிலிலிருந்து குணமடைய நீண்ட காலம் எடுக்கும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்தான், இருப்பினும் அவர்களின் துரதிர்ஷ்டம் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இந்த ராசிக்காரர்கள் ஒருவரை நேசிக்கும் போது, அவர்கள் அழகாக நேசிக்கிறார்கள். அதனால்தான் ஒருவரை மீண்டும் நேசிப்பதற்கான அதே செயல்முறையை கடந்து செல்வது அவர்களுக்கு கடினமாக இருக்கும். அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஆனால், கடந்த காலத்தை மறக்க வேண்டும் என்ற சூழல், அவர்களுக்கு மிகவும் வருத்தமளிக்கும் செயல்முறையாகும்.

மகரம்

மகரம்

சனியால் ஆளப்படும் மகர இராசி அடையாளம் மிகவும் தீவிரமானது. இந்த ராசிக்காரர்கள் காதலில் துரதிர்ஷ்டவசமானவர்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் அவர்களின் தவறான நேரத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் சரியான நபரைச் சந்திப்பது சாத்தியம். ஆனால் தவறான நேரத்தில் அல்லது நேர்மாறாக அவர்கள் தவறான ஒருவரை தேர்ந்தெடுத்துவிடுவார்கள்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமானவர்கள். ஏனென்றால், தாங்கள் காதலிக்கும் நபரின் மோசமான பக்கத்தைப் பார்க்காமல் இருப்பது அல்லது தவிர்க்கும் பழக்கம் அவர்களிடம் உள்ளது. அவர்கள் ரோஜா கண்ணாடியில் இருந்து உலகைப் பார்க்கிறார்கள் மற்றும் அவர்கள் தங்கள் சொந்த மகிழ்ச்சியை தியாகம் செய்யும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக, மீன ராசிக்காரர்கள் ஒப்பீட்டளவில் காதல் தோல்வியில் இருந்து விரைவாக குணமடைகிறார்கள். கடந்த காலத்தை கடந்து வர முயற்சி செய்வார்கள்.

இதர ராசிக்காரர்கள்

இதர ராசிக்காரர்கள்

மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் காதல் முறிவுகளில் தங்கள் பங்கைக் கொண்டிருக்கலாம். ஆனால், இவர்களுக்கு அது மிகவும் வேதனையாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These zodiac signs are often unlucky in love in tamil

Here we are talking about the These zodiac signs are often unlucky in love in tamil
Story first published: Monday, January 30, 2023, 15:12 [IST]
Desktop Bottom Promotion