Just In
- 49 min ago
நீங்க வீட்டில் தயாரிக்கும் இந்த பானங்கள்... ஆபத்தான நோயிடமிருந்து உங்களை பாதுகாக்குமாம் தெரியுமா?
- 1 hr ago
சர்க்கரை நோயாளிகள் மது அருந்தும் போது அவர்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது தெரியுமா?
- 7 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பயணம் சாதகமாக அமையும்...
- 17 hrs ago
பளிச்சென்ற பொலிவான சருமத்தைப் பெற வேண்டுமா? அப்ப இந்த சாக்லேட் ஃபேஸ் பேக்கை போடுங்க..
Don't Miss
- News
பொக்கிஷம்! பேனா விலை என்னவோ ஒன்றரை லட்சம்தான்.. ஆனால் அது அப்பாவுடையதாச்சே.. விஜய் வசந்த் உருக்கம்
- Movies
மெத்தையில் புரண்டபடி குட் நைட் சொன்ன கஸ்தூரி..ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
- Finance
மோடி அரசு: ஒரேயொரு அறிவிப்பு.. கொட்டோ கொட்டுது துட்டு..! ஆனா அம்பானி-க்கு நஷ்டம்..!
- Technology
18 ஜிபி ரேம், பிரத்யேக டிஸ்ப்ளே மற்றும் கூலிங் சிஸ்டம் உடன் Asus ROG Phone 6, 6 Pro: தலைசுத்த வைக்கும் அம்சம்!
- Automobiles
வரிசைக்கட்டி நிற்கும் புதிய கார் அறிமுகங்கள்!! இந்த தீபாவளி செம்மையா இருக்க போகுது!
- Sports
பிசிசிஐ-ன் பண ஆசையால் பறிபோன 5வது டெஸ்ட்.. தோல்விக்கு பின்னால் உள்ள காரணம் - ரசிகர்கள் கொந்தளிப்பு!
- Travel
ஸ்டார்கேஸிங் செய்து இரவை இனிமையாக கழிக்க வேண்டுமா? இந்த இடங்களுக்கு செல்லுங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
மே மாதத்தின் கடைசி 10 நாட்கள் இந்த 4 ராசிக்காரங்களுக்கு செழிப்பா இருக்குமாம்.. உங்க ராசி இதுல இருக்கா?
2022 ஆம் ஆண்டின் மே மாதம் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு மாதிரி இருந்திருக்கும். அதில் சிலருக்கு சவால் நிறைந்ததாகவும், சிலருக்கு மோசமாகவும், சிலருக்கு சாதகமானதாகவும் இருந்திக்கலாம். ஜோதிட கணக்கீடுகளின் படி, மே மாதத்தின் கடைசி 10 நாட்கள் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். இந்த காலத்தில் இவர்களுக்கு அன்னை லட்சுமி தேவியின் சிறப்பு அருள் உள்ளது. லட்சுமி தேவி செல்வத்தின் அதிபதியாவார். இவரது அருள் கிடைக்கும் நபர்களின் வாழ்க்கை சிறப்பாகவும், செழிப்பாகவும் இருக்கும்.
இப்போது 2022 ஆம் ஆண்டின் மே மாதத்தின் கடைசி 10 நாட்கள் லட்சுமி தேவியின் அருளைப் பெற்று செல்வ செழிப்போடு இருக்கும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு மே மாதத்தின் கடைசி 10 நாட்களில் கடந்த காலத்தில் செய்த கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். இக்காலத்தில் சம்பள உயர்வை கூட பெறலாம். தொழில் நிலை உயரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். சொந்தமாக தொழில் தொடங்க திட்டமிடுவீர்கள். வேலையை மாற்ற திட்டமிட்டால், அதில் வெற்றி கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் புதிய இலக்குகள் மற்றும் ஆசைகள் நிறைவேறும். வேலை தொடர்பாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இக்காலத்தில் கடினமாக உழைத்து உங்களால் முடிந்தவரை சிறந்ததை கொடுக்க முயற்சிப்பீர்கள். இக்காலத்தில் செல்வாக்குமிக்கவர்களுடன் தொடர்பு கொள்வீர்கள். இது உங்கள் தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கும். சொந்தமாக தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

சிம்மம்
உத்தியோகத்தில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய முயற்சித்தால் வெற்றி கிடைக்கும். ஏற்கனவே நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு இக்காலத்தில் தீர்வு காண்பீர்கள். உங்களின் நற்பெயர் மேம்படும். உங்கள் மேலதிகாரிகளுடனான உறவுகள் சிறப்பாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! நீங்கள் உங்கள் தொழிலை மாற்ற நினைத்துக் கொண்டிருந்தால், அதற்கு இக்காலத்தில் முயற்சித்தால் வெற்றி கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு மே மாதத்தின் இறுதியில் நற்செய்தி கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். லட்சுமி தேவியின் அருளால், வேலையில் வெற்றி கிடைக்கும்.