For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் இந்த கோவில்களில் ஆண்கள் நுழையவே கூடாதாம்...மீறி நுழைந்தால் அவ்வளவுதானாம்...!

இந்தியா பல்வேறு மதங்களும், கலாச்சாரங்களும் நிறைந்திருக்கும் தனித்துவமான நாடாகும். ஒவ்வொரு மதமும் தனக்கென வித்தியாசமான கலாச்சாரங்களையும், வழிபாடு முறைகளையும் கொண்டது.

|

இந்தியா பல்வேறு மதங்களும், கலாச்சாரங்களும் நிறைந்திருக்கும் தனித்துவமான நாடாகும். ஒவ்வொரு மதமும் தனக்கென வித்தியாசமான கலாச்சாரங்களையும், வழிபாடு முறைகளையும் கொண்டது. அந்த வகையில் இந்து மதம் மிகவும் வினோதமான பல மரபுகளைக் கொண்டுள்ளது. உதாரணமாக சில கோவில்களில் பாலினத்தை அடிப்படையில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

Temples in India Where Men Are Not Allowed in Tamil

கோவிலில் ஆண்களையோ அல்லது பெண்களையோ அனுமதிப்பது அல்லது அனுமதிக்காதது வரும்போது, பெரும்பாலும் பெண்களே பல காலமாக அடக்குமுறையை எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால், ஒரு சில இந்திய கோவில்களில் ஆண்கள் நுழைய அனுமதி இல்லை. இந்தியாவில் ஆண்கள் நுழைய அனுமதிக்கப்படாத கோவில்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஆட்டுக்கல் கோவில்

ஆட்டுக்கல் கோவில்

கேரளாவில் அமைந்துள்ள இந்த கோவில், துணிச்சலான பத்ரகாளி தேவி அசுர வேந்தன் தாரகனைக் கொன்றதைக் கொண்டாடுகிறது. குறிப்பாக மூன்றாம் சன்னதியில் பெண்கள் பொங்கலை கொண்டாடுகின்றனர். இந்தக் காலக்கட்டத்தில் ஆண்களுக்கு கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. இங்குள்ள தேவி பகவதி தேவியாகவும் வணங்கப்படுகிறார்.

சந்தோஷி மாதா கோவில்

சந்தோஷி மாதா கோவில்

சந்தோஷி மாதா திருப்தியின் தெய்வம். பெரும்பாலும் திருமணமாகாத பெண்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்காக தேவியை வழிபடுகிறார்கள். வெள்ளிக்கிழமை விரதம் கடைப்பிடித்து கோயிலில் பூஜை செய்வார்கள். எனவே வெள்ளிக்கிழமைகளில், ஆண்கள் சந்தோஷி மாதா கோவிலுக்கு செல்ல முடியாது.

பிரம்மா கோவில்

பிரம்மா கோவில்

ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் என்ற இடத்தில் பிரம்மாவின் ஒரே கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்குப் பின்னால் ஒரு கதை உண்டு. புராணங்களின்படி, ஒருமுறை பிரம்மாவும் சரஸ்வதி தேவியும் புஷ்கர் ஏரியில் பூஜை செய்யவிருந்தனர். இருப்பினும், தேவி சரஸ்வதி தாமதமாக வந்ததால், பிரம்மாவால் நீண்ட நேரம் காத்திருக்க முடியவில்லை, யாகம் செய்ய வேண்டியிருந்ததால் பிரம்மா காயத்ரி தேவியை மணந்தார். இது சரஸ்வதி தேவியை கோபப்படுத்தியது, மேலும் அந்த கோவிலுக்குள் யாராவது நுழைந்தால் அவரது திருமண வாழ்க்கை அதிர்ச்சிகரமானதாக இருக்கும் என்று கோவிலை சபித்தார். எனவே பிரம்மாவின் கோவிலுக்குள் ஆண்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

பகதி மாதா கோவில்

பகதி மாதா கோவில்

கன்னியாகுமரியில் அமைந்துள்ள பகதி மாதா அல்லது பார்வதி தேவி கோவிலில் ஆண்கள் நுழைய அனுமதி இல்லை. புராணங்களின் படி, சிவபெருமானை தனது வாழ்க்கைத் துணையாகப் பெறுவதற்காக நடுக்கடலில் பார்வதி தேவி தவம் செய்தார். அந்த நேரத்தில் தேவி உலகத்தை துறந்து சன்யாசி ஆனதால் இந்த கோவிலில் யாரும் நுழைய முடியாது.

திரிம்பகேஸ்வரர் கோவில்

திரிம்பகேஸ்வரர் கோவில்

இது நாசிக் மாவட்டத்தில் உள்ள திரிம்பாக் நகரில் அமைந்துள்ள சிவபெருமானின் ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகும். முன்பெல்லாம் கோவிலின் உள்பகுதிக்குள் பெண்கள் நுழையக்கூடாது என்று விதிகள் விதிக்கப்பட்டிருந்தது. அது நீதிமன்ற வழக்காக மாறிய பிறகு. பெண்கள் கோயிலுக்குள் நுழைய முடியாது என்றால் ஆண்களும் செல்லக்கூடாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இப்போது கோவிலின் உள் வளாகத்திற்குள் ஆண்களும் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

மாதா கோவில்

மாதா கோவில்

பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் நகரில் அமைந்துள்ள இந்த கோவிலில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆண்கள் நுழைய அனுமதி இல்லை. இந்த தடை காலத்தில், கோவிலுக்குள் பெண்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்த தடை கோவில் பூசாரிக்கும் பொருந்தும்.

கம்ரூப் காமாக்யா கோயில்

கம்ரூப் காமாக்யா கோயில்

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கௌஹாத்தி நகரில் இக்கோயில் உள்ளது. இது பார்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் மற்றும் சிவபெருமான் இது பார்வதி தேவியின் இறந்த உடலுடன் நடனமாடிய சரியான இடம் என்று கூறப்படுகிறது. நடனத்தின் போது தேவியின் பிறப்புறுப்பு விழுந்த இடம் அது. கோவிலில் பெண்கள் தேவியின் மாதவிடாய் துணியை அணிந்து வணங்குகிறார்கள். மாதவிடாய் காலத்தில் மட்டுமே பெண்கள் நுழைய அனுமதிக்கும் ஒரே கோவில் இதுவாகும்.

சக்குளத்துகாவு கோவில்

சக்குளத்துகாவு கோவில்

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த துர்கா தேவியின் கோவிலுக்கு விருச்சிகம் மாதத்தில் 10 நாட்கள் விரதம் இருக்கும் போது ஆண்கள் செல்ல அனுமதி இல்லை. துர்கா தேவியின் ஆசியைப் பெறுவதற்காக பல பெண் பக்தர்கள் இந்த விரதத்தை கடைபிடிக்கின்றனர். மற்றொரு முக்கிய விழாவான தனு விழாவில் பத்து நாட்கள் விரதமிருந்த பெண்களின் கால்களுக்கு அங்கிருக்கும் தலைமை பூசாரி பூஜை செய்வார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Temples in India Where Men Are Not Allowed in Tamil

Here is the list of temples in India where men are not allowed.
Story first published: Thursday, November 10, 2022, 11:27 [IST]
Desktop Bottom Promotion