Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
சூரியன் சனி உருவாக்கும் அசுப யோகம்: டிசம்பர் 16 முதல் இந்த ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்...
துவித்வாதஷ் யோகம் ஜோதிட சாஸ்திரத்தில் அசுபமாக கருதப்படுகிறது. இந்த யோகத்தின் பலன் 12 ராசிகளிலுமே காணப்படும். இப்போது சனி, சூரியன் உருவாக்கும் துவித்வாதஷ் யோகத்தால் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் இயக்கங்களின் போது ஒருசில யோகங்கள் உருவாகும். அந்த யோகங்கள் மனித வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சூரியன் தற்போது விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். இவர் டிசம்பர் 16 ஆம் தேதி தனுசு ராசிக்கு செல்கிறார். இந்த தனுசு ராசியில் ஜனவரி 14 வரை இருப்பார். இக்காலத்தில் சனி மகர ராசியில் பயணித்து வருவார். இந்நிலையில் சனி மற்றும் சூரியன் கிரக வரிசையில் இரண்டு மற்றும் 12 நிலையில் வருகிறார்கள். இதனால் துவித்வாதஷ் யோகம் உருவாகிறது. இதை யோகம் என்பதை விட தோஷம் என்றே சொல்ல வேண்டும்.

இந்த யோகம் ஜோதிட சாஸ்திரத்தில் அசுபமாக கருதப்படுகிறது. இந்த யோகத்தின் பலன் 12 ராசிகளிலுமே காணப்படும். இப்போது சனி, சூரியன் உருவாக்கும் துவித்வாதஷ் யோகத்தால் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

துவித்வாதஷ் யோகம் எப்படி உருவாகிறது?
ஜோதிடத்தில் சனியும், சூரியனும் எதிரி கிரகங்களாக கருதப்படுகின்றன. டிசம்பர் 16 ஆம் தேதி சூரியன் மற்றும் சனியினால் துவித்வாதஷ் தோஷம் உருவாகிறது. இது ஜனவரி மாதம் வரை தொடர்வதாக கூறப்படுகிறது. இந்த காலத்தில் சூரியன் மற்றும் சனி, 2 மற்றும் 12 ஆம் ராசிகளில் இருக்கும். ஜோதிடத்தில் இது மிகவும் அசுபமாக கருதப்படுகிறது.

அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்
சிம்மம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் சனியின் துவித்வாதஷ் யோகம் நற்பலனைத் தரும். இக்காலத்தில் இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறக்கூடும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்தியைப் பெறுவீர்கள். அதே வேளையில் வாகனம், சொத்து வாங்க திட்டமிடுவீர்கள். பழைய முதலீடுகளால் லாபம் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.

கலவையான பலன்களைப் பெறும் ராசிகள்
மேஷம், கடகம், துலாம், விருச்சிகம், தனுசு மற்றும் கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் துவித்வாதஷ் யோகத்தின் கலவையான பலன்களைப் பெறுவார்கள். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்காது. அதற்கு அவர்களின் அவசரம் காரணமாக இருக்கலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தந்தையுடன் பிரச்சனைகளை சந்திக்கலாம் மற்றும் அவரது உடல்நிலையும் மோசமடைய வாய்ப்புள்ளது.

கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி மற்றும் சூரியன் எதிரிகள் என்பதால், அந்த கிரகங்களின் சேர்க்கையால் ரிஷபம், மிதுனம், கன்னி மற்றும் மகரம் ஆகிய ராசிக்காரர்கள் மோசமான பலன்களைப் பெறக்கூடும். இக்காலதில் வியாபாரிகள் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் மோசமடையவும் வாய்ப்புள்ளது. அதோடு பணிபுரிபவர்கள் தங்கள் பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் சூழல் உருவாகும். எனவே சற்று கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications