Latest Updates
-
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
Surya Gochar 2022: சூரிய பெயர்ச்சியால் எந்த ராசிக்கு சூப்பராகவும், எந்த ராசிக்கு மோசமாகவும் இருக்கும்?
பொதுவாக நவகிரகங்களின் பெயர்ச்சி ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மிதுன ராசிக்கு செல்லும் சூரியனால் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எப்படி இருக்கப் போகிறது என ஆனி மாத ராசிபலன்களை கீழே காண்போம்.

ஜோதிடத்தில், நவகிரகங்களின் தலைவராக கருதப்படுபவர் சூரியன். இவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு ஜூன் 15 ஆம் தேதி காலை 11:58 மணிக்கு இடம் பெயர்கிறார். சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. மிதுன ராசிக்கு சூரியன் செல்லும் போது பிறக்கும் தமிழ் மாதம் தான் ஆனி. பொதுவாக நவகிரகங்களின் பெயர்ச்சி ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மிதுன ராசிக்கு செல்லும் சூரியனால் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எப்படி இருக்கப் போகிறது என ஆனி மாத ராசிபலன்களை கீழே காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும். மேலும் உங்கள் உடன்பிறப்புகளும் நோயால் அவதிப்படலாம். தெரியாத ஒருவருடன் புதிய உறவை வளர்த்துக் கொள்வீர்கள். பணியிடத்தில அதிக எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். உங்கள் எதிரிகள் உங்கள் இமேஜை கெடுக்க முயற்சிப்பார்கள். எனவே கவனமாக இருங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் மூதாதையர் சொத்துக்கள் தொடர்பாக குடும்ப உறுப்பினர்களுடன் சில பிரச்சனைகள் ஏற்படலாம். சொத்துக்களில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதை தவிர்த்து, சரியான உணவு முறைக்கு மாற வேண்டும். உங்கள் வாழ்க்கை துணை ஆரோக்கிய பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம் மற்றும் வாக்குவாதங்களும் இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் சற்று ஆக்ரோஷமாக இருப்பீர்கள். எனவே இந்த காலகட்டத்தில் சண்டைகளைத் தவிர்க்க முயற்சி செயுங்கள். தேவையில்லாமல் கோபப்படுவதைத் தவிர்த்திடுங்கள். உங்கள் உறவுகள் பாதிக்கப்படலாம். உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். ஆகவே உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

கடகம்
கடக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பயணத்திற்கான வாய்ப்புள்ளது. அது வெளிநாட்டு பயணமாகவும் இருக்கலாம். பணியிடத்தில், எதிரிகளால் சிக்கல்களை சந்திப்பீர்கள். உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும் மற்றும் நிறைய செல்வத்தைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும் மற்றும் பதவி உயர்வும் கிடைக்கும். இக்காலம் காதல் உறவுகளுக்கு உகந்ததாக இருக்கும். இக்காலத்தில் சற்று பிடிவாதமாக இருப்பீர்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் வெற்றி பெறுவார்கள்.

கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் முடிவுகளை எடுப்பீர்கள். பணியிடத்தில் உங்கள் செயல்திறன் சிறப்பாக மாறும் மற்றும் இது உங்களுக்கு பதவி உயர்வை வழங்கும். பெற்றோரின் ஆரோக்கியம் மோசமடையும். எனவே அவர்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்தி நேரத்தை இழக்காதீர்கள்.

துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இக்காலத்தில் நிறைய செல்வத்தைப் பெறுவீர்கள். உங்கள் தந்தையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. அதுவும் இந்த பயணம் உங்கள் வேலையுடன் தொடர்புடையதாக இருக்கலாம். அரசு அதிகாரிகளிடமிருந்தோ அல்லது உயர் அதிகாரிகளிடமிருந்தோ சில ஆதாயங்களைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும் மற்றும் அதிர்ஷ்டமும் ஆதரவாக இருக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அதற்கு ஜங்க் உணவுகளைத் தவிர்த்திடுங்கள். நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பணப் பரிவர்த்தனைகளைச் செய்யும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் கடினமாக உழையுங்கள் மற்றும் சச்சரவுகளைத் தவிர்த்திடுங்கள்.

தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் காதல் வாழ்க்கை மலரும். திருமணமானவர்கள் பிரச்சனையை சந்திப்பார்கள். ஈகோ தொடர்பான சில பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்படலாம். எனவே, உங்கள் துணையுடன் நல்ல தொடர்பு வைத்திருப்பது அவசியம். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உங்கள் தொழிலில் முன்னேற முயற்சிக்க வேண்டும்.

மகரம்
மகர ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பணியிடத்தில் உங்கள் இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் எதிரிகளைப் பற்றி அறிந்திருப்பதோடு, அவர்களை எவ்வாறு கையாள்வது என்பதையும் அறிந்திருக்க வேண்டும். பணியிடத்தில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் கடனை நீங்கள் திருப்பிச் செலுத்த முடியும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தால், தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் குழந்தைகளால் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். மன உளைச்சல் ஏற்படும். உங்கள் காதலருடன் பிரச்சனை இருந்தால், அதை தீர்க்க முயற்சி செய்யுங்கள். இல்லாவிட்டால், அது உங்கள் இருவருக்கும் இடையேயுள்ள இடைவெளியை அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கிய பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்.

மீனம்
மீன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும். இக்காலத்தில் உங்கள் தாயின் உடல்நிலை மோசமடையும். எனவே அவரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உங்கள் தொழிலில் சிக்கல்கள் ஏற்படும். கவனமாகவும், அர்ப்பணிப்புடன் இருந்தால், அவற்றை சரிசெய்ய முடியும். இக்காலத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். உங்களின் அலுவலகத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications