Latest Updates
-
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சூரிய பெயர்ச்சியால் மார்ச் 15 வரை இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கணும்...
2023 பிப்ரவரி 13 ஆம் தேதி கும்ப ராசிக்கு சென்ற சூரியனால் எந்த ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திப்பார்கள் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Sun Transit In Aquarius On February 2023: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஆன்மாவின் கிரகம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். சூரியனின் ராசி மாற்றத்தின் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. சூரியனின் ராசி மாற்றமானது 12 ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2023 பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் சனி ஆளும் கும்ப ராசிக்கு சென்றார். சூரியன் இந்த கும்ப ராசியில் மார்ச் 15 வரை இருப்பார். அதன் பின் மீன ராசிக்கு செல்வார்.

சூரியனின் இந்த ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் நற்பலனையும், சில ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளையும் சந்திக்கலாம். இப்போது 2023 பிப்ரவரி 13 ஆம் தேதி கும்ப ராசிக்கு சென்ற சூரியனால் எந்த ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திப்பார்கள் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் சூரியனின் பார்வையானது 2 ஆவது வீட்டில் விழுகிறது. இதன் காரணமாக கடக ராசிக்காரர்கள் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்கள் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். இக்காலத்தில் எந்த ஒரு புதிய முதலீடுகள் செய்வதையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இக்கால கட்டத்தில் குடும்பத்தில் உள்ளோருடன் தகராறு ஏற்பட்டு, மன கசப்புகள் அதிகரிக்கலாம். உங்கள் பேச்சை இக்காலத்தில் கட்டுப்பாட்டில் வைக்க அறிவுறுத்தப்படுகிறது.

சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் சூரியனின் பார்வையானது லக்ன வீட்டில் விழுகிறது. இதன் காரணமாக திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. உங்கள் துணையின் உணர்வுகளை புரிந்து நடந்து கொண்டால், இந்த பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இந்த காலத்தில் எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்காதீர்கள். கூட்டு வேலை செய்பவர்கள், அனைத்து செலவுகளையும் சரியாக கணக்கில் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. பணிபுரிபவர்கள் பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருந்தால், இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.

மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் சூரியனின் பார்வை 6 ஆவது வீட்டில் விழுகிறது. இதன் காரணமாக இக்காலத்தில் உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பண பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த காலத்தில் தேவையில்லாமல் பயணம் செய்ய வேண்டியிருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேணடும். உங்கள் எதிரிகள் இக்காலத்தில் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம் என்பதால், எதிரிகளிடம் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
