Latest Updates
-
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும
மீனத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்கு நல்ல லாபம் கிடைக்கப் போகுது..
2023 மார்ச் மாதத்தில் மீன ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் நல்ல செல்வத்தைப் பெறப் போகும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும். அவ்வாறு ராசியை மாற்றும் போது சில சமயங்களில் கிரகங்களின் சேர்க்கையால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகி, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் 2023 மார்ச் 15 ஆம் தேதி சூரியன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். அதைத் தொடர்ந்து மார்ச் 16 ஆம் தேதி புதனும் மீன ராசிக்கு செல்கிறார். இதனால் மார்ச் 16 ஆம் தேதி மீன ராசியில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

புதன் மற்றும் சூரியன் சேர்க்கையால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம் ஒரு மங்களகரமான யோகம் என்பதால், அந்த யோக காலத்தில் சில ராசிக்காரர்கள் ஏராளமான நற்பலன்களைப் பெறுவார்கள். வியாபாரம் செய்பவர்கள் தொழிலில் நல்ல லாபத்தைக் காண்பதோடு, முன்னேற்றத்தையும் காண்பார்கள். இப்போது 2023 மார்ச் மாதத்தில் மீன ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் நல்ல செல்வத்தைப் பெறப் போகும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இது வருமான வீடு என்பதால், இந்த யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களின் வருமானத்தில் மிகப்பெரிய உயர்வு ஏற்படப் போகிறது. மேலும் இதுவரை ஏதேனும் முதலீடு செய்திருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து பெரிய லாபத்தைப் பெறலாம். அதோடு இக்காலத்தில் செய்யும் முதலீடுகளும் நல்ல லாபத்தைத் தரும். இக்காலத்தில் உங்கள் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படப் போகிறது. திருமணமானவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் இக்காலத்தில் அரசியலில் இருக்கும் மிதுன ராசிக்காரர்கள் நல்ல மரியாதையைப் பெறுவார்கள் மற்றும் கௌரவம் அதிகரிக்கும். சிலருக்கு நல்ல பதவிகளும் கிடைக்கலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் இந்த யோக காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் இக்காலத்தில் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இது அதிர்ஷ்ட வீடு என்பதால், கடக ராசிக்காரர்களுக்கு இக்காலம் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இக்காலத்தில் செய்யும் அனைத்து வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். மேலும் உங்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருந்தால், இக்காலம் அதற்கு சாதகமாக இருக்கும். வேலை தொடர்பான பயணங்களை செய்ய வாய்புள்ளது. இக்காலகட்டத்தில் உங்கள் தந்தையுடனான உறவு அற்புதமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
