Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
சூரியன்-கேது உருவாக்கும் கிரகண தோஷத்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
சூரியன் மற்றும் கேது துலாம் ராசியில் ஒன்றாக சேர்வது, மங்களகரமாக கருதப்படுவதில்லை. அதே வேளையில் 2022 அக்டோபர் 25 ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழவுள்ளது. எனவே இந்த காலத்தில் 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மற்றும் சேர்க்கை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இவை மனித வாழ்வில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் தற்போது சூரியன் மற்றும் கேதுவும் ஒரே ராசியில், அதுவும் துலாம் ராசியில் உள்ளனர். பொதுவாக நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது, சூரியன் மற்றும் சந்திரனுடன் இணையும் போது தான் கிரகணம் உருவாகிறது. இந்நிலையில் சூரியன் மற்றும் கேது துலாம் ராசியில் ஒன்றாக சேர்வது, மங்களகரமாக கருதப்படுவதில்லை. அதே வேளையில் 2022 அக்டோபர் 25 ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழவுள்ளது. எனவே இந்த காலத்தில் 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

நவகிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒருவரின் தலைமைப் பண்புகளைக் குறிக்கிறது. இது தவிர சூரியன் உடல், ஆன்மா, ஆரோக்கியம், தன்னம்பிக்கை, தந்தையுடனான உறவு, சுயமரியாதை ஆகியவற்றையும் குறிக்கிறது. அதேப் போல் கேது தெய்வீகம், அறிவு, ஆன்மீகம் மற்றும் மன திறன்களைக் குறிக்கிறது. இந்த சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கையால் உருவாகும் கிரகண தோஷ காலத்தில் எந்த 3 ராசிக்காரர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை மேஷ ராசிக்காரர்களுக்கு சற்று வலிமிகுந்ததாக இருக்கும். குறிப்பாக ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஏற்கனவே இதய பிரச்சனை உள்ளவர்கள் இக்காலத்தில் இன்னமும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் செய்பவர்கள் இக்காலத்தில் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளது.

சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சூரியன் கேதுவுடன் இணைவது இந்த ராசிக்காரர்களுக்கு கெடு பலன்களை தரும். முக்கியமாக ஆரோக்கிய விஷயத்தில் சிம்ம ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. வணிகத்தில் முதலீடு செய்ய விரும்பினால், இக்காலத்தில் அதை செய்யாதீர்கள். ஏனெனில் இக்காலமானது உங்களுக்கு சாதகமாக இல்லை.

துலாம்
சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கையால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம். வணிகம் தொடர்பான பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், அதை சற்று ஒத்தி வையுங்கள். ஏனெனில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் தொடங்காமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதய நோயாளியாக இருந்தால், மருந்து மாத்திரைகளை சரியான நேரத்தில் சாப்பிடுங்கள்.

பரிகாரம்
சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கையால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க சூரியன் மற்றும் கேதுவின் பீஜ மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். இது தவிர சூரியன் மற்றும் கேது தொடர்பான பொருட்களை தானம் செய்வது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
