Latest Updates
-
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்..
மீனத்தில் குரு-சூரிய சேர்க்கை: ஏப்ரல் 14 வரை இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..
குரு-சூரிய சேர்க்கையானது ஏப்ரல் 14 வரை நீடித்திருப்பதால், இந்த சேர்க்கையின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவதோடு, நிதி நிலையை மேம்படுத்தவுள்ளது.
Sun And Jupiter Conjunction In Pisces: வேத ஜோதிடத்தில், நவகிரகங்களின் தலைவனான சூரியன் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் எதிரி கிரகமாக கருதப்படும் சனியுடன் இணைந்து பயணித்து வந்தார். எதிரி கிரகங்களின் சேர்க்கையால் இதுவரை பல ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்தித்திருக்கலாம். இந்நிலையில் இந்த சனி-சூரிய சேர்க்கை முடிக்கு வந்துவிட்டது. ஏனெனில் சூரிய பகவான் 2023 மார்ச் 15 ஆம் தேதி மீன ராசிக்கு நுழைந்துள்ளார். இந்த மீன ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணித்து வருகிறார். இதனால் மீன ராசியில் குரு-சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது.

இந்த குரு-சூரிய சேர்க்கையானது ஏப்ரல் 14 வரை நீடித்திருப்பதால், இந்த சேர்க்கையின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு குரு-சூரிய சேர்க்கை நல்ல அதிர்ஷ்டத்தை தருவதோடு, நிதி நிலையை மேம்படுத்தவுள்ளது. இப்போது மீனத்தில் உருவாகியுள்ள குரு-சூரிய சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் குரு-சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் ரிஷப ராசிக்காரர்கள் இந்த சேர்க்கை காலத்தில் பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவதோடு, பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. இதுவரை வேலை தேடிக் கொண்டிருந்தால், இக்காலகட்டத்தில் நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு செல்லும் ஆசை இருந்தால், இக்காலத்தில் அது நிறைவேறும். நண்பர்களால் பெரிய நிதி உதவியைப் பெற வாய்ப்புள்ளது.

கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் குரு-சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் இதுவரை நீங்கள் சந்தித்து வந்த பணப் பிரச்சனைகள் முடிவுக்கு வருவதோடு, நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படவுள்ளது. இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். அரசு வேலை செய்பவர்கள், இக்காலகட்டத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் குரு-சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இதுவரை குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். வேலை தொடர்பான பயணங்களால் நல்ல ஆதாயத்தைப் பெறுவீர்கள். இக்காலத்தில் தைரியமும், வீரமும் நிறைந்து இருப்பீர்கள். அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும். நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
