Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
சனி பகவானின் பரிபூர்ண அருளைப் பெற வேண்டுமா? அப்ப சனிக்கிழமைகளில் இத செய்யுங்க...
சனி பகவானின் அருளைப் பெறுவதற்கு, அவருக்குரிய தினமான சனிக்கிழமைகளில் அவரை வழிபட்டு, ஒருசில விஷயங்களை சனிக்கிழமைகளில் செய்து வந்தால், வாழ்வில் தொடர்ச்சியாக சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
வேத ஜோதிடத்தின் படி, ஒருவர் வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் வெற்றி பெற வேண்டுமானால் சனி பகவானின் அருளைப் பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால், வாழ்வில் பலவிதமான இன்னல்களை சந்திக்க நேரிடும். பொதுவாக சனி பகவான் ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்கக்கூடியவராக நம்பப்படுகிறது. எனவே வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை காணவும், நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக நடக்கவும் வேண்டுமானால், சனி பகவானை அருளைப் பெற முயற்சிக்க வேண்டும்.

சனி பகவானின் அருளைப் பெறுவதற்கு, அவருக்குரிய தினமான சனிக்கிழமைகளில் அவரை வழிபட்டு, ஒருசில விஷயங்களை சனிக்கிழமைகளில் செய்து வந்தால், வாழ்வில் தொடர்ச்சியாக சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இப்போது சனிபகவானின் ஆசியைப் பெற சனிக்கிழமைகளில் செய்ய வேண்டிய அந்த பரிகாரங்கள் என்னவென்பதைக் காண்போம்.

பரிகாரம் #1
சனி பகவானின் ஆசியைப் பெற சனிக்கிழமைகளில் கருப்பு எள்ளு விதைகள், மாவு மற்றும் சர்க்கரை போன்றவற்றை எறும்புகளுக்கு கொடுங்கள். இது வாழ்க்கையில் ஒட்டுமொத்த வெற்றியைப் பெற உதவுவதாக கூறப்படுகிறது.

பரிகாரம் #2
சனிக்கிழமைகயில் கருப்பு நிற பசுக்கள் மற்றும் நாய்களுக்கு பிரட் சாப்பிட கொடுங்கள் மற்றும் பறவைகளுக்கு உணவளியுங்கள். இப்படி செய்வதனால் சனி பகவானின் எதிர்மறை விளைவுகளைத் தடுக்க உதவி புரியும்.

பரிகாரம் #3
சனிபகவானின் அருளைப் பெற விரும்பினால், சனிக்கிழமைகளில் ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்யுங்கள். இதனால் சனி பகவான் மகிழ்ச்சியடைந்து, உங்களுக்கு நல்ல ஆசியை வழங்குவார்.

பரிகாரம் #4
வாழ்வில் சனி பகவானால் ஏற்படும் இடையூறுகளை நீக்க, சனிக்கிழமைகளில் கருப்பு குதிரை ஆணியால் ஆன மோதிரத்தை அணிய வேண்டும். இப்படி செய்வதன் மூலம், வாழ்வில் உள்ள தடைகள் நீங்கி, நற்பலன்கள் கிடைக்கும்.

பரிகாரம் #5
உங்களின் ஆசைகள் விரைவில் நிறைவேற, உங்களின் உயரத்திற்கு ஏற்ப சிவப்பு பட்டு நூலை எடுத்து, சனிக்கிழமை மாலை வேளையில் நீரில் கழுவி, பின் மாங்காய் இலைகளை எடுத்து, மனதில் உங்களின் ஆசைகளை நினைத்துக் கொண்டு இலையில் இந்த நூலை சுற்றி, பின் ஆற்றில் போட வேண்டும். இப்படி செய்தால், உங்களின் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

பரிகாரம் #6
ஏழரை சனி மற்றும் சனியின் தாக்கம் கொண்டவர்கள் சனிக்கிமைகளில் அரச மரத்தை வணங்கி, அந்த மரத்தை ஏழு முறை சுற்ற வேண்டும். அப்படி சுற்றும் போது 'ஓம் ஷம் சனிச்சாய நமஹ' என்னும் மந்திரத்தை சொல்ல வேண்டும். இதனால் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் கிடைக்கும்.

பரிகாரம் #7
அனுமன் சனி பகவானின் நண்பன். எனவே சனி பகவானின் அருளைப் பெற விரும்பினால், அனுமனை சனிக்கிழமைகளில் வழிபடுங்கள். முக்கியமாக சனி சாலிசாவை சனிக்கிழமைகளில் பாராயணம் செய்யுங்கள்.

பரிகாரம் #8
நீங்கள் நிறைய நிதி பிரச்சனையை எதிர்கொண்டிருந்தால், சனிக்கிழமைகளில் அரச மரத்தின் கீழ் 4 முக விளக்கை ஏற்றி வைத்து, சனி பகவானை வழிபடுங்கள். இது பொருளாதார பிரச்சனையைப் போக்கி, குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைக்கச் செய்யும்.

பரிகாரம் #9
சனிக்கிழமைகளில் கருப்பு உளுந்து, கருப்பு பருப்பு மற்றும் கருப்பு நிற ஆடைகளை தானம் செய்தால், சனி பகவானால் சந்திக்கும் பிரச்சனைகள் குறைந்து, சனியின் அருள் கிடைக்கும்.

பரிகாரம் #10
நீங்கள் அடிக்கடி ஏதேனும் ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டு வந்தால், செம்பு பாத்திரத்தில் நீரை நிரப்பி, அதில் எள்ளு விதைகளைப் போட்டு, அதைக் கொண்டு சிவபெருமானுக்கு சனிக்கிழமைகளில் அர்ச்சனை செய்யுங்கள். இதனால் ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications