Latest Updates
-
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா?
வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!
பல நேரங்களில் வீட்டில் பிரச்சனைகள் வருவதற்கு வாஸ்து குறைபாடு முக்கிய காரணமாக இருந்தாலும், வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் இருப்பதும் ஓர் காரணமாகும்.
நாம் குடியிருக்கும் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகம் நிறைந்திருந்தால் தான், குடும்பமானது சந்தோஷமாக இருக்கும். ஆனால் பல சமயங்களில் எதிர்மறை ஆற்றல் காரணமாக வீட்டின் மகிழ்ச்சி பாழாகிறது. எதிர்மறை ஆற்றல் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்தால், நம் மனம் ஒருவித கலக்கத்துடன் இருப்பதோடு, எப்போதும் பிரச்சனைகள் நிறைந்திருக்கும். உங்கள் வீட்டில் திடீரென்று சண்டைகள் அதிகரித்து, எந்த ஒரு வேலையிலும் தடைகள் ஏற்பட்டால், உங்களைச் சுற்றி எதிர்மறை ஆற்றல் நிரம்பியுள்ளது என்று அர்த்தம்.

பல நேரங்களில் வீட்டில் பிரச்சனைகள் வருவதற்கு வாஸ்து குறைபாடு முக்கிய காரணமாக இருந்தாலும், வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் இருப்பதும் ஓர் காரணமாகும். எனவே ஒருவரின் எந்தெந்த விஷயங்கள் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதோடு, வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளையும் அறிந்திருக்க வேண்டும். இப்போது இதுக்குறித்து விரிவாக அறிவோம்.

செய்யக்கூடாத விஷயங்கள்!
வாசனை திரவியங்கள் கூடாது
சாஸ்திரங்களின் படி, ஒருவர் இரவு நேரத்தில் பெர்ஃப்யூம் போன்ற வாசனை திரவியங்களை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் வலுவான வாசனை எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும். எனவே உங்களைச் சுற்றி எதிர்மறை ஆற்றல் சூழ்ந்திருக்கக் கூடாது என்றால், வாசனை திரவியங்களை இரவு நேரத்தில் பயன்படுத்தாதீர்.

இருட்டான வீடு
வீடு, வேலை செய்யும் இடம் அல்லது கடை என எந்த இடத்தையும் இருட்டாக வைத்திருக்கக்கூடாது. ஒரு இடத்தை நீண்ட நேரம் இருட்டாக வைத்திருந்தால், அவ்விடத்தில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

பூஜை செய்யவும்
வீடு நல்ல தெய்வீக கலையுடன் நிரம்பியிருக்க வேண்டுமானால், தினமும் வழிபாடு செய்ய வேண்டும். அதுவும் தினமும் கடவுள்களுக்கு உரிய மந்திரங்களைக் கூறி, தீபம் ஏற்றி, கற்புரம், ஊதுபத்தி போன்றவற்றை ஏற்றி, கடவுளை தவறாமல் வழிபட வேண்டும்.

அசுத்தமான வீடு
யாருடைய வீடு அசுத்தமாக உள்ளதோ, யார் தினமும் குளிக்காமல் இருக்கிறார்களோ, அவ்விடத்தில் எதிர்மறை ஆற்றல் வேகமாக அதிகரிக்கும். எனவே உங்கள் வீட்டையும், உங்களையும் சுத்தமாக வைத்து, நேர்மறை ஆற்றல் நிரம்பியிருக்க செய்யுங்கள்.

வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்:
அறிகுறி #1
உங்கள் வீட்டிற்குள் நீங்கள் எப்போதும் சோர்வாக, ஊக்கமில்லாமல் மற்றும் மனக்குழப்பத்துடன் இருந்தால், வீட்டில் எதிர்மறை ஆற்றல் உள்ளது என்று அர்த்தம். இவற்றை அகற்ற தினமும் வீட்டில் மணி அல்லது சங்கு பயன்படுத்துங்கள்.

அறிகுறி #2
வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் நிரம்பியிருந்தால், எந்த ஒரு விஷயமும் உங்களுக்கு சாதகமாக இருக்காது. அதுவும் எவ்வளவு முற்சித்தும் வாய்ப்பு நழுவிவிடும் இம்மாதிரியான சூழ்நிலையில், விழிப்புடன் இருங்கள் மற்றும் உங்கள் தன்னம்பிக்கையை இழக்காதீர்கள்.

அறிகுறி #3
வீட்டில் எந்த ஒரு காரணமும் இல்லாமல் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது, அடிக்கடி யாரேனும் ஒருவர் நோய்வாய்ப்படுவது போன்றவை எதிர்மறை ஆற்றல் அதிகம் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.



Click it and Unblock the Notifications
