Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கருட புராணத்தின் படி, மரணம் ஒருவரை நெருங்கும் முன் இந்த அறிகுறி-லாம் தெரியுமாம்...
ஒருவர் செய்த செயல்களின் அடிப்படையில் என்ன தண்டனை கிடைக்கும் என்பது குறித்தும் கருட புராணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ஒருவரை மரணம் நெருங்கும் முன் தெரியும் அறிகுறிகள் குறித்தும் கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்து மதத்தில் உள்ள 18 புராணங்களில் ஒன்று தான் கருட புராணம். இதில் மனிதனின் பிறப்பு- இறப்பு, வினைகள், பாவ புண்ணிய பலன்கள் பற்றி விவரித்துக் கூறப்பட்டுள்ளது. சுருக்கமாக கூற வேண்டுமானால், கருட புராணத்தில் மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து நிலைகளும் விளக்கப்பட்டுள்ளன.

ஒருவர் செய்த செயல்களின் அடிப்படையில் என்ன தண்டனை கிடைக்கும் என்பது குறித்தும் கருட புராணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ஒருவரை மரணம் நெருங்கும் முன் தெரியும் ஒருசில அறிகுறிகள் குறித்தும் கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிகுறிகளை ஒவ்வொருவரும் முன்னரே தெரிந்து வைத்துக் கொண்டால், தங்களின் கடைசி ஆசைகளை அல்லது முக்கியமான விஷயங்களை தங்கள் குடும்பத்தினரிடம் கூறலாம். இப்போது மரணம் நெருங்கும் முன் வரும் அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.

அறிகுறி #1
ஒருவரை மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றால், அவருக்கு காரணமின்றி திடீரென்று மனம் சரியில்லாமல் போகும். அந்நேரத்தில் அவர் இதுவரை செய்த பாவங்கள் நினைவிற்கு வரும். அந்த பாவ காரியங்களை நினைத்து வருத்தம் கொள்வார். இதைக் கொண்டு ஒருவரை மரணம் நெருங்குகிறது என்பதை அறியலாம்.

அறிகுறி #2
கருட புராணத்தின் படி, ஒருவரது மரணம் நெருங்குகிறது என்றால் அந்நபரின் கையில் உள்ள ரேகைகள் மறையத் தொடங்கும். எனவே திடீரென்று கையில் உள்ள ரேகைகள் மங்கத் தொடங்குகிறது என்றால், உஷாராகிக் கொள்ளுங்கள்.

அறிகுறி #3
கருட புராணத்தின் படி, பூமியில் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிவடையும் போது, சில நாட்களுக்கு முன்பு கனவுகள் மூலம் சில சமிக்ஞைகள் வரும். அதுவும் அந்த கனவுகளில் உங்கள் முன்னோர்கள் வருவார்கள். அப்படி வரும் போது அவர்கள் அழுவதையோ அல்லது அவர்கள் ஓடிப்போவதையோ கண்டால், உங்களைத் தேடி மரணம் வருகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அறிகுறி #4
கருட புராணத்தின் படி, ஒருவர் எப்போது தங்களைச் சுற்றி எதிர்மறை ஆற்றல் நிரம்பியிருப்பதை உணர்கிறார்களோ, அப்போது அவர்களுக்கு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடைப்பெறப் போகிறது என்று அர்த்தம்.

அறிகுறி #5
கருட புராணத்தின் படி, ஒருவரை மரணம் நெருங்கும் போது, அந்நபர் வித்தியாசமான மற்றும் மர்மமான விஷயங்களைப் பார்க்கத் தொடங்குவார். உதாரணமாக, தீயில் சிக்குவது, வெள்ளத்தில் மாட்டிக் கொள்வது, நிலநடுக்கத்தில் சிக்குவது போன்ற விஷயங்களை காண நேரிடும். இது தவிர, வானில் இருந்து ஒரு பிரகாசமான ஒளியைக் காண நேரிடும். இந்நிலையில் அந்நபரின் நேரம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications