Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
காமத்தைப் பற்றி நமது வேதங்கள் கூறியுள்ள சில அதிர்ச்சிகரமான ரகசியங்கள் என்ன தெரியுமா?
நமது சமூகத்தில் ஒரு காலத்தில் விருப்பமிருந்தால் யாருடன் வேண்டுமென்றாலும் உறவு வைத்துக் கொள்ளலாம் என்ற நிலை நிலவியது. இன்றைய காலக்கட்டத்தில் இது சாத்தியமில்லாத ஒன்றாகும்.
நாகரிகங்கள், உறவுகள், சமூக நடைமுறைகள் மற்றும் நெறிமுறைத் தரங்களின் வளர்ச்சியுடன், இன்று நாம் அறிந்திருப்பதைப் போல பாலியல் ஒரு பாதுகாக்கப்பட்ட வடிவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நம் வரலாற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான பாலினத்திற்கு சமூக கட்டுப்பாடுகள் இல்லாத ஒரு கட்டம் இருந்தது.

நமது சமூகத்தில் ஒரு காலத்தில் விருப்பமிருந்தால் யாருடன் வேண்டுமென்றாலும் உறவு வைத்துக் கொள்ளலாம் என்ற நிலை நிலவியது. இன்றைய காலக்கட்டத்தில் இது சாத்தியமில்லாத ஒன்றாகும். நமது வரலாற்றிலும், வேதங்களிலும் குறிப்பிடப்பட்டள்ள பாலியல் சுதந்திரம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குவதாக உள்ளது. இந்த பதிவில் சில அதிர்ச்சியளிக்கும் பழங்கால பாலியல் நடைமுறைகளை பார்க்கலாம்.

மகாபாரதம்
இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் திறந்த வெளி உடலுறவு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் ஆதிபர்வத்தில் பராசர மகரிஷியும், சத்யவதியும் திறந்த வெளியில் உறவு கொண்டதாக கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாகத்தான் வேதவியாசர் பிறந்தார்.

மகாராஜா ரஞ்சித் சிங்
இந்தியாவின் மிகச்சிறந்த அரசர்களில் ஒருவராக விளங்கியவர் மகாராஜா ரஞ்சித் சிங். சிறந்த ஆட்சியாளராக விளங்கிய இவரின் ஒரே பலவீனமாக இருந்தது இவரின் பாலியல் நாட்டம்தான். இவர் தன்னுடைய யானையை கட்டிவைக்கும் ஒரு திறந்த வெளி இடடத்தில்தான் உறவு கொள்ள விரும்புவார். இந்த இடத்தில் அனைவரும் இவரை பார்க்க இயலும், ஆனால் இவர் அதனைப் பற்றி கவலைப்பட்டதே இல்லை.

கட்கன்குகி விளையாட்டு
பாஜிராவின் காலங்களில், புனேவில் 'கட்கன்குகி' என்ற விளையாட்டு விளையாடப்பட்டது, இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில உயரடுக்கு ஆண்களும், பெண்களும் மற்றவர்களுக்கான பொழுதுபோக்குக்காக உடலுறவு கொள்ளும்படி செய்யப்பட்டனர். ஆண்கள் முதலில் பெண்களின் ஆடைகளை இழுத்து, பின்னர் அவர்களுடன் பொதுவில் உடலுறவு கொள்வார்கள். அனைத்து பெண்களுடனும் அங்கிருக்கும் ஆண்கள் உறவு கொள்ளும்வரை இந்த விளையாட்டு தொடரும்.

குருகுல கல்வி
பண்டைய மத புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளபடி அரச குழந்தைகள் குருகுலங்களுக்கு கல்வி கற்க அனுப்பு வைக்கப்பட்டனர். இந்த குருகுலத்தில் பாலியல் குறித்த கல்வியும் பொதுவானதாக இருந்தது, இவர்கள் குருகுலத்தைப் பற்றி வெளியேறும்போது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ்வதற்கு 'கிரஹஸ்த்-ஆசிரமம்' பற்றி கற்பிக்கப்பட்டனர்.

பெண்களின் பாலியல் ஆசை
ஒரு பெண் உடலுறவு கொள்ள விரும்பினால், அந்த ஆசை ஒரு ஆணால் நிறைவேற்றப்பட வேண்டும் என்று மகாபாரதம் கூறுகிறது, இல்லையெனில் அது சமூகத்தின் முடிவுக்கு வழிவகுக்கும். இதுதான் ஊர்வசி அர்ஜுனனிடம் கூறியது.

கர்ணனின் இராஜ்ஜியம்
மகாபாரதத்தில் துரியோதனன் கர்ணனை அங்க தேசத்துக்கு அரசனாக அறிவித்தார். வரலாற்று வல்லுனர்களின் கருத்துப்படி இந்த பகுதி இந்தியாவின் கிழக்குப் பகுதியில் இருந்தது. இங்கு குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் அடிமைகளாக விற்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

காமசூத்ரா
இந்தியாவின் பிரபலமான பண்டைய கால புத்தகங்களில் ஒன்றாக காமசூத்ரா கருதப்படுகிறது. மகிழ்ச்சியான கலவி வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பது குறித்த குறிப்புகள் இதில் கூறப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள பல தகவல்கள் பல்வேறு மதநூல்களில் இருந்து தொகுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. புராணங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு கொள்வது என்பது தவறான செயலாக கருதப்படவில்லை.

உலூபி
அர்ஜுனனின் நான்கு மனைவிகளில் ஒருவர் உலூபி. இவர் மகாராஜா கௌரவ்யவின் மகள் ஆவார். ஒரு பெண் தன்னுடைய பாலியல் ஆசைகளை தீர்த்துக்கொள்ள ஒரு ஆணுடன் ஒரு இரவு தங்குவதில் எந்த தவறும் இல்லை என்று கூறினார்.



Click it and Unblock the Notifications