Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
சனி உருவாக்கும் கேந்திர திரிகோண ராஜயோகம்... அக்டோபரில் இந்த ராசிக்காரர்களின் செல்வம் பெருகும்..
சனி வக்ர நிவர்த்தியாகும் போது கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகிறது. இது ஒரு சுப யோகம் என்பதால் இதன் பலன் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் அதிக நற்பலனைப் பெறப் போகிறார்கள்.
ஜோதிடத்தில் கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். கிரகங்கள் ராசியை மாற்றுவது மட்டுமின்றி, சில கிரகங்கள் வக்ர நிலையில் பின்னோக்கி பயணிக்கவும் செய்யும். கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றும் அனைத்து ராசிகளையும் பாதிக்கும். குறிப்பாக மிகவும் மெதுவாக நகரும் கிரகமான சனி, மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த சனி பகவான் ஏப்ரல் மாதத்தில் தான் மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு வந்தார். ஜூலை மாதத்தில் மகர ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கினார். இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் சனி வக்ர நிவர்த்தியாகிறார். இப்படி சனி வக்ர நிவர்த்தியாகும் போது கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகிறது. இது ஒரு சுப யோகம் என்பதால் இதன் பலன் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் அதிக நற்பலனைப் பெறப் போகிறார்கள். குறிப்பாக அவர்களின் செல்வ நிலை உயரும் மற்றும் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகும் போது, மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் ஆரம்பிக்கிறது. ஏனெனில் சனி 10 ஆவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்த வீடு தொழில் மற்றும் வேலைக்கான வீடாகும். எனவே இக்காலத்தில் பங்குச் சந்தை மற்றும் ஊக வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பணியிடத்தில் நல்ல பாராட்டைப் பெறுவீர்கள். வணிகர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும். வாகனம் மற்றும் சொத்து வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. உங்களின் வணிகம் மதுபானம், பெட்ரோலிய பொருட்கள், இரும்பு மற்றும் எண்ணெய் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருந்தால், அதிக நற்பலனைப் பெறுவதற்கான அதிக வாய்ப்புள்ளது.

தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது பணம் மற்றும் பேச்சின் வீடாகும். ஆகவே இக்காலத்தில் திடீர் பண ஆதாயங்கள் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். வியாபாரிகள் இக்காலத்தில் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளதால், நிதி நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் ஒவ்வொரு பணியிலும் இந்த ராசிக்காரர்கள் வெற்றி பெறுவார்கள். அதே சமயம் பேச்சு மற்றும் மார்கெட்டிங் துறையுடன் தொடர்புடையவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அரசியலில் இருப்பவர்கள் நல்ல பதவியைப் பெற வாய்ப்புள்ளது.

மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தியடைகிறார். இது வருமானம் மற்றும் லாபத்தின் வீடாகும். எனவே வருமானத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் மூலம் நிறைய பணம் சம்பாதிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பங்குச் சந்தை அல்லது லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தைப் பெறலாம். வாகனம் மற்றும் சொத்து வாங்குவதில் உறுதியாக இருப்பீர்கள். மொத்தத்தில் இக்காலத்தில் சனியின் அருளால் செல்வ செழிப்போடு இருப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
