Latest Updates
-
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது!
உங்க பிறந்த தேதிப்படி 2022 சனிப் பெயர்ச்சி எப்படி இருக்கப் போகுது தெரியுமா?
நியூமராலஜியில், பிறந்த தேதியின் கூட்டுத் தொகையின் ஒற்றை இலக்க எண் தான் ஒருவரது விதி எண் ஆகும். இப்போது ஒருவரது விதி எண்ணின் அடிப்படையில் 2022 சனிப் பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
நவகிரகங்களில் சனி மிகவும் தீய கிரகமாக கருதப்படுகிறது. அதோடு ஒன்பது கிரகங்களிலேயே சனி ஒருவரது வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட சனி மிகவும் மெதுவாக நகரக்கூடியது மற்றும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டுகள் ஆகும். இந்நிலையில் 2022 ஆம் ஆண்டில் சனியின் இரண்டு பெயர்ச்சிகள் நிகழவுள்ளது. அதில் முதலாவதாக 2022 ஏப்ரல் 29 அன்று சனி, மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார்.

இதுவரை 2022 சனிப் பெயர்ச்சியின் 12 ராசிகளுக்குமான பலன்களைப் பார்த்தோம். இப்போது 2022 சனிப்பெயர்ச்சி நியூமராலஜி/எண் கணிதத்தின் அடிப்படையில் எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் காண்போம். நியூமராலஜியில், பிறந்த தேதியின் கூட்டுத் தொகையின் ஒற்றை இலக்க எண் தான் ஒருவரது விதி எண் ஆகும். இப்போது ஒருவரது விதி எண்ணின் அடிப்படையில் 2022 சனிப் பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

விதி எண் 1
2022 சனிப் பெயர்ச்சியால், இந்த விதி எண்ணைச் சேர்ந்தவர்கள் தங்கள் தொழிலில் முழு கவனத்தை செலுத்த முடியும். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் நிலையற்ற தன்மையில் இருப்பவர்களுக்கு இப்பெயர்ச்சி காலம் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் போது, உயர் அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களுடன் சிக்கலை சந்திக்க வாய்ப்புள்ளது.

விதி எண் 2
இரண்டாம் விதி எண்ணைக் கொண்டவர்களுக்கு இப்பெயர்ச்சி காலம் மாணவர்களுக்கு நல்ல வெற்றியைத் தரும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்பம் அதிகரிக்கும். இக்காலத்தில் பொறுமையாக இருந்து எந்த முயற்சியையும் மேற்கொண்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். காதல் மற்றும் உறவைப் பொறுத்தவரை, சற்று கடினமான காலமாகவே இருக்கும்.

விதி எண் 3
சனியின் ராசி மாற்றத்தால், இந்த விதி எண்ணைக் கொண்டவர்களின் எண்ணங்கள் எதிர்பாராத சில சூழ்நிலைகளால் மாறுபடும். காதல் உறவாக இருந்தாலும் அல்லது குடும்ப பிரச்சனைகளாக இருந்தாலும், இந்த எண்ணிற்கு உரியவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு பதிலாக ஒதுங்கி இருப்பார்கள். இக்காலத்தில் ஒதுங்கி இருப்பதைத் தவிர்த்து, முயற்சிகளை மேற்கொண்டால் இலக்குகளை எளிதில் அடைய உதவியாக இருக்கும். நிதி நிலையைப் பொறுத்தவரை, சில தனிப்பட்ட செலவுகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். பணத்தை கவனமாக கையாள வேண்டும்.

விதி எண் 4
சனி பெயர்ச்சியால் இந்த விதி எண்ணிக்குரியவர்கள் உறவுகளில் சில கடினமான சூழ்நிலைகளை சந்திக்கக்கூடும். எனவே உறவுகளிலும், திருமண வாழ்க்கையிலும் சற்று கூடுதல் கவனம் செலுத்துங்கள். அதேப் போல் வியாபாரத்திலும், கூட்டாண்மையிலும் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் கூட்டாளருடன் அடிக்கடி ஈகோ மோதல்கள் ஏற்படலாம். முக்கியமாக சில வரம்புகள் காரணமாக வேலையில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட முடியாமல் போகலாம்.

விதி எண் 5
சனிப் பெயர்ச்சியால் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் கடினமானதாக இருக்கும். உங்கள் வேலை மற்றும் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொள்ள, உங்கள் திறன்களை மேம்படுத்த வேண்டும், அறிவாளியாக இருக்க வேண்டும், மேலும் அதிக பொறுப்புகளை ஏற்க வேண்டும். வணிகர்கள் இக்காலத்தில் கடுமையான போட்டியை எதிர்கொள்ள நேரிடும். நிதி விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். முட்டாள்தனமாக எந்த செலவுகளையும் செய்துவிடாதீர்கள். பின் அவஸ்தைப்படுவீர்கள்.

விதி எண் 6
2022 சனிப் பெயர்ச்சி பணிபுரிபவர்களுக்கு சரியான முன்னேற்றத்தைக் கொண்டு வரும். இருப்பினும் வியாபாரிகள் தங்கள் விற்பனையை அதிகரிக்க ஒரு நில்ல உத்தியை உருவாக்க வேண்டும். பணிபுரிபவர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். மோசமான நட்பு மற்றும் மோசமான நடத்தைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சாதகமான காலம் அல்ல. எனவே சற்று கவனமாக இருங்கள்.

விதி எண் 7
இந்த விதி எண்ணைக் கொண்டவர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி காலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிறைய சோதனைகளை சந்திப்பீர்கள். தொழிலதிபர்கள் கடினமாக உழைக்க வேண்டும் மற்றும் தங்கள் வாய்ப்புக்காக அமைதியாக காத்திருக்க வேண்டும். வேலை தேடுபவர்கள் தங்கள் வேலைகளையும் பதவிகளையும் பாதுகாப்பாக வைத்திருக்க தங்கள் செயல்திறனை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். இருப்பினும் புதிய வேலையைத் தேடுபவர்களுக்கு அல்லது வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இக்காலம் சாதகமான காலம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியற்று இருப்பார்கள்.

விதி எண் 8
சனிப் பெயர்ச்சியால் இந்த விதி எண்ணைக் கொண்டவர்களின் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். யாரேனும் நிதி உதவி கேட்டு வந்தால், இல்லை என்று வெட்கப்படாமல் கூறுங்கள். ஏனெனில் நிதி பிரச்சனையை சந்திக்கும் வாய்ப்புள்ளது. முதலீடுகளை மிகவும் கவனமாக செய்யுங்கள். இருப்பினும், வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வளர்ச்சி அல்லது விற்பனையில் முதலீடு செய்ய இது நல்ல நேரம். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் சற்று துடிப்புடன் இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் இருக்காது.

விதி எண் 9
இந்த விதி எண்ணைக் கொண்டவர்களின் நிதி நிலைமை சற்று மோசமாக இருக்கும். எனவே யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்த்திடுங்கள். திட்டமிடப்படாத மற்றும் தேவையற்ற செலவுகளால் அதிக சுமைக்கு ஆளாவீர்கள். தொழிலில் பல மோசமான விளைவுகளை எதிர்பார்க்கலாம். மாணவர்களுக்கு, இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்காது. வனச்சிதறல் மற்றும் விடாமுயற்சியின்மை போன்றவற்றால் உங்கள் இலக்குகளை அடைய முடியாமல் போகலாம்.



Click it and Unblock the Notifications