Latest Updates
-
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்..
சனி பகவானின் கோபத்தைக் குறைக்கணுமா? அப்ப சனி அமாவாசை அன்று இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...
சனி அமாவாசை நாளில் சனி பகவானை வழிபட்டு ஒருசில பரிகாரங்களை செய்து வந்தால், ஏழரை சனி மற்றும் பிற சனி தோஷங்களில் இருந்தும் விடுபடலாம்.
சனி அமாவாசை என்பது சனிக்கிழமையில் வரும் அமாவாசை ஆகும். இந்த முறை சித்திரை மாத அமாவாசை சனிக்கிழமையில் வருகிறது. அதோடு சனிக்கிழமையில் வரும் அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுவாக அமாவாசை நாட்களில் மக்கள் புண்ணிய நதிகளில் நீராடி, ஏழைகளுக்கு தங்களால் முடிந்த அளவு அன்னதானம் செய்வார்கள். இது பாவத்தைப் போக்கி புண்ணியத்தை சேர்க்கிறது.

மேலும் சனிக்கிழமை சனி பகவானுக்கு உரிய நாளாகும். இந்நாளில் சனி பகவானை வழிபடுவது மிகவும் நல்லது. அதிலும் சனி அமாவாசை நாளில் சனி பகவானை வழிபட்டு ஒருசில பரிகாரங்களை செய்து வந்தால், ஏழரை சனி மற்றும் பிற சனி தோஷங்களில் இருந்தும் விடுபடலாம். இப்போது சனி அமாவாசை எப்போது, அதன் தேதி என்ன மற்றும் ஏழரை சனி மற்றும் சனி தோஷங்களில் இருந்து விடுபடுவதற்கான சில பரிகாரங்கள் குறித்து காண்போம்.

2022 சனி அமாவாசை தேதி
சித்திரை மாத அமாவாசை 2022 ஏப்ரல் 30 ஆம் தேதி வருகிறது. இந்த அமாவாசை திதி சனிக்கிழமையில் வருகிறது. எனவே இந்த சனிக்கிழமையில் சனி பகவானை வழிபட்டால், அவரின் கோபத்தைக் குறைத்து அருளைப் பெறலாம்.

2022 சனி அமாவாசை தின கிரக நிலைகள்
சித்திரை அமாவாசை அன்று கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலை சற்று அரிதானது. ஏனெனில் இந்நாளில் சூரியன், சந்திரன் மற்றும் ராகு மேஷ ராசியிலும், சனி மற்றும் செவ்வாய் கும்ப ராசியிலும் இருப்பார்கள். அதேப் போல் குருவும், சுக்கிரனும் மீன ராசியில் சேர்ந்து இருப்பார்கள்.

சனி பகவானை இப்படி வழிபடுங்கள்
சனி அமாவாசை தினத்தன்று காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு, மரத்தின் அடியில் ஒரு கருப்பு துணியை விரிக்க வேண்டும். பின் அந்த துணியில் சனி தேவரின் சிலை, யந்திரம் மற்றும் வெற்றிலையை வைத்த பின், கடுகு எண்ணெய் விளக்கை ஏற்ற வேண்டும். பின் நீல நிற பூக்களை சனி பகவானுக்கு அர்ப்பணிக்கவும். பின்னர் பூரி போன்ற எண்ணெயில் பொரித்த உணவை சனி பகவானுக்கு படைத்து வணங்க வேண்டும்.

கடுகு எண்ணெய் விளக்கு ஏற்றுங்கள்
சனி அமாவாசை தினத்தன்று மாலை வேளையில் சனி பகவானுக்கு கடுகு எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றுங்கள் அதோடு சனி பகவானுக்கு கருப்பு நிற துணியை வாங்கி கொடுங்கள். பின்னர் சனி சாலிசாவை பாராயணம் செய்யுங்கள். அதுமட்டுமின்றி, அரச மரத்தடியில் சனி பகவானை நினைத்து தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பித்ரு தோஷத்தில் இருந்தும் விடுதலை கிடைக்கும்.

அனுமனை வணங்குங்கள்
சனி அமாவாசை நாளில் சனி பகவானை மட்டுமின்றி, அனுமனையும் வணங்குங்கள். அனுமனின் பக்தர்களுக்கு சனி பகவான் எப்போதும் ஆசியை வாரி வழங்குவார். எனவே சனி பகவானின் அருளைப் பெற நினைத்தால், சனி அமாவாசை அன்று கண்டிப்பாக அனுமனை நினைத்து அனுமன் சாலிசாவை பாராயணம் செய்யுங்கள். மேலும் அனுமனை தரிசனம் செய்து வழிபட்டால், சனியின் தோஷங்கள் அனைத்தும் நீங்கி, வாழ்வில் உள்ள தடைகளும் நீங்கும்.

ருத்ராட்சம் அணியுங்கள்
சனி அமாவாசை அன்று ஏழு முகம் கொண்ட ருத்ராட்சத்தை வாங்கி கங்கை நீரில் கழுவி அணியுங்கள். இப்படி செய்தால் வாழ்வில் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் சனி அமாவாசை அன்று 'ஓம் ப்ரம் ப்ரேம் ப்ருண் சஹ சனிச்சராய நம' மற்றும் 'ஓம் சனிச்சராய நம' ஆகிய இரண்டு மந்திரங்களையும் சொல்ல வேண்டும். முக்கியமாக இந்நாளி ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும்.

பித்ரு தோஷம் நீங்குவதற்கு...
சனி அமாவாசை நாளன்று அரச மரத்தின் கீழ் நான்கு முக தீபம் ஏற்றி சனி பகவானை வழிபட வேண்டும். இதனால் செல்வமும், புகழும் பெருகும். அதுவும் கடுகு எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் பணப் பிரச்னைகள் நீங்குவதுடன், பணப் பற்றாக்குறையும் இருக்காது என்பது நம்பிக்கை.

கருப்பு நிற பொருட்களை தானம் செய்யுங்கள்
சனி அமாவாசை அன்று ஏழைகளுக்கு கருப்பு உளுத்தம் பருப்பு, கருப்பு நிற துணி போன்ற பொருட்களை தானம் செய்தால், சனி தோஷம் நீங்கி, சனிபகவானின் அருள் கிட்டும்.



Click it and Unblock the Notifications