Latest Updates
-
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்!
ஸ்வப்ன சாஸ்திரப்படி, கனவில் இந்த மிருகங்களைப் பார்த்தால் அதிர்ஷ்டம் அடிக்கப் போகுதுன்னு அர்த்தமாம்..
ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, கனவுகள் எதிர்காலத்துடன் தொடர்புடையவை. வரவுள்ள சில நல்ல மற்றம் கெட்ட நிகழ்வுகளை இது உணர்த்துகிறது.
தூக்கத்தில் ஆழ்ந்த நிலைக்கு செல்லும் போது தான் ஒருவருக்கு கனவு வருகிறது. இப்படி வரும் கனவுகள் குறித்து இன்று வரை ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் சாஸ்திரங்களை நீஙகள் நம்புபவராயின், அதில் கனவு காண்பவர் பற்றிய சில குறிப்புகள் நிச்சயம் இருக்கும். அதில் ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, கனவுகள் எதிர்காலத்தைப் பற்றி நம்மை எச்சரிக்கின்றன. பெரும்பாலான நேரங்களில் கனவுகளில் நாம் நினைக்கும் மற்றும் திட்டமிடும் விஷயங்கள் அல்லது நிகழ்வுகளைக் காண்போம். ஆனால் நமது கனவுகளுக்கும், விழிப்பு நிலைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அதனால் தான் சில கனவுகளை நாம் மறந்துவிடுகிறோம். பண்டைய காலங்களிலிருந்து கனவுகள் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.

ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, கனவுகள் எதிர்காலத்துடன் தொடர்புடையவை. வரவுள்ள சில நல்ல மற்றம் கெட்ட நிகழ்வுகளை இது உணர்த்துகிறது. கனவுகளில் பல வகைகள் உள்ளன. சில கனவுகள் நல்லதையும், சில கனவுகள் கெட்டதையும் குறிக்கின்றன. அதில் பலரும் கனவில் விலங்குகளை காண்போம். அதுவும் பின்வரும் விலங்குகளைக் கண்டால், அவை நல்லது நடக்கப் போவதைக் குறிக்கிறது.

கனவில் யானையைப் பார்ப்பது
ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, கனவில் யானையைக் கண்டால், அது நல்லது நடக்கப் போவதைக் குறிக்கிறது. அதோடு கனவில் யானையைப் பார்ப்பது நல்ல அதிர்ஷ்டத்துடன், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு அதிகரிப்பதைக் குறிக்கிறது. அதிலும் நீங்கள் யானை மேல் சவாரி செய்வது போல் கனவு கண்டல், வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும் மற்றும் செல்வம் பெருகும் என்றும் அர்த்தம்.

கனவில் பசுவைப் பார்ப்பது
ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, கனவில் பசுவைப் பார்ப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் பசு கனவில் வருவது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கப் போவதைக் குறிக்கிறது. கனவில் வெள்ளை நிற மாடு வந்தால், வெள்ளை நிறம் தொடர்பான விஷயங்களில் பலன்கள் கிடைக்கும் என்று அர்த்தம். அதுவே பசு கன்று கனவில் தெரிந்தால், செல்வம் பெருகப் போகிறது என்று அர்த்தம்.

கனவில் நாயைப் பார்ப்பது
கனவில் நாயைப் பார்ப்பது நல்ல அறிகுறி. ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, கனவில் நாய் கடித்தால், நீங்கள் பெரிய பிரச்சனைகளில் இருந்து விடுபடப் போகிறீர்கள் என்று அர்த்தம். அதுவே நாய் உங்கள் கனவில் ஓடினால், அது உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தின் அறிகுறியாகும்.

கனவில் பூனையைப் பார்ப்பது
கனவில் பூனையைக் கண்டால், அதுவும் நல்ல அறிகுறியாகும். அதுவும் கனவில் காட்டுப் பூனையைப் பார்த்தால், உங்கள் இலக்கு நிறைவேறப் போகிறது என்று அர்த்தம். அதாவது தொழில், வாழ்க்கை என்று எதை நினைத்தாலும் அது நிறைவேறும்.

கனவில் தவளையைப் பார்ப்பது
கனவில் ஒரு தவளையை உங்கள் கையில் வைத்திருப்பது போன்று கண்டால் அது நல்ல அறிகுறியாகும். கனவில் தவளையைப் பார்ப்பது உங்கள் வேலையில் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்பதைக் குறிக்கிறது. மேலும் பல புதிய வழிகள் உங்களுக்கு திறக்கும்.



Click it and Unblock the Notifications
