For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சபரிமலை மகரஜோதியின் ரகசியம் தான் என்ன?

மகர ஜோதி என்பது மகர விளக்கு பூஜை தினத்தில் சாஸ்தாவான ஐயப்பன் நட்சத்திரமாக தோன்றி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் அபூர்வ நிகழ்வாகும். இந்த அற்புத காட்சியை காணவேண்டியே, ஐயப்ப பக்தர்கள் 48 நாட்கள் முதல்

|

மகர ஜோதி என்பது மகர சங்கராந்தி தினமான தை மாதம் 1ஆம் தேதி மாலையில் சூரியன் மறையும் நேரத்தில் வானில் தோன்றும் ஒரு புனிதமான நட்சத்திரமாகும். மற்ற நாட்களில் அது தெரியாது. அண்டவெளியில் எத்தனையோ கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருக்கின்றன. அதில் சில நட்சத்திரங்கள் சில ஆண்டுகளுக்கு ஒரு முறையும், சில 100 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், இன்னும் சில சில மாதங்களுக்கு ஒரு முறையும் என தெரிவதுண்டு. அது மாதிரி தான் மகர ஜோதியன்று தெரியும் நட்சத்திரமும்.

Secrets of Makara Jyothi Darshanam

நம்முடைய தந்தை யார் என்று நம் தாய் சொல்லித்தான் நமக்கு தெரியும். நாமும் அதை தான் உண்மை என்று நம்பிக்கொண்டு தான் இருக்கிறோம். அதை விடுத்து, அதெல்லாம் நான் நம்ப மாட்டேன், டி.என்.ஏ பரிசோதனை செய்து பார்த்த பிறகு தான் நான் நம்புவேன் என்று உலகத்தில் உள்ள அனைவருமே கிளம்பிவிட்டால் என்ன ஆகும். அது போலவே பக்தியும் நம்பிக்கையின் பேரில் ஏற்படுவது. பக்தி என்பது நம்பிக்கை மற்றும் உணர்ச்சி பூர்வமான ஆன்மீக உணர்வு ஆகும். அதை அனுபவபூர்வமாக உணர்ந்து அறிந்துகொண்டவர்களுக்கு தான் அதன் மகத்துவம் தெரியும். அதை உணர்ந்தவர்கள் அதன் பின்பு, இத்தனை நாள் நாம் இதை உணராமல் காலத்தை வீணடித்து விட்டோமே என்று தங்களைத் தாங்களே திட்டிக்கொள்வார்கள்.

MOST READ: உங்க ராசிக்கு 2020 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இத படிங்க...

கடவுள் நம்பிக்கை மற்றும் பக்தியையும் உணராதவர்கள் தான் பக்தியாவது புடலங்காயாவது என்று சற்று திமிராகவும், நாத்தீகவாதிகள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் பகுத்தறிவாளிகள், ஒரு படி மேலே போய், கடவுளாவது மண்ணாங்கட்டியாவது எல்லாமே காசு சம்பாதிக்கிறதுக்காக அப்பாவி மக்களை ஏமாத்திக்கிட்டு இருக்காங்க, என்று பிதற்றிக் கொண்டிருப்பார்கள். அதற்கு காரணம், அந்த பகுத்தறிவாளிகள் தன்னைத் தானே புத்திசாலி என்று நம்பிக்கொண்டிருப்பதால் தான். சபரிமலை ஐயப்பனின் மகர ஜோதி தரிசனத்திலும் சில நாத்தீகவாதிகள் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மகர ஜோதி தரிசனம்

மகர ஜோதி தரிசனம்

மகர ஜோதி என்பது மகர விளக்கு பூஜை தினத்தில் சாஸ்தாவான ஐயப்பன் நட்சத்திரமாக தோன்றி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் அபூர்வ நிகழ்வாகும். இந்த அற்புத காட்சியை காணவேண்டியே, ஐயப்ப பக்தர்கள் 48 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையில் கடுமையான விரத முறைகளை கடைபிடித்து வருவார்கள். இறுதியில் இருமுடி கட்டிக்கொண்டு மகர விளக்கு பூஜை தினத்தன்று சபரிமலைக்கு வந்து காத்திருப்பார்கள்.

மகர சங்கராந்தி

மகர சங்கராந்தி

மகர ஜோதி என்பது மகர சங்கராந்தி தினமான தை மாதம் 1ஆம் தேதி மாலையில் சூரியன் மறையும் நேரத்தில் வானில் தோன்றும் ஒரு புனிதமான நட்சத்திரமாகும். மற்ற நாட்களில் அது தெரியாது. அண்டவெளியில் எத்தனையோ கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருக்கின்றன. அதில் சில நட்சத்திரங்கள் சில ஆண்டுகளுக்கு ஒரு முறையும், சில 100 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், இன்னும் சில சில மாதங்களுக்கு ஒரு முறையும் என தெரிவதுண்டு.

மகர நட்சத்திரம்

மகர நட்சத்திரம்

அது மாதிரிதான் மகர ஜோதியன்று தெரியும் நட்சத்திரமும். இது 365 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தோன்றும் ஒரு அரிய நிகழ்வாகும். இதனை நம் முன்னோர்களான சித்தர்களும், ரிஷிகளும் தொடர்ந்து பல ஆண்டுகள் ஆராய்ந்து பார்த்த பின்பு தான் உண்மை என்று ஒப்புக்கொண்டார்கள். நாமும் அதை ஒப்புக்கொள்வது தான் கடவுள் மீது பக்தி செலுத்துவது என்பது உண்மையான பக்தியாகும்.

பொன்னம்பல மேட்டில் தரிசனம்

பொன்னம்பல மேட்டில் தரிசனம்

அதே போல், மகர விளக்கு என்பது மகர சங்கராந்தி தினமான, அதே தை 1ஆம் தேதி மாலை 6.40 மணியளவில், காட்டில் குடியிருந்து வரும் ஆதிவாசிகள், ஐயப்பனுக்காக பொன்னம்பல மேட்டில் காட்டும் கற்பூர ஆரத்தியாகும். எப்படி திருவண்ணாமலையில் கார்த்திகை தீப தினத்தன்று மலையில் தீபம் ஏற்றுகின்றனரோ, அது போலவே தான், மகர விளக்கு பூஜையன்று வானில் தோன்றும் நட்சத்திரத்தை அடுத்து நடக்கும் கற்பூர ஆரத்தி என்பதும். எனவே மகர ஜோதி, மகர விளக்கு தரிசனம் என்பது அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வாகும். பெரும்பாலானவர்கள் இரண்டையும் சேர்த்து குழப்பிக்கொள்கின்றனர்.

பகுத்தறிவுவாதிகள்

பகுத்தறிவுவாதிகள்

சில பகுத்தறிவு நாத்தீகாவாதிகளோ, மகர ஜோதி என்பது, பொன்னம்பல மேட்டில் உள்ள கண்கானிப்பு கோபுரத்தில் ஏறி நின்று கொண்டு, பெரிய அண்டாவில் கற்பூரத்தை கொளுத்திப்போட்டு தூக்கி பிடித்துக்கொள்கின்றனர். சபரிமலையில் இருந்து பார்க்கும் பக்தர்களுக்கு அது மகர ஜோதியாக கண்ணுக்கு தெரிகிறது என்று உளறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secrets of Makara Jyothi Darshanam

Makara Jyoti Darshanam is a sacred star that appears in the sky at sunset on the evening of the 1st day of Thai Month, the day of Makara Sankranti.
Story first published: Thursday, November 21, 2019, 11:52 [IST]
Desktop Bottom Promotion