Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
இந்த ராசிக்காரங்க மனசுக்குள்ள வஞ்சம் வைச்சு உங்கள பழிவாங்குவாங்களாம்... உஷாரா இருங்க...!
ஒவ்வொரு ராசிக்காரரும் தங்களின் கோபத்தை ஒவ்வொரு விதத்தில் வெளிப்படுத்துவார்கள். சிலர் கோபத்தில் என்ன செய்கிறோம் என்றே தெரியாத வண்ணம் மோசமான செயல்களில் ஈடுபடுவார்கள்.
கோபம் என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு அடிப்படையான மற்றும் அத்தியாவசியமான உணர்வாகும். சிலசமயங்களில் கோபம் என்பது நியாயமானதாக இருக்கும், ஆனால் சிலசமயம் நமது கோபத்தில் நியாயமே இருக்காது, இருப்பினும் நாம் பிடிவாதமாக இருப்போம். யாராவது கோபத்தில் பைத்தியக்காரத்தனமாக இருப்பதை பார்த்தால் நம் உள்ளுணர்வு முதலில் கூறுவது அவர்களிடம் இருந்து விலகியிருப்பதுதான்.

ஒவ்வொரு ராசிக்காரரும் தங்களின் கோபத்தை ஒவ்வொரு விதத்தில் வெளிப்படுத்துவார்கள். சிலர் கோபத்தில் என்ன செய்கிறோம் என்றே தெரியாத வண்ணம் மோசமான செயல்களில் ஈடுபடுவார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் அப்படிப்பட்டவர்கள் அருகில் இருப்பதே ஆபத்தானதாகும். இப்படி மூர்க்கத்தனமாக கோபப்படுவதற்கு அவர்களின் பிறந்த ராசியும் ஒரு காரணமாக இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் மூர்க்கமாக கோபப்படுவார்கள் என்று பார்க்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் சின்னமே காளைதான், எனவே அவர்கள் எவ்வளவு கோபப்படுவார்கள் என்பதை எந்த அளவுகோலாலும் அளவிட முடியாது. கோபத்தில் இருக்கும் போது இவர்கள் வன்முறையாகவும், வெறித்தனமாகவும் நடக்கத் தொடங்கிவிடுவார்கள். இவர்கள் எப்போதாவதுதான் மற்றவர்களின் பேச்சை கேட்பார்கள், இவர்களின் பிடிவாதம் அனைவர்க்கும் எரிச்சலூட்டுவதாக இருக்கும். தங்களின் கோபம் இவர்களுக்கு எப்போதுமே நியாயமானதாகத்தான் தெரியும். இவர்கள் கோபத்தில் இருக்கும்போது இவர்களை சமாதானப்படுத்த முயலாமல் இருப்பதே நல்லது, ஏனெனில் சிறிது நேரத்தில் இவர்களின் கோபம் குறைந்துவிடும்.

கடகம்
கடக ராசிக்காரர்களின் தோற்றத்தை வைத்து அவர்கள் மிகவும் அமைதியானவர்கள் என்று நினைத்துவிடாதீர்கள். ஏனெனில் கோபத்தின் போது இவர்கள் மிகவும் மூர்கத்தனமாவர்களாக மாறிவிடுவார்கள். பொதுவாக இவர்கள் கோபப்படும் போது முதலில் எச்சரிக்கை கொடுப்பார்கள், அதை கவனிக்காவிட்டால் வெடித்து சிதறுவார்கள். கோபத்தை வெளிப்படுத்தும் போது இவர்கள் வெடித்துச் சிதறும் எரிமலை போல இருப்பார்கள், இவர்களின் கோபம் அனைவரையும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கும். இவர்களின் கோபம் அவ்வளவு விரைவில் குறையாது, இவர்கள் எவ்வளவு அன்பாக இருக்கிறார்களோ அதேயளவிற்கு கோபப்படவும் செய்வார்கள். இவர்களின் கோபத்தில் இருந்து தப்பிப்பது மிகவும் கடினம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் கோபமாக இருக்கும்போது அதனை சுற்றியிருக்கும் அனைவரும் அறிவார்கள், தங்கள் கோபத்தை ஒருபோதும் இவர்கள் அடக்கி வைக்கமாட்டார்கள். இவர்களின் ஆற்றலும், வேகமும் கோபமாக மாறும்போது அது மிகவும் ஆபத்தானதாக மாறிவிடும். கோபமாக இருக்கும் மேஷ ராசிக்காரர்கள் அருகில் இருப்பது என்பது கன்னிவெடி மீது கால் வைப்பது போன்றதாகும். இவர்கள் தங்களின் கோபத்தையும், விரக்தியையும் ஒருபோதும் மறைத்து வைக்கமாட்டார்கள். கோபம் வந்துவிட்டால் இருக்குமிடம், சூழ்நிலை என எதையும் இவர்கள் கருத்தில் கொள்ள மாட்டார்கள், வெடித்து சிதறிவிடுவார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் பொதுவாக அனைவரின் மீதும் ஆதிக்கம் செலுத்துவார்கள். இவர்களின் கோபம் வெறும் கோபமாக இருக்காது ஆத்திரமாக இருக்கும். தங்களின் கோபத்தை கத்துவதன் மூலம் இவர்கள் வெளிப்படுத்துவார்கள். யார்மேல் கோபமோ அவர்களை என்ன செய்யவும் இவர்கள் தயங்க மாட்டார்கள். கோபத்தில் இருக்கும்போது தங்களின் கருத்தில் இருந்து இவர்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். மற்றவர்களின் மீது அதிகாரத்தை காட்டுவதற்கு தங்களின் கோபத்தை இவர்கள் பயன்படுத்துவார்கள்.

விருச்சிகம்
பொதுவாக விருச்சிக ராசிக்காரர்கள் தங்களின் கோபத்தையும், மனக்கசப்பையும் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்வார்கள். ஆனால் இவர்களின் கோபம் மிகவும் ஆபத்தானதாகும், மனதில் வஞ்சம் வைத்து அதற்காக சரியான சமயத்தில் கோபத்தை வெளிப்படுத்தி பழிவாங்குவார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் உங்கள் மீது கோபமாக இருப்பதை உங்களால் அறிந்து கொள்ளவே முடியாது, ஆனால் அவர்களால் உங்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் அவர்கள் உங்கள் மீது எவ்வளவு கோபமாக இருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இது இவர்களிடம் இருக்கும் மோசமான குணமாகும்.



Click it and Unblock the Notifications
