Latest Updates
-
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம்
சனி பகவான் 2025 ஆம் ஆண்டு வரை இந்த 5 ராசிக்காரங்களுக்கு கஷ்டத்தை தருவாராம்.. உங்க ராசி இதுல இருக்கா?
சனி இந்த கும்ப ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை இருப்பார். இதனால் கும்பம் உட்பட 4 ராசிக்காரர்கள் சனி பகவானால் அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள்.
வேத ஜோதிடத்தில் சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். இந்த சனி பகவான் பாரபட்சம் பாராமல் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருபவர். இந்த சனி நவகிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ராசியை மாற்ற 2 1/2 ஆண்டுகள் ஆகும். ஒருவரது ஜாதகத்தில் சனி நல்ல வலுவான நிலையில் இருந்தால், அவர் நல்ல வவதியான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார். அதுவே மோசமான நிலையில் இருந்தால், அவருக்கு பல கஷ்டங்களைத் தந்து, வாழ்க்கையைப் புரிய வைப்பார்.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அதாவது ஜனவரி 17 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சென்றார். சனி கும்ப ராசிக்கு செல்லும் போது, மகர ராசிக்கு ஏழரை சனியின் கடைசி கட்டமும், கும்ப ராசிக்கு ஏழரை சனியின் இரண்டாவது கட்டமும், மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டமும் தொடங்குகிறது. பொதுவாக ஏழரை சனி காலத்தில் சனி பகவான் பல வேதனைகளைத் தருவார். சனி இந்த கும்ப ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை இருப்பார். இதனால் கும்பம் உட்பட 4 ராசிக்காரர்கள் சனி பகவானால் அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி பகவான் உள்ளார். இதனால் கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்கிவிட்டது. எனவே கடக ராசிக்காரர்கள் அனைத்து விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் இந்த காலத்தில் படிப்பில் சிரமத்தை சந்திப்பார்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். மேலும் அலுவலகத்தில் பல சவால்களை சந்திக்க நேரிடும். திருமணமானவர்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி பகவான் உள்ளார். இதனால் இக்காலத்தில் கலவையான பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்படுவார்கள். இருப்பினும் மாணவர்கள் கடினமாக உழைத்தால் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அடிக்கடி செரிமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி பகவான் உள்ளார். இதனால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி தொடங்கிவிட்டது. இதனால் விருச்சிக ராசிக்காரர்களின் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. வேலையை மாற்ற திட்டமிட்டிருந்தால், சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. சொல்லப்போனால், அதை இக்காலத்தில் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் இக்காலத்தில் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படுவார்கள். வியாபாரம் செய்பவர்கள் தொழிலில் ஏற்றத்தாழ்வுகளை காணலாம்.

கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி பகவான் உள்ளார். இதனால் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்கியுள்ளது. ஏழரை சனியின் இரண்டாவது கட்டம் நடைபெறுவதால், 2025 வரை கும்ப ராசிக்காரர்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அதற்கேற்ற பலன் கிடைக்காமல் கஷ்டப்பட வேண்டியிருக்கும். முக்கியமாக உறவுகளில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமணமான தம்பதிகள் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடும். கோபத்தை கட்டுப்படுத்தாவிட்டால், அது விரிசலை ஏற்படுத்திவிடும்.

மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் உள்ளார். இதனால் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் தொடங்குகிறது. இதனால் இனிமேல் மீன ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். பணப்பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். உங்களால் பணத்தை சேமிக்க முடியாமல் போகும். சொந்தமாக தொழில் செய்பவர்கள் தேவையில்லாத செலவுகளை சந்திக்கக்கூடும். மாணவர்கள் இக்காலத்தில் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படக்கூடும். இதனால் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெற முடியாமல் போகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications