Latest Updates
-
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.
சனியின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 6 ராசிக்காரங்க பையில பணம் அதிகம் சேரப் போகுது..
சனியின் இந்த நட்சத்திர மாற்றத்தின் தாக்கமானது 12 ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும், இந்த சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக, அதிக நற்பலனைத் தரவுள்ளது.
Saturn Transit in Sathayam Nakshatra In March 2023: ஜோதிடத்தில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. அந்த நட்சத்திரங்களில் 24 ஆவது நட்சத்திரம் தான் சதயம். இந்த சக்தி வாய்ந்த நட்சத்திரத்தின் அதிபதி ராகு. ஆனால் இந்த சதயம் கும்ப ராசியில் அமைந்துள்ளது. வேத ஜோதிடத்தின் படி, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ராகுவின் ஆற்றலைக் கொண்டிருப்பதோடு, தனித்துவமான பண்புகளையும் கொண்டிருப்பார்கள். குறிப்பாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மருத்துவ துறையில் சிறந்து விளங்குவார்கள். மேலும் தாவரங்கள் மற்றும் மூலிகைகளின் மருத்துவ குணங்கள் பற்றிய ஆழமான அறிவைக் கொண்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த சதய நட்சத்திரத்திற்கு சனி பகவான் செல்லவுள்ளார். அதுவும் மார்ச் 15 ஆம் தேதி காலை 11.40 மணிக்கு செல்லவுள்ளார். இந்த சதய நட்சத்திரத்தில் சனி பகவான் 2023 அக்டோபர் 17 ஆம் தேதி வரை இருப்பார். சனியின் இந்த நட்சத்திர மாற்றத்தின் தாக்கமானது 12 ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும், இந்த சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக, அதிக நற்பலனைத் தரவுள்ளது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! சனியின் நட்சத்திர மாற்றத்தால் புதிய தொழில் தொடங்க விரும்பினால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்கள் தங்களின் வணிகத்தை விரிவாக்க நல்ல வாய்ப்பைப் பெறுவார்கள். சனி தனது அசல் முக்கோண ராசியில் மற்றும் சதய நட்சத்திரத்தில் இருப்பதால், மேஷ ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பண பலன்கள் கிடைப்பதோடு, அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! சனி உங்கள் ராசியின் 9 ஆவது வீட்டில் இருப்பதால், தொழில் காரணமாக பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களின் ஆசை நிறைவேறும். இக்காலத்தில் எப்பேற்பட்ட சவால்களையும் சிறப்பாக எதிர்கொள்வீர்கள். பணியிடத்தில் கொடுக்கப்பட்டுள்ள இலக்குகளை அடைய கடினமாக உழைத்தால், நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி உள்ளார். இதனால் தொழிலில் நல்ல வெற்றியும், பதவி உயர்வும், விரும்பிய இடமாற்றமும் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்கள், இக்காலத்தில் நல்ல லாபத்தையும், வளர்ச்சியையும் காண்பார்கள்.

துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி உள்ளார். இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் பதவி உயர்வும், புதிய வாய்ப்புக்களும் கிடைக்கும். சொந்த வியாபாரம் செய்பவர்கள், தங்களின் வியாபாரத்தை விரிவுப்படுத்த புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். இந்த காலத்தில் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க மனதில் தோன்றும். ஆனால் அதைத் தவிர்க்க வேண்டும். மாணவர்கள் இக்காலத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர மாற்றமானது, சாதகமான பலன்களைத் தரும். பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் முன்னேற்றத்தையும், பதவி உயர்வையும் பெறலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த முயற்சிக்கலாம்.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி உள்ளார். இதனால் வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். வணிகர்களுக்கு தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மொத்தத்தில் இனிமேல் வாழ்வில் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
