Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
சனி உதயமாவதால் மார்ச் 06 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை பிரகாசிக்கப் போகுது..
2023 மார்ச் 06 ஆம் தேதி சனி கும்ப ராசியில் உதயமாகவுள்ளார். கும்ப ராசியில் மார்ச் 06 ஆம் தேதி உதயமாகும் சனியால் எந்த ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
Saturn Rise In Aquarius 2023: வேத ஜோதிடத்தின் படி, சனி மிகவும் சக்தி வாய்ந்த கிரகங்களில் ஒன்றாகும். சனி பகவான் என்றாலே பலருக்கும் ஒருவித பயம் இருக்கும். ஏனெனில் சனி பகவான் பாரபட்சம் பாராமல் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருபவர். இந்த சனி பகவான் கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் என்பதால் இவரது பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. இந்த சனி 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அதாவது ஜனவரி 17-ல் தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசியில் நுழைந்தார். அதன் பின் ஜனவரி 30-ல் கும்பத்தில் அஸ்தமனமானார்.

இந்நிலையில் 2023 மார்ச் 06 ஆம் தேதி சனி கும்ப ராசியில் உதயமாகவுள்ளார். சனியின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றத்தால், 12 ராசிகளிலும் அதன் தாக்கம் இருக்கும். சொல்லப்போனால் சனியால் கிடைக்கும் நன்மைகள் சனி உதயத்திற்கு பின்னர் தான் கிடைக்கப் போகிறது. இப்போது மார்ச் 06 ஆம் தேதி உதயமாகும் சனியால் எந்த ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
சனி உதயமாவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கையானது அதிர்ஷ்டமானதாக இருக்கும். வேலை செய்பவர்கள் அல்லது வியாபாரம் செய்பவர்கள், இதுவரை முன்னேற்றத்தில் தடைகளை சந்தித்து வந்தால், அது இந்த சனி உதயத்திற்கு பின் நீங்கி, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இனிமேல் உங்களின் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் ரிஷப ராசிக்காரர்கள் தெங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல பலனைப் பெறுவார்கள். முக்கியமாக உங்களின் பெயரும், புகழும் அதிகரிக்கும். வேலையை மாற்ற நினைத்துக் கொண்டிருந்தால், சனி உதயத்திற்கு பின் முயற்சித்தால் விரும்பிய வேலை கிடைக்கும். மேலும் வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதோடு, முன்னேற்றமும் ஏற்படும்.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் வியாபாரம் மற்றும் வணிகம் செய்து கொண்டிருப்பவர்கள் இனிமேல் நல்ல பலனைப் பெறுவார்கள். பணத்தை சேமிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவர்கள், சனி உதயத்திற்கு பின் நிறைய பணத்தை சேமிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். முக்கியமாக இக்காலத்தில் பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











