Latest Updates
-
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க..
கும்பத்தில் சனி உதயமாவதால் மார்ச் 5 முதல் இந்த 5 ராசிக்காரர்களின் கஷ்டம் அதிகரிக்கப் போகுது... உஷார்..
மார்ச் 05 ம் தேதி சனி பகவான் உதயமாகவுள்ளார். சனி உதயமாகும் போது கும்ப ராசியில் சூரியன் மற்றும் புதன் ஆகிய கிரகங்களும் இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை விட கெடுபலன்கள் சற்று அதிகம் கிடைக்கக்கூடும்.
Saturn Rise In Aquarius 2023: நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் சனி பகவான், தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசியில் 2023 ஜனவரி 17 ஆம் தேதி நுழைந்தார். கும்ப ராசியில் நுழைந்த சில நாட்களிலேயே சனி பகவான் அந்த ராசியில் அஸ்தமனமானார். கிரகங்கள் அஸ்தமன நிலையில் சற்று பலவீனமாக இருக்கும். எனவே சனி பகவான் தற்போது கும்பத்தில் அஸ்தமன நிலையில் பலவீனமாக உள்ளார்.

இந்நிலையில் மார்ச் 05 ம் தேதி சனி பகவான் உதயமாகவுள்ளார். சனி உதயமாகும் போது கும்ப ராசியில் சூரியன் மற்றும் புதன் ஆகிய கிரகங்களும் இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை விட கெடுபலன்கள் சற்று அதிகம் கிடைக்கக்கூடும். இப்போது கும்பத்தில் சனி உதயமாவதால் எந்தெந்த ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி உதயமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த சனி உதயமானது சுமாராகவே இருக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்ல் உயர் அதிகாரிகளால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை முடிப்பதில் சிக்கலை சந்திக்கலாம். இக்காலத்தில் எந்த முதலீடுகளையும் செய்து விடாதீர்கள். இல்லாவிட்டால் பண இழப்பை சந்திப்பீர்கள். முக்கியமாக யாரையும் இக்காலத்தில் அதிகமாக நம்பாதீர்கள். உங்கள் தந்தையைப் பிரியும் சூழல் உருவாகலாம்.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி உதயமாகிறார். இதனால் இக்காலத்தில் பணிபுரிபவர்கள் உடன் வேலை செய்பவர்களுடன் பிரச்சனைகளை சந்திக்கலாம். உங்கள் செலவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் பெரிய பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். இக்காலத்தில் புதிய திட்டத்தை தொடங்க நினைத்தால், அதை சற்று ஒத்தி வைப்பது நல்லது. தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையே சமநிலையைப் பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி உதயமாகிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு, இக்காலத்தில் தடைகள் ஏற்படலாம். பணியிடத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு இல்லாததால், சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடன் பிறந்தவர்களுடன் சண்டைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும் போது கவனமாக பார்த்து பேசுங்கள். இல்லாவிட்டால் உறவில் விரிசல் ஏற்பட்டுவிடும்.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி உதயமாகிறார். இதனால் இக்காலத்தில் தொழில் வாழ்க்கையில் பிரச்சனைகள் காரணமாக, குடும்ப வாழ்க்கை சற்று மோசமாகலாம். உங்கள் தாயின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் உடன்பிறந்தவர்களுடன் சொத்து தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக உங்களின் கருத்தை முன்வைக்கும் போது, வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கிய பிரச்சனைகள் வரக்கூடாதெனில், ஹோட்டலில் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் சனி உதயமாகிறார். இதனால் இக்காலத்தில் திருமண வாழ்க்கை மற்றும் காதல் வாழ்க்கையில் தவறான புரிதல்களால் பிரச்சனைகள் அதிகம் ஏற்படலாம். ஆனால் மனம் விட்டு பேசினால் அனைத்தும் சரியாகும். இந்த காலத்தில் எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுக்காதீர்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தி, பட்ஜெட் போட்டு செலவு செய்யுங்கள். இல்லாவிட்டால் பணப்பற்றாக்குறையை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











