Latest Updates
-
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
சனி வக்ர பெயர்ச்சி 2022: ஜூன் 5 முதல் 141 நாட்கள் சனி இந்த ராசிக்காரங்களுக்கு நிறைய தொந்தரவு கொடுப்பாராம்...
கும்ப ராசியில் பயணித்து வரும் சனி பகவான் தனது பிற்போக்கு பயணத்தை ஜூன் 05 ஆம் தேதி தொடங்கவுள்ளார். அதாவது கும்ப ராசியில் சனி வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.
நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் முக்கியமானவராக கருதப்படுகிறார். பொதுவாக கிரகங்களின் பெயர்ச்சி மனித வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதிலும் சனி பகவானின் பெயர்ச்சி வாழ்க்கையையே மாற்றும் சக்தி கொண்டதாக கூறப்படுகிறது. பஞ்சாங்கத்தின் படி, சனி பகவானின் பிற்போக்கு பயணம் அல்லது வக்ர பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதற்கு 2 1/2 ஆண்டுகள் ஆகும். அந்த வகையில் சனி பகவான் 2022 ஆம் ஆண்டில் ஏப்ரல் 29 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் மாறினார். இந்த பெயர்ச்சி ஏற்கனவே பலரது வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்நிலையில் சனி பகவானின் வக்ர பெயர்ச்சி நிகழவுள்ளது.

2022 சனி வக்ர பெயர்ச்சி எப்போது?
கும்ப ராசியில் பயணித்து வரும் சனி பகவான் தனது பிற்போக்கு பயணத்தை ஜூன் 05 ஆம் தேதி தொடங்கவுள்ளார். அதாவது கும்ப ராசியில் சனி வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். இந்த நிலையில் சனி பகவான் 2022 அக்டோபர் 23 வரை இருப்பார். இந்த சனி வக்ர நிலையால் இந்த 141 நாட்கள் சில ராசிக்காரர்கள் நிறைய தொந்தரவுகளை சந்திக்க உள்ளனர். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
சனியின் வக்ர நிலையால் மேஷ ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் சில பிரச்சனைகள் வரலாம். மேலும் இந்த காலகட்டம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இக்காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் தடைகளை சந்திக்கலாம். மேலும் பண இழப்பு அல்லது நோய்களால் அவதிப்பட வாய்ப்புள்ளது.

பரிகாரம்
வக்ரமாகும் சனியால் சந்திக்கும் தொந்தரவுகளைத் தவிர்க்க வேண்டுமானால், மேஷ ராசிக்காரர்கள் இக்கால கட்டத்தில் சனி சாலிசாலை தினமும் பாராயணம் செய்து வருவது நல்லது. இதனால் சனியினால் சந்திக்கும் மோசமான விளைவுகளைத் தவிர்க்கலாம்.

கடகம்
சனி வக்ரமாவதால் கடக ராசிக்காரர்கள் தங்கள் வேலை மற்றும் திருமண வாழ்வில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவை இனிமையாக வைத்துக் கொள்ள முயலுங்கள். எக்காரணம் கொண்டும் உங்கள் திருமண உறவில் டென்சன் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட அனுமதிக்காதீர்கள். சனி பகவான் கர்மாவைக் கொடுப்பவர் என்றும் அழைக்கப்படுகிறார். ஆகவே இக்காலத்தில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறவில்லை என்றால், உடனே உங்கள் திட்டங்களை மீண்டும் மீண்டும் மாற்றாமல், பொறுமையாக இருந்து, பின் முயற்சி செய்யுங்கள். முக்கியமாக மற்றவர்களின் கருத்துக்களை எடுக்கும் முன், அதை முழுமையாக சோதித்துப் பாருங்கள்.

பரிகாரம்
சனி வக்ர நிலையால் சந்திக்கும் மோசமான விளைவுகளைத் தவிர்க்க கடக ராசிக்காரர்கள் சனிக்கிழமைகளில் ஏழை எளியோருக்கு அல்லது இல்லாதவர்களுக்கு கருப்பு நிற பொருட்களை தானமாக வழங்குங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! சனி வக்ரமாவதால் உங்கள் குணத்தில் மாற்றம் ஏற்படலாம். இக்காலத்தில் உங்கள் பேச்சு குறைபாட்டினால் ஈகோ அதிகரித்து, அதன் காரணமாக சிக்கலில் சிக்கலாம். இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மனக்கசப்பு ஏற்படலாம். மன அழுத்தம் அதிகரிக்கலாம். கடன் கொடுப்பதையும், வாங்குவதையும் தவிர்க்கவும். பணத்தை முதலீடு செய்ய நினைத்தால், புத்திசாலித்தனமாக முடிவு எடுங்கள். ஏனெனில் இக்கால கட்டத்தில் நீங்கள் எளிதில் ஏமாற்றப்படலாம். எனவே கவனமாக இருங்கள்.

பரிகாரம்
சனி வக்ரமாவதால் சந்திக்கும் மோசமான விளைவுகளைத் தடுக்க சனிக்கிழமை அன்று சனி பகவான் கோவிலுக்கு சென்று சனி பகவானுக்கு கடுகு எண்ணெயைக் கொடுத்து அர்ச்சனை செய்தால் பிரச்சனைகள் குறையும். மேலும் தொண்டு பணிகளில் ஈடுபடுங்கள். மறந்தும் பிறரை அவமதிக்காதீர்கள். சோம்பலை கைவிடுங்கள்.



Click it and Unblock the Notifications
