Latest Updates
-
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
30 ஆண்டுகளுக்கு பின் குரு-சனியின் அற்புதமான நிகழ்வால் இந்த 4 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது...
ஹோலி அன்று கிரகங்களின் அற்புத நிலை அபூர்வ யோகத்தை உருவாக்குகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறப் போகிறார்கள்.
Saturn Jupiter Making Amazing Coincidence After 30 Years: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில சமயங்களில் கிரகங்களின் இயக்கங்களால் அற்புதமான நிகழ்வு நிகழும். அப்படியொரு நிகழ்வு தான் ஹோலி பண்டிகை அன்று உருவாகவுள்ளது. அதுவும் 30 ஆண்டுளுக்கு பிறகு இப்படியான ஒரு நிகழ்வு நிகழவுள்ளது. அது என்னவெனில், 30 ஆண்டுகளுக்கு பின் சனி கும்ப ராசிக்கு நுழைந்துள்ளார். அதோடு கும்ப ராசியில் சூரியன், புதன், சனி ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகியுள்ளன. முன்னதக 1993 ஆம் ஆண்டு ஹோலியின் போது இந்த மூன்று கிரகங்களும் கும்ப ராசியில் இருந்தன.

அதேப் போல் 12 ஆண்டுகளுக்கு பின் குரு மீன ராசிக்கு சென்றுள்ளார். இதற்கு முன்னதாக 2011 ஆம் ஆண்டு ஹோலி பண்டிகையின் போது குரு தனது சொந்த ராசியான மீன ராசியில் இருந்தார். இப்படி இந்த கிரகங்களின் அற்புத நிலை அபூர்வ யோகத்தை உருவாக்குகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறப் போகிறார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
குரு-சனியின் அற்புத நிகழ்வால் ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். முக்கியமாக இக்காலத்தில் பல வழிகளில் பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வைக் காண வாய்ப்புள்ளது. அதே வேளையில் பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்பவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி-குருவின் நிலைகளானது நல்ல அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். வேலை செய்பவர்கள் மற்றும் வணிகம் செய்பவர்கள், குறுகிய பயணத்தை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணத்தால் நல்ல ஆதாயமும் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கு, இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் குருவின் நிலைகளானது நல்ல பொருள் இன்பங்களைத் தரும். வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அது நிறைவேறும் வாய்ப்புள்ளது. உணவு, ரியல் எஸ்டேட் வேலை செய்பவர்களுக்கு இக்காலகட்டமானது அற்புதமாக இருக்கும். திருமணமானவர்கள் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். காதலித்துக் கொண்டிருந்தால், உங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் வெற்றி காண்பீர்கள்.

கும்பம்
சனி-குருவின் நிலைகளானது கும்ப ராசிக்காரர்களுக்கு நற்பலனை அளிக்கும். முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும். நல்ல நிதி ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மாணவர்கள் தேர்வில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications