Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு...
கும்ப ராசிக்குள் நுழைந்த சனி பகவான், சில நாட்களிலேயே கும்ப ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். அதாவது 2023 ஜனவரி 30 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் அஸ்தமனமாகவுள்ளார்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் 2023 ஜனவரி 17 ஆம் தேதி மகர ராசியில் இருந்து தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசிக்கு வந்தார். 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசிக்குள் நுழைந்த சனி பகவான், சில நாட்களிலேயே கும்ப ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். அதாவது 2023 ஜனவரி 30 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். இந்த அஸ்தமன நிலையில் மார்ச் 5 ஆம் தேதி வரை இருப்பார்.

நீதிமான் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்கக்கூடியவர். ஒருவரது ஜாதகத்தில் சனியின் நிலை சிறப்பாக இருந்தால், ஆண்டி கூட அரசனாக முடியும். அதுவே சனி மோசமான நிலையில் இருந்தால், அரசனும் ஆண்டியாக முடியும். இப்படிப்பட்ட சனி சூரியனுக்கு அருகில் சென்று பயணிக்கும் காலத்தில், சில ராசிக்காரர்கள் ஏராளமான நற்பலன்களைப் பெறவுள்ளார்கள். அதுவும் செல்வந்தராகும் வாய்ப்பைப் பெறுவார்கள். இப்போது கும்ப ராசியில் சனி அஸ்தமனமாவதால் எந்த ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்புள்ளது என்பதைக் காண்போம்.

மிதுனம்
சனி அஸ்தமனமானது மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் நிகழ்கிறது. இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோக வெற்றி பெறுவார்கள். பணிபுரிபவர்கள் கடினமாக உழைத்தால், அலுவலகத்தில் நல்ல வெற்றியைப் பெறலாம். மேலும் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி அஸ்தமனம் நிகழ்கிறது. இதனால் கன்னி ராசிக்காரர்கள் சனியின் நிலையால் அற்புதமான பலனைப் பெறுவார்கள். முக்கியமாக வங்கி இருப்பில் பணம் அதிகம் சேரும். சிக்கிய பணம் இக்காலத்தில் உங்கள் கைக்கு வந்து சேரும். இக்காலத்தில் உங்கள் எதிரிகளை வீழ்த்தி வெற்றியைப் பெறுவீர்கள்.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி அஸ்தமனம் நிகழ்கிறது. இதனால் மகர ராசிக்காரர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். இக்காலத்தில் உங்களின் பேச்சு மற்றவர்களின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இக்கால கட்டத்தில் உங்களின் பேச்சில் சற்று அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. மேலும் நிதி நிலை சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.

மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் சனி அஸ்தமனம் நிகழ்கிறது. எனவே மீன ராசிக்காரர்கள் தாங்கள் வேலை செய்யும் துறையில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். ஆன்மீக பயணம் மேற்கொள்ள வாய்ப்புக்கள் கிடைக்கும். முக்கியமாக இதுவரை வாழ்வில் சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











