For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சபரிமலை பெயர் வரக் காரணமான சபரி யார் தெரியுமா - சுவாரஸ்ய தகவல்கள்!

ஆன்மீகவாதிகளுக்கும், ஐயப்ப பக்தர்கள் அனைவருக்குமே சபரிமலை என்ற பேரை கேட்டாலே, கேட்ட நொடியிலேயே மனம் சபரிமலைக்கு பறந்து விடும். உடலோடு உள்ளமும் சிலிர்த்துப்போய் எப்போது அங்கு போய் ஐயப்பனை தரிசனம் செய்வ

|

ஸ்ரீராமபிரான், தன் மீது எல்லையற்ற அன்பும் பக்தியும் கொண்டிருந்த சபரி அன்னைக்கு மோட்சம் அளித்ததார். அதோடு, அந்த அன்னை வாழ்ந்து வந்த மலைக்கும் மோட்சம் அளித்தார். அன்றிலிருந்து அந்த மலையும் சபரிமலை என்றே அழைக்கப்பட்டு வருகிறது. ஐயப்பனும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவரும் அந்த மலைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். தர்மசாஸ்தாவான ஐயப்பன், தான் தவமிருக்க எண்ணிய இடத்தை தேர்வு செய்து அம்பை எய்தார். அந்த அம்பு விழுந்த இடம் தான் இந்த சபரிமலை.

Sabari Annai Was The Root Cause Of The Creation Of The Sabarimala

ஆன்மீகவாதிகளுக்கும், ஐயப்ப பக்தர்கள் அனைவருக்குமே சபரிமலை என்ற பேரை கேட்டாலே, கேட்ட நொடியிலேயே மனம் சபரிமலைக்கு பறந்து விடும். உடலோடு உள்ளமும் சிலிர்த்துப்போய் எப்போது அங்கு போய் ஐயப்பனை தரிசனம் செய்வோமோ என்றும் மனம் ஏங்கும். அபிஷேகப்பிரயனான ஐயப்பனைப் பற்றியும் அவருடைய வரலாற்றைப் பற்றியும் கேட்டாலே ஐயப்ப பக்தர்கள் அப்படியே நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருப்பதுண்டு.

MOST READ: உங்க ராசிக்கு டிசம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா?

சுத்த பிரம்மச்சாரிய கடவுளான சபரிகிரி வாசன் ஐயப்பனை தரிசிப்பதற்காகவே, கார்த்திகை 1ஆம் தேதியிலேயே மாலை அணிந்து விரதமிருந்து 41 நாட்கள் காத்துக்கிடந்து, ஐயப்பனின் முகத்தை கண்ட உடனே மனதில் தோன்றும் எண்ணம், போதும் ஐயப்பா, இதுக்கு மேல எனக்கு வேற சொத்து சுகம் எதுவும் வேணாம், உன்னை கண்டது ஒன்றே போதும் என்ற பேரானந்தம் ஏற்படுமே, அந்த சுகத்திற்கு ஈடாக எத்தனை கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் ஈடாகாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sabari Annai Was The Root Cause Of The Creation Of The Sabarimala

Sri Ramar, who had an infinite love and devotion to Sabari Annai, gave her salvation. He also provided the Moksha to the mountain where the mother lived. Since then the mountain has come to be known as Sabarimalai.
Story first published: Monday, December 2, 2019, 13:21 [IST]
Desktop Bottom Promotion