Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
ரமலான் ஜகாத்: தனித்திரு, விழித்திரு, பசித்திரு - ஏழைகளுக்கு கொடுத்திரு..
தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்பதே ரமலான் மாதத்தில் பின்பற்றப்படவேண்டிய கொள்கைகள். அப்படி இருக்கும் பொழுது தான், மனது தூய்மையை நாடும் என்பதே அதன் மறைபொருள்.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ஜகாத். தான் சேமித்து வைத்துள்ள செல்வத்தில் இருந்து அடிப்படை தேவைகள் போக எஞ்சியதில் இரண்டரை சதவிகிதம் ஏழைகளுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் கட்டாய தானமாக மனமுவந்து கொடுக்க வேண்டும் என்பதுதான் ஜகாத்.

ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. ரமலான் மாதத்தைப் பொறுத்தவரை எல்லா இஸ்லாமியர்களுக்குமே, அல்லா அதிகம் நெருங்கும் மாதமாக கொண்டாடப்படுகிறது. இதனால்தான் இந்த மாதத்தில் ஒரு சிலர் தவிர அனைவருமே நோன்பு இருக்க என்றுமே தவறுவதில்லை. அதிகாலை முதல், மாலை வரை உண்ணாமல், நீர் அருந்தாமல், பிற தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்ற தத்துவதை உணர்த்துகிறது ரமலான் நோன்பு.
ரமலான் நோன்பு வாழ்வியல் தத்துவங்களை உணர்த்துகிறது இஸ்லாம் மார்க்கம். பசித்தவனுக்கு உணவளிக்கச் சொல்லுகின்ற இஸ்லாம் அந்தப் பசியின் அவதிகளை, பசி ஏற்படுத்துகின்ற மயக்கத்தை, தொண்டை வறளும் தாகத்தை, தாகத்தின் தவிப்பை அதன் களைப்பை மனிதனுக்குள் விதைக்கிறது. தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்பதே ரமலான் மாதத்தில் பின்பற்றப்படவேண்டிய கொள்கைகள். கொரோனா வைரஸ் பரவி வரும் இன்றைய கால கட்டத்தில் வீட்டிலேயே தொழுகை செய்யுங்கள் என்ற கொள்கையும் சேர்க்கப்பட்டுள்ளது.

ரமலான் மாத தர்மம்
ரமலான் மாதத்தில் செய்யும் தான தர்மத்திற்கு எழுநூறு மடங்கு நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை. இது கருணையின் மாதமாக குறிப்பிடப்படுகிறது. இப்னு அப்பாஸ் என்ற நபித்தோழர் கூறுகின்றார், ‘ரமலான் மாதம் வந்துவிட்டால், நபி(ஸல்)அவர்கள் தான தர்மங்களை வாரி வழங்குவார்கள். எந்தளவுக்கென்றால் தடையில்லாமல் வேகமாக வீசும் காற்றுக்கு ஒப்பானதாக அவை இருக்கும்'.

ஐந்து கடமைகள்
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ஜகாத். தான் சேமித்து வைத்துள்ள செல்வத்தில் இருந்து அடிப்படை தேவைகள் போக எஞ்சியதில் இரண்டரை சதவிகிதம் ஏழைகளுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் கட்டாய தானமாக மனமுவந்து கொடுக்க வேண்டும் என்பதுதான் ஜகாத். வசதியுள்ள ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் ஜகாத் கட்டாய கடமையாகும். ஜகாத் கொடுக்கும் தகுதியிருந்தும் கொடுக்காதவர் பாவம் செய்தவர், கடுமையான தண்டனைக்கு உரியவர் ஆவார்.

ஜகாத் கட்டாயம்
இறைவன் தனக்கு காணிக்கை செலுத்த கூறவில்லை மாறாக ஏழைகளுக்கு கொடுக்க சொல்கிறார். ஜகாத் யாருக்கெல்லாம் கொடுக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் வசனம் கூறியுள்ளது. ஏழை ஒருவனுக்கு உணவளிப்பதன் மூலமே இறை திருப்தி கிடைக்கும். ‘இந்த தானதர்மங்களெல்லாம் ஏழைகள், வறியவர்கள், இந்த தானதர்மங்களை வசூலிக்கவும், பங்கிடவும் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டியவர்கள் ஆகியோருக்கும், அடிமைகளை விடுவிப்பதற்கும், கடனாளிகளுக்கும், இறைவழியில் செலவு செய்வதற்கும், பயணிகளுக்கும் உரியனவாகும்.' -திருக்குர்ஆன் 9:60.

கருணை மாதம்
இறைக்க இறைக்க ஊரும் கிணறு போல கொடுக்க கொடுக்க செல்வம் வளரும். அப்படி சேர்த்து வைத்த செல்வமும் தூய்மையானதாக மாறும். ரம்ஜான் நோன்பு காலத்தில் பசியோடு இருப்பது என்பது பற்றிய பயிற்சியும் ஏழைகளுக்கு தானம் கொடுக்க வேண்டும் என்ற கட்டளையும் பிறப்பிக்கப்படுகிறது. இதன்மூலம் நற்கூலி என்ற வெகுமதி கிடைக்கும் என்கிறார் இறைவன் இதனால்தான் ரமலான் மாதம் கருணை மாதமாக, தூய்மையான மாதமாக கடைபிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் நிறைந்த இந்த மாதத்தில் பசியோடு தனித்திருக்கும் நேரத்தில் வீட்டிலேயே பாதுகாப்புடன் தொழுகை செய்வதோடு பசியோடு இருக்கும் ஏழைகளுக்கு உணவு கொடுப்போம்.



Click it and Unblock the Notifications