Latest Updates
-
சனி பகவானின் நட்சத்திரம் செல்லும் செவ்வாய்: செப்டம்பர் இறுதியில் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சொந்த கரன்சி, சொந்த ஏர்போர்ட் கூட இல்லாத உலகின் பணக்கார நாடு - இந்த நாட்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் இருக்காம் -
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா?
2022 ராகு கேது பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
2022 ராகு கேது பெயர்ச்சியால் அனைத்து ராசிகளிலும் ஒருவித தாக்கம் நிச்சயம் இருக்கும். குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது.
கிரக பெயர்ச்சிகள் ஒருவரது வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 2022 ஆம் ஆண்டு பல முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன. இதனால் 2022 ஆம் ஆண்டு பலரது வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு ஆண்டாகும். இந்த ஆண்டில் குரு, சனி பெயர்ச்சிகள் மட்டுமின்றி, ராகு கேது பெயர்ச்சியும் நிகழ்கிறது. ராகு, கேது நிழல் கிரகங்கள் ஆகும். இவற்றிற்கு என்று எந்த ஒருராசியும் இல்லை. மேலும் நிழல் கிரகங்களாக இருப்பதால், இவை பின்னோக்கி நகரக்கூடியவை. அதோடு இந்த கிரகங்கள் எந்த ராசியில் உள்ளதோ, அந்த ராசியின் அதிபதிக்கு ஏற்றவாறு தன்னை மாற்றி பலனளிக்கின்றன.

அந்த வகையில் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, 2022 மார்ச் 21 ஆம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடக்கிறது. இந்நாளில் ராகு ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும், கேது விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் இடம் மாறுகிறார்கள். இந்த நிழல் கிரகங்களின் பெயர்ச்சியால் அனைத்து ராசிகளிலும் ஒருவித தாக்கம் நிச்சயம் இருக்கும். குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. இப்போது அந்த 4 ராசிக்காரர்கள் யார்யார், எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
ராகு-கேது பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் வேலையால் பாராட்டைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். எந்த ஒரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

மிதுனம்
ராகு கேது பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும். வேலையில் வெற்றி கிடைக்க கடினமாக உழைக்க வேண்டிய அவசியம் இருக்காது. பண பரிவர்த்தனைகளுக்கான நல்ல காலம். முதலீடுகளால் நற்பலன்களைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! ராகு கேது பெயர்ச்சியால் நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்திற்கு ஏற்ற அற்புதமான காலம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். நண்பர்களின் ஆதரவை இப்பெயர்ச்சியால் அதிகம் பெறுவீர்கள். உங்களின் பணி பணியிடத்தில் பாராட்டப்படும். சொல்லப்போனால் இந்த ராகு கேது பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு ஒரு அதிர்ஷ்டமான காலம் என்றே கூற வேண்டும்.

மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு நிச்சயம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வியாபாரத்தில் லாபத்தைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். மிகுந்த மரியாதையை இக்காலத்தில் பெறுவீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் மற்றும் உங்கள் கௌரவம் உயரும். இக்காலத்தில் முதலீடு செய்தால் நன்மையைப் பெறுவீர்கள்.



Click it and Unblock the Notifications
