Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
பொங்கல் முதல் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் சூரியனைப் போல் பிரகாசிக்கப் போகுது...
2023 ஜனவரி மாத சூரிய-சனி சேர்க்கையால் சில ராசிக்காரர்கள் பொங்கல் முதல் பல நற்பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் மற்றும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
நவகிரகங்களில் சூரியன் மிகவும் முக்கியமான கிரகமாகும். இந்த சூரியன் நவகிரகங்களின் தலைவராவார். இவர் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. மேலும் சூரியன் ராசியை மாற்றும் தினம் சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் 2023 ஜனவரி 14 ஆம் தேதி சூரியன் மகர ராசிக்கு செல்வதால், அந்நாள் மகர சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய தினம் மகர சங்கராந்தி என்பதால், பொங்கல் முதல் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது.

அதுவும் சூரியன், எதிரி கிரகமாக கருதப்படும் சனியின் ராசிக்கு செல்கிறார். என்ன தான் சனியும், சூரியனும் எதிரிகளாக கருதப்பட்டாலும், தந்தை-மகன் என்பதால், சில ராசிக்காரர்கள் இந்த சூரிய-சனி சேர்க்கையால் பொங்கல் முதல் பல நற்பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் மற்றும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டில் சனி-சூரிய சேர்க்கை நிகழ்கிறது. எனவே இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் 8 ஆவது வீட்டில் சூரிய சனி சேர்க்கை நிகழ்கிறது. இதனால் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும் பணப்பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். உங்களுக்கு மன அழுத்தம் குறையும். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் இக்காலத்தில் உங்களை வீழ்த்த முயற்சிப்பார்கள். எனவே யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். மேலும் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் சூரிய-சனி சேர்க்கை நிகழ்கிறது. இதனால் ரிஷப ராசிக்காரர்களின் உறங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களின் வேலை சிறப்பாக பாராட்டப்படும். உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தைரியத்தால் பல சாதனைகளைப் புரிவீர்கள். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்படும்.

மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் சனி-சூரிய சேர்க்கை நிகழ்கிறது. எனவே மகர ராசிக்காரர்கள் பொங்கல் முதல் சூப்பரான பலன்களைப் பெறப் போகிறார்கள். குறிப்பாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்ளுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலை சிறப்பாக இருக்கும். இதுவரை சந்தித்து வந்த உடல் மற்றும் மன பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications