உங்கள் ஜாதகத்தில் இந்த கிரகம் வலிமையாக இருந்தால் உங்களை எவராலும் வெல்ல முடியாதாம் தெரியுமா?

உங்களின் கிரக நிலைகள் உங்களின் வாழ்க்கையை செல்வ செழிப்புடன் மாற்றும் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அனைவருக்குமே பணக்காரராக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும் உண்மைதானே?. உங்கள் வாழ்க்கையில் செல்வம் அதிகரிக்க உங்களின் உழைப்பு எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு உங்களுடைய நல்ல நேரமும் முக்கியம் ஆகும். ஏனெனில் உங்களின் நேரம் மோசமாக இருக்கும்போது நீங்கள் எவ்வளவு உழைத்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர் போல வீணாகத்தான் போகும்.

Planetary Positions That Can Make You Rich

உங்கள் வாழ்க்கையில் நல்ல நேரத்தை கொண்டுவருவது உங்கள் ஜாதகத்தின் கிரக நிலைகள்தான். உங்களின் கிரக நிலைகள் உங்களின் வாழ்க்கையை செல்வ செழிப்புடன் மாற்றும் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்கள் ஜாதகத்தின் 2-வது மற்றும் 11-வது வீடுதான் உங்கள் வாழ்க்கையின் செழிப்பை நிர்ணயிக்கிறது. உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் எந்த கிரகம் வந்தால் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்னெ என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
4 வது வீடு

4 வது வீடு

ஜாதகத்தின் 4 மற்றும் 10 வது வீடுகளும் பொருள் செழிப்புக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது --- இந்த வீடுகள் உங்களுக்கு வலுவாக இருந்தால், உங்களுக்கு வளமான வாழ்க்கை கிடைக்கும். வளமான வாழ்க்கையை வழங்கும் சில சக்திவாய்ந்த கிரக சேர்க்கைகளை மேற்கொண்டு பார்க்கலாம்.

பண ஆதாயங்கள்

பண ஆதாயங்கள்

உங்கள் ஜாதகத்தில் 11 வது வீடு என்பது பண ஆதாயங்களைப் பற்றியது. உங்கள் வாழ்க்கையின் செழிப்பு உங்களின் ராசி மற்றும் ராசியின் கடவுளை பொறுத்தது என்று கூறப்படுகிறது. இந்த இரண்டுமே வலுவாக இருந்தால் உங்கள் வாழ்க்கையில் உங்கள் வாழ்க்கையில் பணக்கஷ்டம் இல்லாமல் இருக்கும். விரைவில் வாழ்க்கையில் நீங்கள் பணக்காரர் ஆக வாய்ப்புள்ளது.

வீட்டின் கடவுள்

வீட்டின் கடவுள்

இந்த வீட்டின் கடவுள் வேறு ஏதேனும் ஒரு கிரகத்தில் அமர்ந்தால் அதாவது 1, 5 மற்றும் 9 வது கிரகத்தின் கடவுள்கள் வேறு வீட்டில் இருந்தால் இது செல்வத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. இந்த மாற்றங்கள் உங்களின் தடையில்லா வருமானத்திற்கு வழிவகுக்கும்.

செவ்வாய் மற்றும் சனி

செவ்வாய் மற்றும் சனி

உங்கள் 11 வது வீட்டில் செவ்வாய் மற்றும் சனி வலுவாக இருந்தால், உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், வீட்டில் எதிர்மறை மற்றும் நேர்மறை கிரகங்கள் இரண்டும் இருந்தால், உங்கள் வாழ்க்கையில் சில கலவையான முடிவுகளை நீங்கள் எதிர்கொள்வீர்கள்.

கிரகத்தின் கலவைகள்

கிரகத்தின் கலவைகள்

11 வது வீட்டில் புதன், வியாழன் மற்றும் சுக்ரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கைகளும் ஒரு நபரின் மகாதாஷா உகந்ததாக இருந்தால் பணக்காரராக்க முடியும் என்று கூறப்படுகிறது.

சொத்துகள்

சொத்துகள்

2 வது வீட்டின் கடவுள் 4 வது வீட்டில் அமர்ந்தால், ஒருவர் சொத்து மூலம் பணக்காரர் ஆவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும், அதே கிரகம் 10 வது வீட்டில் அமர்ந்தால், உங்கள் தொழில் உங்களுக்கு லாபத்தைத் தரும். 2 மற்றும் 11 வது வீட்டின் கடவுள் ஒருவருக்கொருவர் பரஸ்பர நிலையில் அமர்ந்தால், ஒரு நபர் விரைவாக பணக்காரர் ஆவார் என்று கூறப்படுகிறது. அவர் தனது வாழ்நாள் முழுவதும் பணக்காரராக இருக்கிறார்.

பணச்சிக்கல்

பணச்சிக்கல்

துரதிர்ஷ்டவசமாக, 2, 5, 7 அல்லது 11 வது வீட்டின் கடவுள் 6, 8 அல்லது 12 வது வீட்டில் அமர்ந்தால், ஒரு நபர் வறுமை மற்றும் உடல்நலக்குறைவை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார் என்று கூறப்படுகிறது.

யோகம்

யோகம்

கிரக நிலைகளைத் தவிர, லட்சுமி யோகம், விப்ரீத் ராஜ்யோக், நீச்ச்பாங் ராஜ்யோக் போன்ற யோகங்களும் ஒரு நபரை பணக்காரர்களாகவும், வளமானவர்களாகவும் ஆக்குகின்றன. உங்கள் ராசியில் இருக்கும் கிரகத்தின் முக்கியத்துவம் பற்றி மேற்கொண்டு பார்க்கலாம்.

சூரியன்

சூரியன்

சூரியன் ஈகோ மற்றும் சுய மரியாதையை குறிக்கிறது, எனவே சூரியன் வலுவாக இருக்கும் ஒரு நபர் வலிமையானவராகவும், ஆழமான கருத்து உடையவராகவும், தோரணைமிக்கவர்களாகவும் இருக்கக்கூடும்.

நிலா

நிலா

சந்திரன் உங்கள் உணர்ச்சிகளையும் மனநிலையையும் குறிக்கிறது, எனவே சந்திரன் வலுவாக இருக்கும் ஒரு நபர் மிகவும் உணர்ச்சிவசப்பட வாய்ப்புள்ளது. இவர்கள் மூளையில் இருந்து அல்ல, இதயத்திலிருந்து எப்பொழுதும் யோசிப்பார்கள்.

புதன்

புதன்

புதன் கிரகம் தகவல் தொடர்பு மற்றும் சிந்தனையை குறிக்கிறது, எனவே சிறந்த எழுத்தாளர்கள் மற்றும் சொற்பொழிவாளர்கள் பொதுவாக தங்கள் ஜாதகத்தில் வலுவான புதனை கொண்டிருப்பார்கள்.

சுக்ரன்

சுக்ரன்

அன்பின் கிரகம் என்று அழைக்கப்படும் சுக்ரன் உணர்ச்சிகளையும் புரிதலையும் குறிக்கிறது. இது நம் வாழ்க்கையில் எல்லா உணர்ச்சிகரமான முடிவுகளையும் எடுக்க உதவுகிறது. இந்த கடவுள் வலிமையாக கொண்டவர்கள் அனைவரிடமும் அன்பானவர்களாக இருப்பார்கள்.

செவ்வாய்

செவ்வாய்

செவ்வாய் நம்பிக்கை மற்றும் ஆற்றலைக் குறிக்கிறது, எனவே தங்கள் வாழ்க்கையில் மிகச் சிறப்பாக செயல்படும் நபர்கள் தங்கள் கிரக நிலையில் வலுவான செவ்வாய் கிரகத்தைக் கொண்டுள்ளனர்.

குரு

குரு

குரு செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்திற்காக அறியப்படுகிறது, எனவே அதன் இருப்பு மக்களை வாழ்க்கையில் வெற்றிகரமாக ஆக்குகிறது. ஜாதகத்தில் குரு வலிமையாக இருப்பவர்கள் வாழ்வில் வெற்றியாளர்களாக இருப்பார்கள்.

சனி

சனி

சனி என்பது நடைமுறை கிரகம், ஏனெனில் இது கவனத்துடன் இருப்பது பற்றி அறியப்படுகிறது. நம் தோலுக்கு மேல் தலை இருக்கிறது என்றால் அது சனியின் ஆசீர்வாதம் நமக்கு இருப்பதால்தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, November 16, 2019, 12:38 [IST]
Desktop Bottom Promotion