Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
நவம்பர் மாதம் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமான மாசமா இருக்கப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் 3 முக்கிய கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றுகின்றன. இந்த கிரகங்களில் குரு, புதன், சூரியன் ஆகியவை அடங்கும்.
ஜோதிடத்தில் 9 கிரகங்களின் இடமாற்றம் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பான விளைவைக் கொண்டிருக்கிறது. கிரகங்களுக்கும், ராசிகளுக்கும் ஒரு சிறப்பான உறவு உள்ளது. ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் இடமாற்றத்தால் சிலருக்கு நல்ல பலனும் சிலருக்கு கெட்ட பலனும் உண்டாகும். ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறுகிறது. இப்படி ஒவ்வொரு மாதமும் கிரகங்களில் சில தங்களின் ராசியை மாற்றுகின்றன.

அந்த வகையில் 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் 3 முக்கிய கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றுகின்றன. இந்த கிரகங்களில் குரு, புதன், சூரியன் ஆகியவை அடங்கும். இப்போது இந்த கிரக மாற்றங்கள் எந்த தேதிகளில் நடக்கவுள்ளது என்பதையும், எந்த ராசிகளுக்கு இது அதிர்ஷ்டமானதாக இருக்கும் என்பதையும் காண்போம்.

2021 நவம்பர் மாத கிரக மாற்றங்கள்
நவம்பர் மாதம் 02 ஆம் தேதி புதன் கன்னியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் மாறுகிறது. அதற்கு பின் நவம்பர் 16 ஆம் தேதி சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் மாறுகிறது. பின்னர் நவம்பர் 20 ஆம் தேதி சுப கிரகமான குரு கும்ப ராசியில் நுழைகிறது. நவம்பர் மாதத்தில் நடக்கும் இந்த மூன்று கிரகங்களின் இட மாற்றத்தால் பின்வரும் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கப் போகிறது.

மேஷம்
நவம்பர் மாதத்தில் மேஷ ராசிக்காரர்கள் பலவிதமான மகிழ்ச்சியைப் பெறுவார்கள். ஆரம்ப காலத்தில் புதன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு நுழையும் போது, மேஷ ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கும். வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இது தவிர சூரியன், குரு ஆகிய கிரகங்களின் இடமாற்றமும் மேஷ ராசிக்காரர்களுக்கு சுபமாக அமையும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் நவம்பர் மாதத்தில் படிப்படியாக குறையும். தொழிலில் வெற்றி கிடைக்கும். குரு பகவான் கும்ப ராசியில் நுழைவதால் படிப்பு மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி
நவம்பர் மாதத்தில் நடக்கும் சூரியனின் இடமாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வியாபாரத்தில் புதிய சாதனைகள் உருவாகும். புதிய தொழிலுக்கு அடித்தளம் அமைப்பதில் வெற்றி பெறுவீர்கள். மேலும் அனைத்து கிரகங்களிலும் மிகவும் சுப கிரகமாக கருதப்படும் குரு, கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைக் கொடுக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் லாபம் அதிகமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு இந்த மாதம் அற்புதமாக இருக்கும். அதே நேரத்தில் சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். மேலும் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உங்கள் மனதில் தோன்றும். அதோடு அதில் நீங்கள் நூறு சதவீதம் வெற்றியும் பெறுவீர்கள்.



Click it and Unblock the Notifications