Latest Updates
-
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா
ஜனவரி மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 5 ராசிக்காரங்க நிறைய பிரச்சனைகளை சந்திக்க போறாங்க...
2023 ஆம் ஆண்டின் முதல் மாதத்தில் பல முக்கிய கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றவுள்ளன. 2023 ஜனவரி மாத கிரக பெயர்ச்சிகளால் அதிக பிரச்சனைகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
Planet Transit In January 2023: 2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த புதிய ஆண்டின் முதல் மாதத்தில் பல முக்கிய கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றவுள்ளன. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தெரியும். அதுவும் ஜனவரி மாதத்தில் 4 கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. முக்கியமாக நீதிமான் சனி பகவான் ஜனவரி மாதத்தில் நடுப்பகுதியில் ராசியை மாற்றவுள்ளார். மேலும் 2 கிரகங்கள் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளன.

அதில் ஜனவரி 14 ஆம் தேதி சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்கிறார். பிறகு ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். சுக்கிரன் ஜனவரி 22 ஆம் தேதி கும்ப ராசிக்கு செல்கிறார். இது தவிர புதன் மற்றும் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளனர். அதில் ஜனவரி 12 ஆம் தேதி செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைகிறார். அதே வேளையில் ஜனவரி 18 ஆம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இம்மாதிரியான சூழ்நிலையில் சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இப்போது 2023 ஜனவரி மாத கிரக பெயர்ச்சிகளால் அதிக பிரச்சனைகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
2023 ஜனவரியில் செவ்வாய், சூரியன் மற்றும் சனி ராசியை மாற்றுவதால், மேஷ ராசிக்காரர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த கிரகங்களால் உங்கள் அனைத்து வேலைகளிலும் தடைகளை சந்திக்க நேரிடும். நிதி இழப்பிற்கும் வாய்ப்புள்ளது. எனவே செலவுகளை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உடன் வேலை செய்வோருடன் வாக்குவாதத்தில் ஈடுபடலாம். ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் 2023 ஜனவரி மாத கிரக பெயர்ச்சிகளால் சற்று அதிக பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். வேலைகளில் தொடர்ந்து தடைகளை சந்திப்பதால், மனம் தளர்ந்து போவீர்கள். வீட்டிலும், பணியிடத்திலும் அதிக கோபம் கொள்வீர்கள். அதனால் அதிக சண்டைகளை போடுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் பதற்றம் ஏற்படலாம். செலவுகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. புத்தாண்டின் தொடக்கத்தில் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தால், அது இன்னமும் தாமதமாகும். வியாபாரிகளுக்கு சற்று சுமாராகவே இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் மனக்கசப்பு ஏற்படலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கும் ஜனவரி மாதம் சற்று மோசமாகவே இருக்கும். ஆரம்ப நாட்களில் வெற்றியையும், பணத்தையும் பெற்றாலும், போக போக பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். அதிக அலைச்சலை சந்திப்பீர்கள். தொழிலில் கலவையான பலன்களைப் பெறுவீர்கள். எந்த ஒரு முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும், நன்கு யோசித்த பின்னரே எடுக்க வேண்டும். இந்த மாதத்தில் யாருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் அந்த பணம் திரும்ப கிடைக்காது.

விருச்சிகம்
2023 ஜனவரி மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்து விவாதங்கள் எழும். நில பிரச்சனைகளில் புதுவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். ஜனவரி மாதத்தில் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முடியாததால், குடும்ப உறுப்பினர்களுடன் கருத்த வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். வியாபாரிகள் நஷ்டத்தை சந்திப்பார்கள்.

கும்பம்
ஜனவரி மாதத்தில் கும்ப ராசிக்கு சனி பகவான் செல்லும் போது, கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் இரண்டாவது கட்டம் தொடங்கும். அதனால் வேலையில் அவ்வளவு எளிதில் வெற்றி கிடைக்காது. வேலை மற்றும் வியாபாரத்தில் கலவையான பலன்களே கிடைக்கும். இம்மாதத்தில் உங்கள் சேமிப்பில் இருந்து அதிக பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும். குடும்பத்திலும் சரி, பணியிடத்திலும் சரி சண்டைகள் அதிகரிக்கலாம். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
