Just In
- 40 min ago
உங்க பிறந்த தேதி 6,15 மற்றும் 24 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
- 2 hrs ago
சாணக்கிய நீதியின் படி இந்த வழிகளில் பணம் சம்பாதிப்பவர்கள் வாழும்போதே நரகத்தை அனுபவிப்பார்களாம்...!
- 3 hrs ago
இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாதாம்... மீறி சாப்பிட்டா புற்றுநோய் வர வாய்பிருக்காம்!
- 3 hrs ago
பெண்களின் குறைந்த பாலியல் ஆசையை உடனடியாக அதிகரிக்க இந்த 5 உணவுகளில் ஒன்று போதுமாம்...!
Don't Miss
- News
"மைனஸ் 34 டிகிரி.." எலும்பை உறைய வைக்கும் குளிர்.. துடிக்கும் குழந்தைகள்.. ஆப்கனில் 162 பேர் பலி!
- Finance
எப்போ வேணாலும் அறிவிக்கலாம்.. பாகிஸ்தான் நிலை ரொம்ப மோசம்..!
- Automobiles
இது இருக்குற வரைக்கும் மாருதியை அசைக்க முடியாது! காசை கொடுத்துவிட்டு காருக்காக தவம் கிடக்கும் 4.05 லட்சம் பேர்
- Technology
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
- Movies
தற்கொலை பண்ண வாய்ப்பே இல்ல.. அவங்க தான் ஏதோ பண்ணிட்டாங்க.. டான்சர் ரமேஷின் முதல் மனைவி கண்ணீர்!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Sports
என்ன தெரிகிறது அங்கு??.. போட்டியின் போது அம்பயர் எராஸ்மஸ் செய்த காரியம்.. இணையத்தில் சிரிப்பலை!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
முன்னோர்கள் கனவில் வந்தால், அது எதை உணர்த்துகிறது தெரியுமா?
ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. பொதுவாக தூங்கும் போது தான் ஒருவருக்கு கனவு வரும். இப்படி வரும் கனவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயத்தை நமக்கு உணர்த்துகின்றன. கனவு சாஸ்திரம் எதிர்காலத்தை கணக்கிடும் முறையை அடிப்படையாகக் கொண்டது. கனவு சாஸ்திரத்தின் படி, நமது கனவுகளால் நமது எதிர்காலத்தை கணிக்க முடியும்.
நீங்கள் உங்கள் கனவில் எப்போதாவது உங்கள் முன்னோர்களை கண்டுள்ளீர்களா? அப்படி கண்டால், அதை புறக்கணிக்காதீர்கள். ஏனெனில் இம்மாதிரியான கனவுகள் நாம் எதையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று நமது முன்னோர்கள் விரும்புகிறார்கள் அல்லது சில சூழ்நிலைகளை நமக்கு தெரியப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம். எனவே முன்னோர்கள் கனவில் வந்தால், அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒருவரது கனவில் முன்னோர்களைக் கண்டால் அது எதை உணர்த்துகிறது என்பதைக் காண்போம்.

பித்ரு பட்சம் 2022
இந்து மதத்தில் பித்ரு பட்சத்திற்கு தனி முக்கியத்துவம் உண்டு. பஞ்சாங்கத்தின் படி, பித்ரு பட்சம் ஆவணி மாத பௌர்ணமியில் இருந்து தொடங்குகிறது. இது புராட்டாசி அமாவாசையில் முடிவடைகிறது. இந்த ஆண்டு பித்ரு பட்ச 2022 செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கி, 2022 செப்டம்பர் 25 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த செப்டம்பர் 25 ஆம் தேதி தான் மஹாளய அமாவாசை. இந்த பித்ரு பட்ச காலத்தில் நம் முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக கூறப்படுகிறது. இந்த பித்ரு பட்ச காலத்தில் முன்னோர்கள் கனவில் வந்தால் அதை அலட்சியப்படுத்தாமல், அதன் அர்த்தம் என்னவென்பதை தெரிந்து கொள்ள முயலுங்கள்.

கனவு #1
உங்கள் கனவில் உங்களை நோக்கி உங்கள் முன்னோர்கள் கைகளை நீட்டி பேசுவதைக் கண்டால், அது நீங்கள் சிரமப்படுவதைக் கண்டு அவர்கள் வருத்தப்படுவதையும், அதற்காக ஏதாவது செய்ய விரும்புவதையும் உணர்த்துகிறது.

கனவு #2
உங்கள் முன்னோர்கள் உங்களிடம் ஏதாவது கேட்பது போன்று கனவு வந்தால், நீங்கள் பிராமணருக்கோ அல்லது ஏழை மக்களுக்கோ உணவை வழங்க வேண்டும். ஒருவேளை ஏழை மக்கள் எதை கேட்டாலும் கொடுப்பதன் மூலம் அவர்கள் திருப்திபபடுவார்கள்.

கனவு #3
உங்கள் கனவில் தலைக்கு அருகே உங்கள் முன்னோர்கள் நிற்பதைக் கண்டால், உங்கள் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் விரைவில் முடிவுக்கு வரும் என்று அர்த்தம். ஆனால் உங்கள் முன்னோர்கள் கால்களுக்கு அருகில் நிற்பதைக் கண்டால், நீங்கள் ஒரு தொந்தரவான சூழ்நிலையை சந்திப்பீர்கள் அல்லது ஏற்கனவே ஒரு மோசமான நிலையில் இருந்தால், அது மிகவும் சிக்கலானதாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.

கனவு #4
கனவில் உங்கள் முன்னோர்கள் உங்கள் தலையை தடவுவதைக் கண்டால், அவர்கள் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் மற்றும் அவர்கள் உங்களுக்கு ஆசீர்வாதத்தை வழங்குகிறார்கள் என்று அர்த்தம். அவர்களின் ஆசியால் உங்களின் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

கனவு #5
உங்கள் கனவில் உங்களின் மூதாதையர் சில நொடிகளில் வந்து மறைந்துவிட்டால், நீங்கள் சில பிரச்சனைகளில் சிக்கவிருப்பதைக் குறிக்கிறது. எனவே அதை எதிர்த்துப் போராட உங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அது அறிவுறுத்துகிறது.

கனவு #6
கனவில் முன்னோர்கள் உங்களுடன் நடப்பதைக் கண்டால் அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் உங்களுடன் இருக்கப் போகிறார்கள் என்று அர்த்தம். மேலும், விரைவில் உங்கள் புகழ் உயரும்.

கனவு #7
உங்கள் கனவில் முன்னோர்கள் கோபமாக இருப்பதைக் கண்டால், உங்கள் மூதாதையர் சொத்துகளுக்காக சில தகராறுகள் இருப்பதை அது குறிக்கிறது. மேலும் சொத்து, நிலம் அல்லது வீட்டில் சில தோஷங்கள் இருப்பதையும் இது உணர்த்துகிறது.