Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
சூரிய கிரகணத்தன்று மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தின் போது சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி நிகழ்கிறது. அதுவும் இந்த சூரிய கிரகணம் மேஷ ராசியில் நிகழ்கிறது. கிரகணம் ஒரு வானியல் நிகழ்வாக இருந்தாலும், ஜோதிடத்தில் இது மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. சூரிய கிரகணம் அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. அதில் சில ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும், சில ராசிக்காரர்களுக்கு பாதகமாகவும் இருக்கும். முக்கியமாக ஆண்டின் முதல் சூரிய கிரகணம் சனி அமாவாசை அன்று வருகிறது. இந்நாளில் சனிச்சரி அமாவாசை யோகம் உருவாகிறது. இந்த முதல் சூரிய கிரகணத்தின் போது சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மேஷ ராசியில் நிகழ்கிறது. எனவே இது மேஷ ராசியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் இக்காலத்தில் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். எதிரிகள் அதிக ஆதிக்கம் செலுத்தலாம். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். இல்லாவிட்டால் காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. முடிந்தால் சூரிய கிரகணத்தின் போது பயணம் செய்வதைத் தவிர்த்திடுங்கள்.

கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன். சூரிய கிரகணத்தின் போது, சந்திரன் ராகுவுடன் மேஷ ராசியில் இருப்பார். இதனால் இக்காலத்தில் இந்த ராக்காரர்களுக்கு அதிக மன உளைச்சல் ஏற்படும். திடீரென்று மனதில் ஒருவித பயம் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் ஆதிக்கம் செலுத்தும். இக்கால கட்டத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். பொறுமையாக இருங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த சூரிய கிரகணத்தின் போது கௌரவ இழப்பை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் பேச்சில் நிதானத்தைக் கடைபிடியுங்கள். சர்ச்சைகளில் இருந்து விலகி இருப்பது நன்மை பயக்கும். எதிரிகளால் பெரும் பிரச்சனையை சந்திக்கலாம். மேலும் செலவுகள் அதிகமாக இருக்கும்.

சூரிய கிரகணத்தின் போது தீய விளைவுகளை தவிர்க்கும் வழிகள்:
சூரிய கிரகணத்தின் போது மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று ராசிக்காரர்களும் காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் மோசமான விளைவுகளைத் தவிர்க்கலாம். அதுமட்டுமின்றி, கிரகணத்தின் போது உங்களின் இஷ்ட தெய்வத்தை வணங்குவது நல்லது. அதோடு சூரிய கிரகணத்தின் போது உங்கள் சிந்தனையை நேர்மறையாக வைத்து தானம் செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications
