Latest Updates
-
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா?
இந்த ராசிக்காரங்களை கல்யாணம் பண்ணிக்குறவங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி.. ஏன்னா அவ்ளோ சூப்பரா பாத்துப்பாங்க!
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிக்காரர்கள் மிகவும் நல்ல ஒழுக்கமுள்ளவர்களாக இருப்பர். இத்தகையவர்கள் அனைத்து துறைகளிலும் வல்லுநர்களாக கருதப்படுகிறார்கள்.
ஒவ்வொருவருமே தனக்கு வரும் வாழ்க்கைத் துணை நல்ல ஒழுக்கமுள்ளவராகவும், அன்பானவராகவும், அதிர்ஷ்டசாலியாகவும் இருக்க வேண்டுமென விரும்புவோம். ஜோதிடத்தில் 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசியின் தன்மையும் வேறுபட்டது. அதனால் தான் சில ராசியைச் சேர்ந்தவர்கள் கடின உழைப்பாளிகளாகவும், சிலர் சோம்பேறிகளாகவும், இன்னும் சிலர் மிகவும் அன்பானவர்களாகவும் இருக்கிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிக்காரர்கள் மிகவும் நல்ல ஒழுக்கமுள்ளவர்களாக இருப்பர். இத்தகையவர்கள் அனைத்து துறைகளிலும் வல்லுநர்களாக கருதப்படுகிறார்கள்.

இப்போது நாம் நல்லொழுக்கமுள்ளவர்களாகவும், நல்ல வாழ்க்கைத் துணையாகவும் விளங்கும் 4 ராசிக்காரர்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். இந்த ராசிக்காரர்களை திருமணம் செய்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஏனெனில் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையின் மீது அதிக அன்பு கொண்டிருப்பார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ஜோதிடத்தின் படி, ரிஷப ராசிக்காரர்கள் நல்லொழுக்கமிக்கவர்கள். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை நன்கு கவனித்துக் கொள்வார்கள். மேலும் இந்த ராசிக்காரர்களுக்கு மற்றவர்களை எப்படி சந்தோஷமாக வைத்துக் கொள்வது என்பது தெரியும். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் நம்பகமானவர்கள் மற்றும் நேர்மையானவர்கள். அதோடு நல்ல நண்பர்களாகவும் விளங்குகிறார்கள்.

சிம்மம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை அதிகம் நேசிப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் அனைத்திலும் நிபுணத்துவம் பெற்றவர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு உறவுகளை சிறப்பாக பேணுவது எப்படி என்பது நன்கு தெரியும். இவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை நன்கு கவனித்துக் கொள்வதோடு, ஒவ்வொரு வேலையிலும் அவர்களுக்கு உதவியாக இருப்பார்கள். சிம்ம ராசிக்காரர்கள் இயற்கையாகவே கடின உழைப்பாளிகள். இவர்களின் கடின உழைப்பினால், ஒவ்வொரு வேலையிலும் வெற்றி பெறுவார்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை சந்தோஷமாக வைத்துக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல தயங்கமாட்டார்கள். கடக ராசிக்காரர்கள் நல்லொழுக்கமுள்ளவர்கள். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் எதையும் சிறப்பாக செய்யக்கூடியவர். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள்.

மீனம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, மீன ராசிக்காரர்கள் அனைத்து விஷயங்களிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக கருதப்படுகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத்துணைக்காக எதைம் செய்ய தயாராக இருப்பார்கள். எப்போதுமே உதவுவதற்கு இந்த ராசிக்காரர்கள் தயாராக இருப்பார்கள். ஒவ்வொரு சூழ்நிலையிலும் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைக்கு உறுதுணையாக இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications