Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
இரவு நேரத்துல பிறந்தவங்ககிட்ட இந்த அபூர்வ குணங்கள் இருக்குமாம் தெரியுமா?
பகல் நேரத்தில் பிறந்தவர்கள் பிரகாசமானவர்களாகவும் மற்றவர்களுக்கு பிடித்தவர்களாகவும் இருப்பார்கள். அதேபோல இரவில் பிறந்தவர்கள் இதற்கு எதிர்மறையாக இருப்பார்கள்.
ஒரு நாளின் ஒவ்வொரு நேரத்திற்கும் ஒரு தனி அடையாளமும், தன்மையும் இருக்கிறது. ஒரு பொழுதின் நேரமானது அந்த தருணத்தில் மனிதர்களின் குணத்தின் மீதும், செயல்பாடுகள் மீதும் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். இதுபோன்றுதான் அவரவர் பிறக்கும் நேரமும் அவர்களின் ஆளுமை மீது தனிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.

பகல் நேரத்தில் பிறந்தவர்கள் பிரகாசமானவர்களாகவும் மற்றவர்களுக்கு பிடித்தவர்களாகவும் இருப்பார்கள். அதேபோல இரவில் பிறந்தவர்கள் இதற்கு எதிர்மறையாக இருப்பார்கள். இதன் மீதான நம்பிக்கை என்பது மக்களுக்கு நிறையவே உள்ளது. ஒருவர் பிறக்கும் நேரம் அவர்களின் அதிர்ஷ்டத்தை எப்படி நிர்ணயிக்கும் என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒருவர் பிறக்கும் நேரம் அவர்களின் ஆளுமையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இரவு நேரம்
இரவுகள் பொதுவாக இருள் சூழ்ந்ததாகவும், தனிமையானதாகவும் இருக்கலாம். ஆனால் இரவு இனிமையானதாகவும், அமைதியானதாகவும், ஆறுதல் அளிக்கக் கூடியதாகவும் இருக்கும். பெரும்பாலும் நீங்கள் இரவு நேரத்தில் வெளியே செல்ல மாட்டிர்கள், இதனால்தான் இரவு நேரத்தில் பிறந்தவர்கள் பொறுமையானவர்களாகவும், புரிந்து கொள்பவர்களாகவும் அறியப்படுகிறார்கள்.

சிக்கலைத் தீர்ப்பவர்கள்
வாழ்க்கையில் சில முக்கிய ஆன்மா தேடல்களைச் செய்ய இரவு நேரம் சிறந்த நேரம் என்பது ஒரு அறிவியல் உண்மை. என்ன செய்வது, எப்படி செய்வது என்று நீங்கள் குழப்பமடைந்துவிட்டால், உங்கள் நகர்வைத் திட்டமிட சூரியன் மறையும் வரை நீங்கள் காத்திருக்கிறீர்கள். எனவே இரவில் பிறந்தவர்கள் நல்ல சிக்கல் தீர்க்கும் நபர்களாகவும் அறியப்படுகிறார்கள்.

இரவில் பிறந்தவர்கள் ஏன் புத்திசாலிகள்?
நீங்கள் இரவு நேரத்தில் பிறந்தவர்களாகவோ அல்லது உலகம் முழுவதும் தூங்கும்போது நீங்கள் விழித்திருப்பவராக இருந்தாலோ நீங்கள் இரவு ஆந்தை என்று அழைக்கப்படுவீர்கள். பொதுவாக இரவு நேரத்தில் பிறந்தவர்கள் பகல் நேரத்தில் பிறந்தவர்களை விட புத்திசாலிகளாக இருப்பார்கள் என்று கூறுவார்கள். அதற்கான காரணங்களும் அறிவியலில் கூறப்பட்டுள்ளது.

இரவு நேர வலிமை
பகல் நேரத்தில் பிறந்தவர்கள் லார்க்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். பரிசோதனைகளின் படி, இரவு ஆந்தைகள் பகல் நேரத்தில் பிறந்தவர்களை விட உடல்ரீதியாக அதிக உடல்வலிமையைக் கொண்டவர்களாக இருப்பார்கள். பகல் நேரத்தில் பிறந்தவர்கள் இவர்களை போலவே பகலில் ஆற்றலைக் காட்டுவார்கள், ஆனால் இரவு நேரத்தில் இவர்களின் ஆற்றல் இரவு ஆந்தைகளுக்கு இணையாக இருக்காது. இது பகலில் பிறந்தவர்களை விட இவர்களை வலிமையானவர்களாக மாற்றுகிறது.

நிதானமானவர்கள்
பகல் பொழுதில் பிறந்தவர்கள் பெரும்பாலும் மனஅழுத்த கார்டிஸோலின் அளவை அதிகமாக கொண்டிருக்கின்றனர். இது நாள் நகர நகர மேலும் அதிகரிக்கிறது. ஆனால் இரவு நேரத்தில் பிறந்தவர்கள் இந்த ஹார்மோன் அளவைக் குறைவாக கொண்டுள்ளனர். இதனால் இவர்கள் அனைத்திலும் நிதானமாக இருக்கிறார்கள்.

பொதுவான அறிவு
மாட்ரிட் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், லார்க்ஸ் அதிக மதிப்பெண்களைப் பெற்று, சிறந்த ஊதியம் பெறும் வேலைகளில் இருக்கக்கூடும், இரவு ஆந்தைகள் பொது நுண்ணறிவு மற்றும் அதிகளவு சமயோசித புத்தி உள்ளவர்களாக இருப்பார்கள்.

குறைவான தூக்கம்
லார்க்ஸை சேர்ந்தவர்களுக்கு தினமும் குறைந்தது 8 மணி முதல் 9 மணி நேர தூக்கம் அத்தியாவசியமானதாகும். ஆனால் இரவு ஆந்தைகளுக்கு அவ்வளவு தூக்கம் தேவையில்லை. 5 முதல் 6 மணி நேர தூக்கத்திலேயே இவர்கள் தங்களின் வேலைகளை திறம்பட நிர்வகிக்க முடியும். இவர்களால் பகல் நேரத்தில் கூட நிம்மதியாக தூங்க முடியும், ஆனால் லார்க்ஸால் சூரிய ஒளி இருக்கும்போது தூங்கமுடியாது.

விழிப்பு
இரவு ஆந்தைகள் தங்கள் லர்க் சகாக்களை விட குறைவான தூக்கத்தைப் பெற்றாலும், அவை அவர்களை விட எச்சரிக்கையாக இருப்பார்கள். ஆய்வின்படி, லார்க்ஸ் அவர்களின் இரவு ஆந்தைகளை விட குறைவான கவனத்தை கொண்டுள்ளார்கள். சிறிய விஷயங்களையும் துல்லியமாக கவனிக்கும் ஆற்றல் கொண்டவர்கள் இவர்கள்.

உயர் நுண்ணறிவு
லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இரவு ஆந்தைகளாக இருப்பவர்கள் தங்கள் லார்க் நண்பர்களை விட மிக அதிகமான நுண்ணறிவைக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறது. இவர்கள் அதிக புத்தகம் வாசிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இல்லை என்றாலும் அறிவில் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

குறைகள்
இவர்களிடம் இருக்கும் குறைகளில் முக்கியமானது மோசமான உணவுகளை சாப்பிடுவது, புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற தவறான பழக்கங்களை வளர்த்துக் கொள்ளுதல் போன்றதாகும். ஏனென்றால், அவர்களின் மனம் பெரும்பாலும் விழித்திருப்பதால், அது "சலித்த" பயன்முறையில் சென்று தன்னை ஆக்கிரமித்துக்கொள்ள எதையும் எல்லாவற்றையும் செய்கிறது.

பொறாமை குணம்
இரவு ஆந்தைகள் பாசாங்கு செய்பவர்களாகவும், பகட்டான வாழ்க்கையை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். தனக்கு சொந்தமானது தனக்கு மட்டுமே உரித்தானதாக இருக்க வேண்டும் என்று இவர்கள் நினைப்பார்கள், அது பொருளாக இருந்தாலும் சரி, நபராக இருந்தாலும் சரி. இதனால் இவர்கள் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.



Click it and Unblock the Notifications











