Latest Updates
-
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
காரைக்குடி செட்டிநாடு சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் மிளகு புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
எந்த நோய்க்கு எந்த ஜூஸ் குடிப்பது நல்லது? - விளக்கும் டாக்டர்.பிள்ளை! -
நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2027 வரை சகல நன்மைகளையும், ராஜயோகத்தையும் அடையப்போகும் ஒரே ராசி எது தெரியுமா? -
சனி மங்கள யோகம்: இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
சரவணபவன் ஸ்டைல் வெள்ளை குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 03 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
சாணக்கிய நீதி படி இந்த 4 குணம் உள்ள பெண் அவரது கணவரின் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றுவாராம்
Chanakya Niti: சாணக்கியர் இந்திய வரலாற்றின் மிகச்சிறந்த பொருளாதார நிபுணராகவும், தலைசிறந்த ஞானிகளில் ஒருவராகவும் விளங்கினார். சாணக்கியர் தனது ஞானத்தையும், அனுபவங்களையும் தன்னுடைய சாணக்கிய நீதி நூலில் தொகுத்தார். சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகள் இந்த நவீன காலத்திலும் கூட ஒரு ஒழுக்கமான மற்றும் பயனுள்ள வாழ்க்கையை வாழ்வது எப்படி என்பது குறித்த நுண்ணறிவுள்ள ஆலோசனைகளை வழங்குகின்றன.

சுமார் இரண்டரை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மனிதர்களின் வாழ்க்கை முறைக்கான நெறிமுறைகளை தொகுத்துள்ளார். அவர் தனது நூல்களில் அவர் தேசம், சமூகம், வெளியுறவுக் கொள்கை மற்றும் ராணுவ உத்திகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இக்கருத்துகள் 'சாணக்கிய நீதி' என்று அழைக்கப்படுகின்றன. சாணக்கியரின் ஆழமான கருத்துக்கள், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் இன்றும் முழுமையாகப் பொருத்தமானவையாகத் திகழ்கின்றன. திருமணத்திற்குப் பிறகு எந்தவொரு வீட்டையும் சொர்க்கமாக மாற்றக்கூடிய, சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்களின் நான்கு பண்புகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கணவரின் சாதனைகளைப் பார்த்து பெருமை கொள்வது
ஒரு பெண் தன் கணவரின் பணிகள் மற்றும் சாதனைகளைக் கண்டு பெருமை கொள்வதும், அதேசமயம் அவரது வேலையில் ஏதேனும் தவறுகளோ அல்லது குறைகளோ தென்பட்டால் அவற்றை ஒரு தோழியைப் போல அவரிடம் எடுத்துரைத்து, அவற்றைச் சரிசெய்து அவர்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற அவரை ஊக்குவிப்பதும் மனைவியிடம் இருக்க வேண்டிய ஒரு சிறந்த பண்பாகும். அத்தகைய பெண்ணே உண்மையான நற்பண்புகள் கொண்ட மனைவி என்று சாணக்கியர் கூறுகிறார். திருமணத்திற்குப் பிறகு தான் நுழையும் இல்லத்தை இத்தகைய பெண் ஒரு சொர்க்கமாக மாற்றுகிவார். தவறான பாதையில் செல்லும் ஒருவரைக் கூட நல்வழிக்குக் கொண்டு வந்து, குடும்பத்தில் அமைதியையும் மகிழ்ச்சியையும் நிலைநாட்ட அவரால் முடியும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
இன்ப துன்பங்களில் துணையாக இருப்பது
ஒவ்வொருவரின் வாழ்க்கையும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது, நிச்சயம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்திருக்கும். பொதுவாக நல்ல காலங்களில் அனைவரும் உடன் இருப்பார்கள், ஆனால் கடினமான காலங்களில் நெருக்கமானவர்கள் கூட விலகிச் சென்றுவிடுவார்கள். அத்தகைய இக்கட்டான சூழலில் உங்களுக்கு உறுதுணையாக நிற்கும் ஒரு பெண் கிடைத்துவிட்டால், வாழ்க்கையின் துன்பங்கள் விரைவில் மறைந்துவிடும். ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, அத்தகைய குணநலன்களைக் கொண்ட பெண் இருக்கும் வீட்டில் பிரச்சினைகள் ஒருபோதும் நீண்ட காலம் நீடிக்காது என்று சாணக்கியர் கூறுகிறார். அப்படிப்பட்ட பெண் மருமகளாக செல்லும் குடும்பம் புண்ணியம் வாய்ந்ததாகும்.
தோற்றத்தை விட குணநலன்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது
ஆச்சார்ய சாணக்கியரின் கருத்துப்படி, தனது கணவரின் தோற்றத்தை விட அவரது குணநலன்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஒரு பெண், உண்மையான மற்றும் அர்ப்பணிப்புள்ள வாழ்க்கைத்துணையாகத் இருப்பார். அத்தகைய பெண், வயது முதிர்ந்த நிலையிலும் தன் துணையின் மீது கொண்ட அன்பைத் தொடர்ந்து நிலைநிறுத்துவார். ஒருவேளை தன் துணை செல்வம், அழகிய தோற்றம் போன்றவற்றை இழந்தாலும், அவர் அவரை விட்டு விலகாமல், அவரைத் தொடர்ந்து நேசித்து தங்கள் கணவரை முன்னேறிச் செல்ல ஊக்குவிபபார்.
வாழ்க்கையில் இலட்சியம் உள்ள பெண்
தேவையற்ற ஆடம்பரத்திலும், பகட்டிலும் நேரத்தை வீணடிக்காமல், வாழ்க்கையில் ஒரு தெளிவான குறிக்கோளைக் கொண்ட பெண்ணே ஒரு சிறந்த வாழ்க்கைத்துணையாகத் திகழ்வார் என்று சாணக்கியர் கூறுகிறார். அத்தகைய பெண் தன்னுடைய முயற்சியால் வெற்றியடைவதோடு, தனது கணவரின் அதிர்ஷ்டத்தையும் பிரகாசிக்கச் செய்கிறார். ஒருவருக்கு அத்தகைய மனைவி கிடைத்தால், அவரது இல்லம் சொர்க்கமாக மாறும் என்று சாணக்கிய நீதி கூறுகிறது.



Click it and Unblock the Notifications
