Latest Updates
-
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ஆபத்தானவங்க... கோவம் வந்தா எதையும் செய்வாங்களாம்...
கோபம் மிகவும் ஆபத்தானது. ஏனெனில் கட்டுப்படுத்த முடியாத அளவு கோபப்படுபவர்களுக்கு, தாங்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியாது. இப்படி கோப்படும் ராசிக்காரர்களிடம் சற்று உஷாராக இருக்க வேண்டும்.
உலகில் பிறக்கும் ஒவ்வொருவருக்குமே வித்தியாசமான குணங்கள் இருக்கும். ஒருவரின் குணங்கள் அவர்களின் பிறந்த ராசி மற்றும் ஜாதகத்தைப் பொறுத்தது. பலர் மிகவும் அதிகமாக கோபப்படுவார்கள். அதே வேளையில், பலர் தங்களுக்குள்ளேயே கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். பலருக்கு கோபம் கட்டுப்படுத்த முடியாத அளவில் வரும். இத்தகைய சூழ்நிலையில் அதிகப்படியான கோபம் காரணமாக எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

ஜோதிடத்தில் இதுப்போன்ற சில ராசிக்காரர்களுக்கு மோசமாக கோபம் வரும். இப்படி கோபப்படும் ராசிக்காரர்கள் சற்றும் சிந்திக்காமல் எந்த செயலையும் செய்வார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். கோபம் மிகவும் ஆபத்தானது. ஏனெனில் கட்டுப்படுத்த முடியாத அளவு கோபப்படுபவர்களுக்கு, தாங்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியாது. இப்படி கோப்படும் ராசிக்காரர்களிடம் சற்று உஷாராக இருக்க வேண்டும். இப்போது அந்த ஆபத்தான கோபக்கார ராசிக்காரர்களைக் காண்போம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் தேங்கி இருக்கும் நீரைப் போன்றவர்கள். இவர்களின் வெளித்தோற்றம் அமைதியானவர்கள் போன்று இருக்கும். ஆனால் அவர்களுக்குள் மறைந்திருக்கும் உணர்ச்சிகள் மிகவும் ஆபத்தானவை. வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அவர்களின் மனதிற்குள் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இதன் காரணமாகவே இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்கள் மனதில் என்ன நடக்கிறது, எந்த புயல் இப்போது நிலை கொண்டுள்ளது என்பதை யாராலும் கண்டறிய முடியாது. ஆனால் இவர்கள் மற்றவர்களின் முன்னிலையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போல் நடந்து கொள்வார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் ஆபத்தான ராசிகளின் பட்டியலில் இருக்கிறார்கள். இந்த ராசிக்காரர்களைப் பற்றிய சிறப்பான விஷயம் என்றால், தங்களுக்கு ஒருவர் செய்த எதையும் அவர்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். அவர்கள் அனைத்து விஷயங்களையுமே நினைவில் வைத்திருப்பார்கள். அதிலும் இவர்களுக்கு ஒருவர் தீங்கு செய்தால், அவர்களைப் பழிவாங்குவது குறித்து தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். இருப்பினும், இவர்களிடம் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த ராசிக்காரர்களுக்கு நன்மை செய்தால், அதற்கு பதிலாக இந்த ராசிக்காரர்கள் இருமடங்கு நன்மை செய்ய முயற்சி செய்வார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு கெட்ட விஷயங்களை செய்தால், அதை அவ்வளவு எளிதில் மறக்கமாட்டார்கள். எனவே விருச்சிக ராசிக்காரர்களிடம் சற்று கவனமாக இருங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் நல்ல குணம் கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள். இந்த ராசிக்காரர்களுடன் நல்ல உறவை கொண்டிருப்பது நல்லது. இல்லாவிட்டால், இவர்களை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருக்கும். ஏனெனில் இவர்களது பழக்கவழக்கங்கள் இவர்களை மிகவும் ஆபத்தானவர்களாக்குகின்றன. துலாம் ராசிக்காரர்கள் எப்போதும் புதுமையான விஷயங்களை செய்து மகிழக்கூடியவர்கள். இவர்களைச் சுற்றியிருப்பவர்கள் இவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமென எதிர்பார்ப்பார்கள். ஆனால் இது நடக்காத போது, இந்த ராசிக்காரர்களுக்கு கட்டுப்படுத்த முடியாத கோபம் வரும். இந்த கோபத்தில் என்ன செய்வதென்று புரியாமல் மோசமாக நடந்து கொள்வார்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் உன்னதமான காதலர்களாக கருதப்படுகிறார்கள். இவர்கள் வெளிப்படையாக பேசக்கூடியவர்கள் மற்றும் திறந்த மனதுடையவர்கள். காதல் விஷயத்தில் இந்த ராசிக்காரர்களை விட சிறந்தவர் வேறு யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்டவர்களை ஒருவர் ஏமாற்றும் போது, அது அவர்களுக்கு கட்டுக்கு அடங்காத கோபத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஏமாற்றினால் கோபம் வருவது சாதாரணம் தான். ஆனால் இந்த ராசிக்காரர்களை ஏமாற்றினால், அவர்களின் கோபத்தால் மோசமான விளைவை சந்திக்கக்கூடும். இந்த காரணத்தினாலேயே இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஆபத்தானவர்களாக கருதப்படுகிறார்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் மிகவும் நல்லவர்களாக கூறப்படுகிறது. ஆனால் நடத்தை அடிப்படையில், இந்த ராசிக்காரர்களை விட பெரிய பொய் சொல்பவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது. அதேப் போல் கோபமும் கட்டுப்படுத்த முடியாத அளவில் வரும். மேலும் இவர்களுக்கு ஒரு விஷயத்தை எப்படி மறைப்பது மற்றும் எப்படி மற்றவர்களுக்கு வெளிக்காட்டுவது என்பது நன்கு தெரியும். இத்தகையவர்கள் தான் அனைத்து விஷயங்களிலும் மிகவும் சிறந்தவர்களாக இருப்பர் என்று கூறப்படுகிறது. இந்த ராசிக்காரர்களிடம் உள்ள சிறப்பு என்னவென்றால், இவர்கள் ஒருவரின் முகத்தைப் பார்த்து, அவர்களின் இதயத்தை அறிவார்கள். ஆனால் இந்த ராசிக்காரர்களின் முகத்தை வைத்து மனதில் இருப்பதை யாராலும் அறிய முடியாது. எனவே இந்த ராசிக்காரர்கள் ஆபத்தானவர்களாக கருதப்படுகிறார்கள்.



Click it and Unblock the Notifications
