Latest Updates
-
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
அனுமனின் முழு அருளும் கிடைக்கணுமா? அப்ப அனுமன் ஜெயந்தி அன்று உங்க ராசிக்கேற்ற பொருளை கொடுத்து வணங்குங்க...
ஜோதிட சாஸ்திரத்தில், ஒருவர் ராசிக்கேற்ப பொருட்களை அனுமனுக்கு படைத்தால், வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என கூறப்பட்டுள்ளது. இப்போது இதுக்குறித்து விரிவாக காண்போம்.
சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் தான் அனுமன் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தியானது 2022 ஏப்ரல் 16 ஆம் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அனுமனை வழிபடுவதன் மூலம் சிறப்பான பலனைப் பெறலாம். அனுமனின் முழு அருளும் கிடைக்க அனுமன் ஜெயந்தி சிறந்த நாளாக கருதப்படுகிறது. இந்தியா முழுவதும் அனுமன் ஜெயந்தி மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுவதுண்டு. ஸ்ரீராம பக்தரான அனுமன் அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பவராக கருதப்படுகிறார். அனுமனின் நாமத்தை அனுமன் ஜெயந்தி அன்று மட்டுமின்றி, தினமும் கூறுவதன் மூலம் அனைத்து தொல்லைகளும் விலகுவதாக நம்பப்படுகிறது.

அனுமன் பிறந்த நாளன்று அனுமனை மனதார வணங்கி வந்தால், வாழ்வில் உள்ள தடைகள், கவலைகள், வேதனைகள் நீங்கி, அனுமனின் அருளால் விரும்பிய பலன்கள் கிடைக்கும். ஜோதிட சாஸ்திரத்தில், ஒருவர் ராசிக்கேற்ப பொருட்களை அனுமனுக்கு படைத்தால், வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என கூறப்பட்டுள்ளது. இப்போது இதுக்குறித்து விரிவாக காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள், அனுமன் ஜெயந்தி நாளன்று அனுமனுக்கு உளுத்தால் தயாரிக்கப்பட்ட லட்டுகளை செய்து படைத்து வணங்குவது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! நீங்கள் அனுமன் ஜெயந்தி நாளில் துளசி விதைகளை அனுமனுக்கு படைத்து அர்ச்சனை செய்து வழிபடுங்கள். இதனால் அனுமனின் அருளைப் பெறலாம்.

மிதுனம்
மிதுன ராசியைச் சேர்ந்தவர்கள், அனுமன் பிறந்த நாளான அனுமன் ஜெயந்தி அன்று நல்ல மணம் கொண்ட துளசி தைலத்தை அனுமனுக்கு படைத்து வணங்குவது நல்லது.

கடகம்
கடக ராசிக்காரர்கள் அனுமன் பிறந்த நாளன்று நெய் சேர்த்து உளுத்து புட்டு செய்து அனுமனுக்கு படைத்து வணங்குவதன் மூலம், வாழ்வில் உள்ள தொல்லைகள் நீங்கி, அனுமனின் ஆசியைப் பெறலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! நீங்கள் அனுமனின் பரிபூர்ண அருளைப பெற வேண்டுமானால், அனுமன் ஜெயந்தி அன்று சுத்தமான நெய்யால் தயாரிக்கப்பட்ட ஜிலேபியை அனுமனுக்கு படைத்து வணங்க வேண்டும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள், அனுமன் பிறந்த அனுமன் ஜெயந்தி நாளில் அனுமனுக்கு வெண்ணெயைப் படைத்து வணங்கினால், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் மற்றும் அனுமனின் அருளும் கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களே, நீங்கள் அனுமனுக்கு மோத்திச்சூர் லட்டு வாங்கி படைத்து வணங்கினால், உங்களுக்கு அனுமனின் ஆசி கிடைத்து, வாழ்வில் உள்ள இன்னல்கள் தீரும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள், அனுமனுக்கு உளுந்து லட்டுகளை அனுமன் ஜெயந்தி நாளில் படைத்து வணங்க வேண்டும். இதனால் நற்பலன்கள் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! அனுமன் ஜெயந்தி நாளில் நீங்கள் அனுமனுக்கு துளசி விதைகளை மோத்திச்சூர் லட்டுகளின் மீது தூவி படைக்க வேண்டும். இதன் மூலம், அனுமன் மகிழ்ந்து அவரின் ஆசியை முழுமையாக வழங்குவார்.

மகரம்
மகர ராசியைச் சேர்ந்தவர்கள், அனுமன் பிறந்த அனுமன் ஜெயந்தி நாளன்று மோத்திச்சூர் லட்டுகளை வழங்க வேண்டும். இதனால் வாழ்வில் நீங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள், அனுமன் ஜெயந்தி நாளில் அனுமனுக்கு செந்தூரம் பூசுவது நல்லது. இதனால் அவர் மகிழ்ந்து பரிபூர்ண அருளை வழங்குவார்.

மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று அனுமன் ஜெயந்தி என்பதால், அனுமனுக்கு கிராம்புகளைக் கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். இதனால் பிரச்சனைகள், வறுமைகள், கவலைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து, அனுமனின் அருளால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
