Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
2022 ஆம் ஆண்டு குறித்து நோஸ்ட்ராடாமஸ் என்னவெல்லாம் கணித்துள்ளார் தெரியுமா?
நோஸ்ட்ராடாமஸ் 500 ஆண்டுகளுக்கு முன்பே 2022 இல் என்ன நடக்கும் என கணித்துள்ளார். அதன்படி, 2022 ஆம் ஆண்டு குறித்து நோஸ்ட்ராடாமஸ் என்ன கணித்துள்ளார் என்பதை இப்போது காண்போம்.
பாபா வாங்காவைப் போன்றே, எதிர்காலத்தைக் கணித்து கூறுவதில் வல்லவர் பிரெஞ்சு ஜோதிடர் நோஸ்ட்ராடாமஸ். இவர் ஏற்கனவே பல எதிர்கால நிகர்வுகளை கணித்துக் கூறியுள்ளார். இன்றும் நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் மக்களை ஆச்சரியப்படுத்துகின்றன. அவற்றில் சில உண்மையாக நடந்தும் விட்டன. இதனால் தான் நோஸ்ட்ராடாமஸ் கணிப்புகளை மக்கள் அறிந்து கொள்ள அதிக ஆவலைக் காட்டுகின்றனர்.

நோஸ்ட்ராடாமஸ் 1503 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்து, 1566 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி இறந்தார். இவர் அடால்ஃப் ஹிட்லரின் ஆட்சி குறித்து, இரண்டாம் உலகப் போர், 9/11 தாக்குதல்கள் மற்றும் பிரெஞ்சு புரட்சி உட்பட பல கணிப்புகளை கணித்துள்ளார். இவரது கணிப்புகளில் 85 சதவீதம் உண்மையாகிவிட்டது. நோஸ்ட்ராடாமஸ் 500 ஆண்டுகளுக்கு முன்பே 2022 இல் என்ன நடக்கும் என கணித்துள்ளார். அதன்படி, 2022 ஆம் ஆண்டு குறித்து நோஸ்ட்ராடாமஸ் என்ன கணித்துள்ளார் என்பதை இப்போது காண்போம்.

அணுகுண்டு வெடிப்பு
நோஸ்ட்ராடாமஸ் 2022 ஆம் ஆண்டு குறித்த தனது குறிப்பில், இந்த ஆண்டு அணுகுண்டு வெடிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அணுகுண்டு வெடிப்பு பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், அணுகுண்டு வெடிப்பால் பூமியின் நிலையும் மாறலாம் என கணித்து கூறியுள்ளார்.

வானில் இருந்து பாறை விழும்
2022 ஆம் ஆண்டில் பூமிக்கு சிறிய கிரகம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நோஸ்ட்ராடாமஸ் கணித்துக் கூறியுள்ளார். அதுவும் வானத்தில் இருந்து ஒரு பெரிய பாறை கடலில் விழும். இதனால் பயங்கரமான சுனாமி போன்ற அலைகள் எழும்பி பூமியின் அனைத்து பக்கங்களிலும் தண்ணீர் வந்து நாசப்படுத்தும். மொத்தத்தில், கடல் நீர் பூமியின் பெரும் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணித்துள்ளார்.

பணவீக்கம்
500 ஆண்டுகளுக்கு முன்பு நோஸ்ட்ராடாமஸ் தனது கணிப்புகளில் 2022 ஆம் ஆண்டில் பணவீக்கம் ஏற்படும் என்பதைக் கணித்துள்ளார். இந்த ஆண்டில் பணவீக்கம் கட்டுப்பாட்டை மீறும். அதுவும் அமெரிக்க டாலரின் விலையில் பெரும் சரிவு ஏற்படும் என்பதை கணித்துள்ளார். மேலும் இந்த ஆண்டில் மக்கள் தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயினில் அதிக பணத்தை முதலீடு செய்வார்கள் என்றும் கணித்து கூறியுள்ளார்.

ரோபோக்கள் மனிதர்களை அழிக்கும்
2022 ஆம் ஆண்டில் உலகில் பெரும் அழிவுக்குப் பின் அமைதி வரும் என்று நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். ஆனால் இந்த அமைதி ஏற்படுவதற்கு முன் உலகம் முழுவதும் 3 நாட்கள், அதாவது 72 மணிநேரம் இருளில் மூழ்கியிருக்கும். அதோடு இந்த ஆண்டில் ரோபோக்கள் மனிதர்களை கட்டுப்படுத்தும். மேலும் ரோபோக்கள் மனித இனத்தையே அழித்துவிடும்.

பிரான்சில் பேரழிவு ஏற்படும்
நோஸ்ட்ராடாமஸின் கணிப்பின் படி, 2022 ஆம் ஆண்டு பிரான்ஸை ஒரு பெரிய புயல் தாக்கும். இது கடுமையான சேதத்தை ஏற்படுத்தி பிரான்ஸை நாசமாக்கும். இது தவிர உலகின் பல பகுதிகளில் தீ மற்றும் வறட்சி போன்ற நிலைமைகளை சந்திக்க நேரிடும்.

உலகில் பசி அதிகரிக்கும்
நோஸ்ட்ராடாமஸின் கணிப்பின் படி, ஆயுத மோதல்களால் உலகில் பசி பட்டினி அதிகரிக்கும். இது பெரும் அழிவிற்கு வழிவகுக்கும். நோஸ்ட்ராடாமஸின் இந்த கணிப்புகள் எந்தளவுக்கு உண்மை என்பதை காலம் தான் சொல்லும்.



Click it and Unblock the Notifications